*This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days from the date of upload.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மென்செஸ்டர் – ஓல்ட் ட்ரெபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தின் முதலாவது அரையிறுதிப் போட்டி மழை காரணமாக இன்றைய தினம் இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், குறித்த போட்டியானது நாளைய (10) தினம் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸுடன் தொடர்ச்சியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். இதன் அடிப்படையில் முதலில் துடுப்பாடக் களமிறங்கிய நியூசிலாந்து அணி தடுமாற்றத்துக்கும், சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் கேன் வில்லியம்சன் மற்றும் ரொஸ் டெய்லர் ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போது, போட்டியில் மழை குறுக்கிட்டது.
“குசல் மெண்டிஸ் திறமையான துடுப்பாட்ட வீரர்” – டி மெல்
உலகக் கிண்ணத்தில் விளையாடிய இலங்கை…
இந்த தொடர் முழுவதும் நியூசிலாந்து அணிக்கு ஏமாற்றத்தை வழங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்டின் கப்டில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணியின் முதல் விக்கெட் ஒரு ஓட்டத்துக்கு வீழ்ந்தது. இதன் பின்னர் நிதானமான இணைப்பாட்டமொன்றை அணித் தலைவர் கேன் வில்லியம்சனுடன் இணைந்து கட்டியெழுப்பிய ஹென்ரி நிக்கோல்ஸ் 28 ஓட்டங்களுடன் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.
எனினும், நியூசிலாந்து அணியின் அரையிறுதி பயணத்துக்கு முக்கிய காரணமாக இருந்த அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் அனுபவ துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லர் மீண்டும் ஒரு நிதானமானதும், வலுவானதுமான இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். ஓட்ட வேகம் குறைவாக இருந்த போதும், விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் இருவரும் துடுப்பெடுத்தாடினர்.
நிதான துடுப்பாட்டத்துக்கு ஏற்ப கேன் வில்லியம்சன் தனது 39 ஆவது ஒருநாள் அரைச்சதத்தை கடந்தார் ஆனால், ஓட்ட வேகத்தை அதிகரிக்க முற்பட்ட இவர் 67 ஓட்டங்களுடன் யுஷ்வேந்திர சஹாலின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜிம்மி நீஷம் மற்றும் கொலின் டி கிரெண்டோம் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னரும், அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய ரொஸ் டெய்லர் தனது 50 ஆவது ஒருநாள் அரைச்சதத்தை பெற்றுக்கொண்டார்.
இவ்வாறு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, போட்டியில் மழை குறுக்கிட்டது. போட்டியை மீண்டும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும், தொடர்ந்து மழை குறுக்கிட்டு வந்ததால் போட்டி இடைநிறுத்தப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
ஐ.சி.சி இன் கிரிக்கெட் உலகக் கிண்ண விதிமுறையின் படி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்காக மேலதிக நாள் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியானது நாளை மீண்டும் தொடங்கவுள்ளது. குறிப்பாக நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸில் 23 பந்துகள் எஞ்சியிருக்கும் நிலையில், நாளைய தினம் அந்த அணி தங்களுடைய இன்னிங்ஸை முழுமையாக நிறைவுசெய்ய வேண்டும்.
பின்னர், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கும் வெற்றி இலக்கினை இந்திய அணி பெறவேண்டும். ஐ.சி.சி விதிமுறைப்படி இந்தப் போட்டியில் மீண்டும் நாணய சுழற்சி இடம்பெறாது என்பதுடன், இன்றைய நாளின் தொடர்ச்சியாகவே நாளையும் போட்டி நடைபெறும். இதேவேளை, போட்டியில் நாளையும் மழை குறுக்கிடுமாயின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Martin Guptill | c Virat Kohli b Jasprit Bumrah | 1 | 14 | 0 | 0 | 7.14 |
Henry Nicholls | b Ravindra Jadedja | 28 | 51 | 2 | 0 | 54.90 |
Kane Williamson | c Ravindra Jadedja b Yuzvendra Chahal | 67 | 95 | 6 | 0 | 70.53 |
Ross Taylor | run out (Ravindra Jadedja) | 74 | 90 | 3 | 1 | 82.22 |
Jimmy Neesham | c Dinesh Karthik b Hardik Pandya | 12 | 18 | 1 | 0 | 66.67 |
Colin de Grandhomme | c MS Dhoni b Bhuvneshwar Kumar | 16 | 10 | 2 | 0 | 160.00 |
Tom Latham | c Ravindra Jadedja b Bhuvneshwar Kumar | 10 | 11 | 0 | 0 | 90.91 |
Mitchell Santner | not out | 9 | 6 | 1 | 0 | 150.00 |
Matt Henry | c Virat Kohli b Bhuvneshwar Kumar | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Trent Boult | not out | 3 | 3 | 0 | 0 | 100.00 |
Extras | 18 (b 0 , lb 5 , nb 0, w 13, pen 0) |
Total | 239/8 (50 Overs, RR: 4.78) |
Fall of Wickets | 1-1 (3.3) Martin Guptill, 2-69 (18.2) Henry Nicholls, 3-134 (35.2) Kane Williamson, 4-162 (40.6) Jimmy Neesham, 5-200 (44.4) Colin de Grandhomme, 6-225 (47.6) Ross Taylor, 7-225 (48.1) Tom Latham, 8-232 (48.6) Matt Henry, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Bhuvneshwar Kumar | 10 | 1 | 43 | 3 | 4.30 | |
Jasprit Bumrah | 10 | 1 | 39 | 1 | 3.90 | |
Hardik Pandya | 10 | 0 | 55 | 1 | 5.50 | |
Ravindra Jadedja | 10 | 0 | 34 | 1 | 3.40 | |
Yuzvendra Chahal | 10 | 0 | 63 | 1 | 6.30 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
KL Rahul | c Tom Latham b Matt Henry | 1 | 7 | 0 | 0 | 14.29 |
Rohit Sharma | c Tom Latham b Matt Henry | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Virat Kohli | lbw b Trent Boult | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Rishabh Pant | c Colin de Grandhomme b Mitchell Santner | 32 | 56 | 4 | 0 | 57.14 |
Dinesh Karthik | c Jimmy Neesham b Matt Henry | 6 | 25 | 1 | 0 | 24.00 |
Hardik Pandya | c Kane Williamson b Mitchell Santner | 32 | 62 | 0 | 0 | 51.61 |
MS Dhoni | run out (Martin Guptill) | 50 | 72 | 1 | 1 | 69.44 |
Ravindra Jadedja | c Kane Williamson b Trent Boult | 77 | 59 | 4 | 4 | 130.51 |
Bhuvneshwar Kumar | b Lockie Ferguson | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Yuzvendra Chahal | c Tom Latham b Jimmy Neesham | 5 | 5 | 1 | 0 | 100.00 |
Jasprit Bumrah | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 16 (b 0 , lb 3 , nb 0, w 13, pen 0) |
Total | 221/10 (49.3 Overs, RR: 4.46) |
Fall of Wickets | 1-4 (1.3) Rohit Sharma, 2-5 (2.4) Virat Kohli, 3-5 (3.1) KL Rahul, 4-24 (9.6) Dinesh Karthik, 5-71 (22.5) Rishabh Pant, 6-92 (30.3) Hardik Pandya, 7-208 (47.5) Ravindra Jadedja, 8-216 (48.3) MS Dhoni, 9-217 (48.6) Bhuvneshwar Kumar, 10-221 (49.3) Yuzvendra Chahal, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Trent Boult | 10 | 2 | 42 | 2 | 4.20 | |
Matt Henry | 10 | 1 | 37 | 3 | 3.70 | |
Lockie Ferguson | 10 | 0 | 43 | 1 | 4.30 | |
Colin de Grandhomme | 2 | 0 | 13 | 0 | 6.50 | |
Jimmy Neesham | 7.3 | 0 | 49 | 1 | 6.71 | |
Mitchell Santner | 10 | 2 | 34 | 2 | 3.40 |