Home Tamil ரோஹித்தின் சதத்தோடு பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ரோஹித்தின் சதத்தோடு பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

237
Image Courtesy - ICC

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 22 ஆவது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணியினை இந்தியா டக்வத் லூயிஸ் முறையில் 89 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

மன்செஸ்டர் நகரில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (16) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹ்மட் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய அணிக்கு வழங்கினார்.

மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களால் இலங்கைக்கு தோல்வி

இந்த உலகக் கிண்ணத் தொடரில் இறுதியாக இந்திய அணி நியூசிலாந்துடன் விளையாடவிருந்த போட்டி மழையினால் கைவிடப்பட்டது. இந்நிலையில், முன்னதாக இந்த உலகக் கிண்ணத் தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்த இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான இப்போட்டியில் ஒரு மாற்றத்தினை மேற்கொண்டிருந்தது.

அதன்படி, காயமுற்ற ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவானுக்கு பதிலாக சகலதுறை வீரரான விஜய் சங்கர் இந்திய அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார்.

இந்திய அணி 

ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி (அணித்தலைவர்), லோக்கேஷ் ராகுல், விஜய் சங்கர், மஹேந்திர சிங் டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவ்னேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரிட் பும்ரா

மறுமுனையில் தமது கடைசி உலகக் கிண்ண மோதலில் அவுஸ்திரேலியாவுடன் தோல்வியினை தழுவியிருந்த பாகிஸ்தான் அணி இந்திய அணியுடனான இந்த மோதலில் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. அந்த வகையில் பாகிஸ்தான் அணியில் துடுப்பாட்ட வீரர் ஆசிப் அலி, பந்துவீச்சாளர் சஹீன் அப்ரிடி ஆகியோருக்கு பதிலாக பந்துவீச்சு சகலதுறை வீரர்களான இமாத் வஸீம், சதாப் கான் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர்.

பாகிஸ்தான் அணி

இமாம்-உல்-ஹக், பக்கார் சமான், பாபர் அசாம், சர்பராஸ் அஹ்மட், மொஹமட் ஹபீஸ், சொஹைப் மாலிக், இமாத் வஸீம், சதாப் கான், ஹஸன் அலி, வஹாப் ரியாஸ், மொஹமட் அமீர்

பின்னர் இதுவரை இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டிகள் எதிலும் பாகிஸ்தான் அணியுடன் தோல்வியை தழுவியராத இந்திய அணி தமது துடுப்பாட்டத்தை  ஆரம்பம் செய்தது.

இந்திய அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த ரோஹித் சர்மா மற்றும் லோக்கேஷ் ராகுல் ஆகிய இருவரும் அரைச்சதங்கள் பெற்று முதல் விக்கெட்டுக்காக 136 ஓட்டங்களை பகிர்ந்தனர். பின்னர் இந்திய அணியின் முதல் விக்கெட்டாக லோக்கேஷ் ராகுல் வஹாப் ரியாஸின் வேகத்திற்கு இரையாகினார். ஆட்டமிழக்கும் போது லோக்கேஷ் ராகுல், ஒருநாள் போட்டிகளில் தான் பதிவு செய்த 3 ஆவது அரைச்சதத்துடன் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 78 பந்துகளில் 57 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானுடனான வெற்றிக்கு அம்லா மற்றும் தாஹிரைப் புகழும் டு ப்ளெசிஸ்

இதனை தொடர்ந்து புதிய துடுப்பாட்ட வீரராக வந்த இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியுடன் இணைந்த ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் தனது 24 ஆவது சதத்தை அதிரடியான முறையில் பதிவு செய்து இந்திய அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக 98 ஓட்டங்களை பகிர உதவினார். பின்னர் இந்திய அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஓய்வறை நடந்த ரோஹித் சர்மா 113 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 14 பெளண்டரிகள் அடங்கலாக 140 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா இப்போட்டியின் மூலம் இந்த உலகக் கிண்ணத் தொடரில் தனது இரண்டாவது சதத்தினை பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மாவை அடுத்து விராட் கோஹ்லி பெற்றுக் கொடுத்த அதிரடி அரைச்சதத்துடன் இந்திய அணி முன்னேறியது. தொடர்ந்து போட்டியில் மழையின் இடையூறு ஏற்பட்ட போதிலும் ஓவர்கள் குறைக்கப்படாமல் போட்டி தொடர்ந்தது.

இறுதியில், இப்போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 336 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பாக விராட் கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 52 ஆவது அரைச்சதத்தோடு 65 பந்துகளில் 7 பெளண்டரிகள் அடங்கலாக 77 ஓட்டங்களை பெற்றிருந்தார். விராட் கோஹ்லி இப்போட்டியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் 11,000 ஓட்டங்களை பூர்த்தி செய்ததோடு, குறித்த அடைவு மட்டத்தை பெற, குறைந்த இன்னிங்சுகளை (222) எடுத்த வீரராகவும் சாதனை செய்திருந்தார். மறுமுனையில் ஹர்திக் பாண்டியா 19 பந்துகளில் 26 ஓட்டங்கள் பெற்று சிறிய அதிரடி மூலம் இந்திய அணிக்கு அதன் ஓட்டங்கள் உயர பங்களிப்புச் செய்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பாக மொஹமட் அமீர் 3 விக்கெட்டுக்களை கைப்பற்ற, ஹஸன் அலி மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் பெற்றிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 337 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணிக்கு, அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான இமாம்-உல்-ஹக் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார். எனினும், பாகிஸ்தானின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பக்கார் சமான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் பொறுப்பான முறையில் துடுப்பாடினர்.

இவர்கள் இருவரின் துடுப்பாட்டம் மூலமும் பாகிஸ்தான் அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக 104 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டது. இந்த இணைப்பாட்டத்திற்குள் பக்கார் சமான் ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற 11 ஆவது அரைச்சதத்தினை பதிவு செய்தார்.

ஒருநாள் அரங்கில் 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்து கோஹ்லி சாதனை

தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் இரண்டாம் விக்கெட்டாக குல்தீப் யாதவின் பந்துவீச்சில் பாபர் அசாம் 48 ஓட்டங்களுன் வெளியேறினார். பாபர் அசாமின் விக்கெட்டை அடுத்து பக்கார் சமானும் குல்தீப் யாதவ்வின் விக்கெட்டாக மாறினார். பக்கார் சமான் ஆட்டமிழக்கும் போது 75 பந்துகளில் 7 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 62 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பாகிஸ்தான் அணி தமது துடுப்பாட்ட வீரர்களை அடுத்தடுத்து இழந்து தடுமாற்றம் காண்பிக்க தொடங்கியது. இந்நிலையில் போட்டியில் மீண்டும் மழை குறுக்கிட்டது.

மழையின் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு டக்வத் லூயிஸ் முறையில் போட்டியில் வெற்றி பெற 40 ஓவர்களில் 302 ஓட்டங்கள் பெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியினை தழுவியது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரர்களான சொஹைப் மாலிக், மொஹமட் ஹபீஸ் மற்றும் சர்பராஸ் அஹ்மட் ஆகிய அனைவரும் பிரகாசிக்கத் தவற இமாத் வஸீம் 46 ஓட்டங்கள் பெற்றும், சதாப் கான் 20 ஓட்டங்கள் பெற்றும் ஆட்டமிழக்காமல் இருந்து ஆறுதல் தந்திருந்தனர்.

இதேநேரம் இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் ரோஹித் சர்மா தெரிவானார்.

இலங்கை சரியான திட்டத்துடன் விளையாடவில்லை என்கிறார் திமுத்

இப்போட்டியில் கிடைத்த வெற்றியோடு இந்த உலகக் கிண்ணத் தொடரில் மூன்று வெற்றிகளுடன் முன்னேறும் இந்திய அணி, தமது அடுத்த மோதலில் ஆப்கானிஸ்தான் அணியினை எதிர்வரும் சனிக்கிழமை (22) சௌதஎம்ப்டனில் வைத்து எதிர்கொள்கின்றது. இதேநேரம் பாகிஸ்தான் அணி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (23) தென்னாபிரிக்க அணியுடன் லண்டனில் தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் பங்கெடுக்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

ஸ்கோர் விபரம்

Result


India
336/5 (50)

Pakistan
212/6 (40)

Batsmen R B 4s 6s SR
Lokesh Rahul c Babar Azam b Wahab Riaz 57 78 3 2 73.08
Rohit Sharma c Wahab Riaz b Hasan Ali 140 113 14 3 123.89
Virat Kohli c Sarfaraz Ahmed b Mohammad Amir 77 65 7 0 118.46
Hardik Pandya c Babar Azam b Mohammad Amir 26 19 2 1 136.84
MS Dhoni c Sarfaraz Ahmed b Mohammad Amir 1 2 0 0 50.00
Vijay Shankar not out 15 15 1 0 100.00
Kedar Jadhav not out 9 8 1 0 112.50


Extras 11 (b 1 , lb 1 , nb 0, w 9, pen 0)
Total 336/5 (50 Overs, RR: 6.72)
Fall of Wickets 1-136 (23.5) Lokesh Rahul, 2-234 (38.2) Rohit Sharma, 3-285 (43.5) Hardik Pandya, 4-298 (45.1) MS Dhoni, 5-314 (4734) Virat Kohli,

Bowling O M R W Econ
Mohammad Amir 10 1 47 3 4.70
Abid Ali 9 0 84 1 9.33
Wahab Riaz 10 0 71 1 7.10
Imad Wasim 10 0 49 0 4.90
Shadab Khan 9 0 61 0 6.78
Shoaib Malik 1 0 11 0 11.00
Mohammad Hafeez 1 0 11 0 11.00


Batsmen R B 4s 6s SR
Imam-ul-Haq lbw b Vijay Shankar 7 18 1 0 38.89
Fakhar Zaman c Yuzvendra Chahal b Kuldeep Yadav 62 75 7 1 82.67
Babar Azam b Kuldeep Yadav 48 57 3 1 84.21
Mohammad Hafeez c Vijay Shankar b Hardik Pandya 9 7 0 1 128.57
Sarfaraz Ahmed b Vijay Shankar 12 30 0 0 40.00
Shoaib Malik b Hardik Pandya 0 1 0 0 0.00
Imad Wasim not out 46 39 6 0 117.95
Shadab Khan not out 20 14 1 0 142.86


Extras 8 (b 0 , lb 1 , nb 1, w 6, pen 0)
Total 212/6 (40 Overs, RR: 5.3)
Fall of Wickets 1-13 (4.5) Imam-ul-Haq, 2-117 (23.6) Babar Azam, 3-126 (25.2) Fakhar Zaman, 4-129 (26.5) Mohammad Hafeez, 5-129 (26.6) Shoaib Malik, 6-165 (34.1) Sarfaraz Ahmed,

Bowling O M R W Econ
Bhuvneshwar Kumar 2.4 0 8 0 3.33
Jasprit Bumrah 8 0 52 0 6.50
Vijay Shankar 5.2 0 22 2 4.23
Hardik Pandya 8 0 42 2 5.25
Kuldeep Yadav 9 1 32 2 3.56
Yuzvendra Chahal 7 0 53 0 7.57



முடிவு – இந்திய அணி 89 ஓட்டங்களால் (டக்வத் லூயிஸ் முறையில்) வெற்றி