இந்திய மகளிர் கிரிக்கெட் அணியானது அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியுடன் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் T20 சர்வதேச போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றில் ஆடவிருக்கின்றது.
சங்கக்காரவின் வரலாற்று சாதனையை நெருங்கும் கோஹ்லி
இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் தனது…
இந்த சுற்றுப் பயணத்தில் இடம்பெறவுள்ள இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகளுக்குமான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அறிமுக வீராங்கனைகளான தயாளன் ஹேமலதா மற்றும் அருந்ததி ரெட்டி ஆகியோருக்கு முதற்தடவையாக இந்திய மகளிர் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
இவர்களில் சகலதுறை சுழல் மங்கையான ஹேமலதா, இந்தியாவின் அண்மைய உள்ளூர் T20 தொடரில் துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் சிறப்பான பதிவுகளை காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஹேமலதா இலங்கையில் நடைபெறவுள்ள ஒரு நாள் போட்டிகள் மற்றும் T20 போட்டிகள் ஆகிய இரண்டுக்குமான இந்திய மகளிர் அணியில் இடம்பிடித்திருக்கின்றார். எனினும், அருந்ததி ரெட்டிக்கு T20 அணியில் மாத்திரமே விளையாட சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
வலதுகை வேகப்பந்து வீச்சாளரான ரெட்டி, வியாழக்கிழமை (23) T20 சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்த இந்திய மகளிர் அணியின் சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளரான ஜூலான் கோஸ்வாமியின் இடத்தினை நடைபெறவிருக்கும் இலங்கை சுற்றுப் பயணத்தில் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலான் கோஸ்வாமி T20 போட்டிகளில் ஓய்வினை அறிவித்த போதிலும், இலங்கை மகளிர் அணியுடன் இடம்பெறவுள்ள ஒரு நாள் போட்டிகளில் இந்திய தரப்பின் வேகப்பந்து வீச்சுத்துறையினை முன்னெடுக்கும் தலைமை பொறுப்பினை தனக்காக வைத்திருக்கின்றார். இதேவேளை, இலங்கையுடனான T20 போட்டிகளில் இந்திய மகளிர் அணி சிக்கா பாண்டியின் வேகத்தின் மூலம் இன்னும் பலம் பெறுகிறது.
இலங்கை தொடரில் நடைபெறவுள்ள இரண்டு வகைப் தொடர்களிலும் விக்கெட் காப்பாளராக செயற்படும் பொறுப்பு தானியா பாட்டியாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னர் இந்திய மகளிர் அணியின் விக்கெட் காப்பாளராக செயற்பட்ட சுஷ்மா வர்மாவுக்கு இலங்கை தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதேநேரம், சகலதுறை வேகப்பந்து வீராங்கனையான பூஜா வட்டேஸ்கருக்கு காயம் காரணமாக இலங்கை தொடரில் விளையாடும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கின்றது. எனினும், காயத்தினால் பாதிக்கப்பட்ட மான்ஷி ஜோஷி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இந்திய மகளிர் அணிக்கு திரும்புகின்றார்.
இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஒரு நாள் தொடர், ஐ.சி.சி இன் மகளிர் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக அமைகின்றது.
மகளிர் T20 உலக சம்பியன்ஷிப் தொடரின் அட்டவணை வெளியீடு
இந்த ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள…
ஒரு நாள் தொடரை அடுத்து இரண்டு மகளிர் அணிகளும் ஐந்து T20 போட்டிகளில் ஆடுகின்றன. T20 போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை இடம்பெறும்.
இந்திய மகளிர் அணிகள்
ஒரு நாள் குழாம்
மிதாலி ராஜ் (அணித்தலைவி), ஹர்மன்ப்ரீட் கெளர் (உப அணித்தலைவி), ஸ்மிரிதி மந்தனா, பூனம் ராவட், தீப்தி சர்மா, தயாளன் ஹேமலதா, ஜெமிமா ரொட்ரிகோஸ், வேதா கிரிஷ்ணமூர்த்தி, தானியா பாட்டியா (விக்கெட் காப்பாளர்), எக்தா பிஸ்ட், பூனம் யாதவ், ராஜேஸ்வரி கயாக்வாட், ஜூலான் கோஸ்வாமி, மான்ஷி ஜோஷி, சிக்கா பாண்டி
T20 குழாம்
ஹர்மன்ப்ரீட் கெளர் (அணித்தலைவி), ஸ்மிரிதி மந்தனா (உப அணித்தலைவி), மிதாலி ராஜ், வேதா கிரிஷ்ணமூர்த்தி, ஜெமிமா ரொட்ரிகோஸ், தயாளன் ஹேமலதா, தீப்தி சர்மா, அனுஜா பாட்டீல், தானியா பாடியா (விக்கெட் காப்பாளர்), பூனம் யாதவ், எக்தா பிஸ்ட், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, சிக்கா பாண்டி, மான்ஷி ஜோஷி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<