கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 38ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணி பலம் மிக்க இந்திய அணியினை 31 ஓட்டங்களால் வீழ்த்தி தமது அரையிறுதி வாய்ப்பை அதிகரித்துள்ளது.
ஆப்கான், பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே கைகலப்பு – ஐ.சி.சி விசாரணை
லீட்ஸ் நகரில் நேற்று (29) நடைபெற்ற…
பர்மிங்கமில் நேற்று (30) ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தனது தரப்பிற்காக தெரிவு செய்திருந்தார்.
இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில், 7 போட்டிகளில் ஆடியிருக்கும் இங்கிலாந்து அணி 8 புள்ளிகளுடன் காணப்படுகின்றது. இந்நிலையில் தமது கடைசி உலகக் கிண்ண மோதலில் அவுஸ்திரேலியாவுடன் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, தமது அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள இந்திய அணியுடனான போட்டியில் இரு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.
அதன்படி, இங்கிலாந்து அணியில் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேசன் ரோய், ஜேம்ஸ் வின்ஸின் இடத்தினை எடுக்க லியம் ப்ளென்கட் மொயின் அலியினை பிரதியீடு செய்திருந்தார்.
ரஷித் கானை இலக்கு வைத்து விளையாடியதால் வெற்றி: இமாத் வசிம்
உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்து…
இங்கிலாந்து அணி
ஜேசன் ரோய், ஜொனி பெயர்ஸ்டோவ், ஜோ ரூட், இயன் மோர்கன் (அணித் தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், லியம் ப்ளென்கட், ஆதில் ரஷீட், ஜொப்ரா ஆர்ச்சர், மார்க் வூட்
மறுமுனையில் இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் இதுவரையில் தோல்விகள் எதனையும் சந்திக்காத இந்திய அணி, தமது உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் வண்ணம் கட்டாய மாற்றம் ஒன்றை மேற்கொண்டிருந்தது. அதன்படி, சிறு உபாதை ஒன்றை எதிர்கொண்ட விஜய் சங்கரின் இடத்தை ரிசாப் பாண்ட் எடுத்திருந்தார்.
இந்திய அணி
லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (அணித்தலைவர்), ரிசாப் பாண்ட், கேதர் ஜாதவ், மஹேந்திர சிங் டோனி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், மொஹமட் சமி, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரிட் பும்ரா
இதன் பின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக முதல் துடுப்பாட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ரோய், ஜொனி பெயர்ஸ்டோவ் ஜோடி அட்டகாசமான தொடக்கத்தை வழங்கியது. அந்தவகையில் இரண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் மூலமும் இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டுக்காக 160 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெறப்பட்டது.
தொடர்ந்து இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்து சென்ற ஜேசன் ரோய் அவரின் 16ஆவது அரைச் சதத்தோடு 7 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 57 பந்துகளில் 66 ஓட்டங்களை குவித்திருந்தார்.
பாகிஸ்தானை வீழ்த்தும் வாய்ப்பை தவறவிட்டது ஏமாற்றம் அளிக்கிறது -குல்படின்
பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு கடுமையாகப்…
இதேநேரம், ஜொனி பெயர்ஸ்டோவ் அவரின் 8ஆவது ஒருநாள் சதத்தோடு தனது தரப்பிற்கு வலுச்சேர்த்தார். இதனால், இங்கிலாந்து அணி நல்ல நிலை ஒன்றுக்கு சென்றது. பின்னர், இங்கிலாந்து அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஓய்வறை நடந்த பெயர்ஸ்டோவ் 109 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 10 பெளண்டரிகள் அடங்கலாக 111 ஓட்டங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இங்கிலாந்து அணி அடிக்கடி விக்கெட்டுகளை பறிகொடுத்த போதிலும் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தமது பொறுப்பான ஆட்டம் மூலம் தமது தரப்பிற்கு வலுச்சேர்த்தனர். இதனால், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 337 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் பென் ஸ்டோக்ஸ் இந்த உலகக் கிண்ணத் தொடரில் பெற்ற அவரின் தொடர்ச்சியான மூன்றாவது அரைச் சதத்தோடு, 54 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 79 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இது பென் ஸ்டோக்ஸின் 19ஆவது ஒருநாள் அரைச் சதமாகவும் அமைந்தது. அதேநேரம், ஜோ ரூட் 44 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் மொஹமட் சமி 69 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஒருநாள் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சினை பதிவு செய்திருந்தார்.
இதன் பின்னர் 50 ஓவர்களில் 338 ஓட்டங்களை போட்டியின் வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.
இந்திய அணியில் அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான லோக்கேஷ் ராகுல் ஓட்டம் எதனையும் பெறாமல் வெளியேறினார்.
எனினும், ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா மற்றும் அணித்தலைவர் விராட் கோலி ஆகியோர் தமது துடுப்பாட்டம் மூலம் இந்திய அணிக்கு பெறுமதி சேர்த்தனர். இதில், ரோஹித் சர்மா அவரின் 25ஆவது ஒருநாள் சதத்துடன் 15 பெளண்டரிகள் அடங்கலாக 109 ஓட்டங்கள் குவித்திருந்தார்.
அரையிறுதியை எதிர்பார்த்துள்ள இலங்கை அணிக்கு இறுதி வாய்ப்பு
உலகக் கிண்ணத் தொடரில் தங்களுடைய…
இதேநேரம், விராட் கோலி அவரின் 54ஆவது ஒருநாள் அரைச் சதத்துடன் 7 பெளண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களை பெற்றார்.
ரோஹித் சர்மா மற்றும் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்து இந்திய அணி போட்டியின் வெற்றி இலக்கினை அடைவதில் தடுமாறியது.
அந்த வகையில் இந்திய அணி 50 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 306 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் 31 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியது.
இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹர்திக் பாண்ட்யா 33 பந்துகளில் 45 ஓட்டங்களையும், மஹேந்திர சிங் டோனி ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 42 ஓட்டங்கள் பெற்றும் இந்திய அணிக்கு பங்காற்றினர்.
இதேநேரம், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் லியம் ப்ளன்கட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை ஊர்ஜிதம் செய்திருந்தனர்.
இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் இங்கிலாந்து அணி, மொத்தமாக 10 புள்ளிகள் பெற்று தமது உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்பாக ஆக்கியுள்ளது. மறுமுனையில் இந்திய அணி, இப்போட்டியின் மூலம் இந்த உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் தோல்வியினை தழுவியுள்ளது.
தமது அணியின் சிறந்த ஆட்டம் இன்னும் வெளிவரவில்லை – மிச்செல் ஸ்டார்க்
லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட்….
போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தெரிவாகினார்.
இங்கிலாந்து அணி இந்த உலகக் கிண்ணத் தொடரில் அடுத்ததாக நியூசிலாந்து அணியினை எதிர்வரும் புதன்கிழமை (03) டர்ஹமில் வைத்து எதிர்கொள்கின்றது. அது இங்கிலாந்து அணியின் கடைசி உலகக் கிண்ண லீக் போட்டியாகும்.
இதேநேரம், இந்திய அணி தமது அடுத்த உலகக் கிண்ணப் போட்டியில், பங்களாதேஷ் அணியினை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (2) இங்கிலாந்து மோதல் இடம்பெற்ற இதே பர்மிங்கம் மைதானத்தில் வைத்து எதிர்கொள்கின்றது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jason Roy | c & b | 66 | 57 | 7 | 2 | 115.79 |
Jonny Bairstow | c & b | 111 | 109 | 10 | 6 | 101.83 |
Joe Root | c & b | 44 | 54 | 2 | 0 | 81.48 |
Eoin Morgan | c & b | 1 | 9 | 0 | 0 | 11.11 |
Ben Stokes | c & b | 79 | 54 | 6 | 3 | 146.30 |
Jos Buttler | c & b | 20 | 8 | 1 | 2 | 250.00 |
Chris Woakes | c & b | 7 | 5 | 1 | 0 | 140.00 |
Liam Plunkett | not out | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Jofra Archer | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 8 (b 2 , lb 2 , nb 0, w 4, pen 0) |
Total | 337/7 (50 Overs, RR: 6.74) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mohammed Shami | 10 | 1 | 69 | 5 | 6.90 | |
Jasprit Bumrah | 10 | 1 | 44 | 1 | 4.40 | |
Yuzvendra Chahal | 10 | 0 | 88 | 0 | 8.80 | |
Hardik Pandya | 10 | 0 | 60 | 0 | 6.00 | |
Kuldeep Yadav | 10 | 0 | 72 | 1 | 7.20 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lokesh Rahul | c & b | 0 | 9 | 0 | 0 | 0.00 |
Rohit Sharma | c & b | 102 | 109 | 15 | 0 | 93.58 |
Virat Kohli | c & b | 66 | 76 | 7 | 0 | 86.84 |
Hardik Pandya | c & b | 45 | 33 | 4 | 0 | 136.36 |
MS Dhoni | c & b | 42 | 31 | 4 | 1 | 135.48 |
Kedar Jadhav | not out | 12 | 13 | 1 | 0 | 92.31 |
Rishabh Pant | not out | 32 | 29 | 4 | 0 | 110.34 |
Extras | 7 (b 0 , lb 1 , nb 0, w 6, pen 0) |
Total | 306/5 (50 Overs, RR: 6.12) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chris Woakes | 10 | 3 | 58 | 2 | 5.80 | |
Jofra Archer | 10 | 0 | 45 | 0 | 4.50 | |
Liam Plunkett | 10 | 0 | 55 | 3 | 5.50 | |
Mark Wood | 10 | 0 | 73 | 0 | 7.30 | |
Adil Rashid | 6 | 0 | 40 | 0 | 6.67 | |
Ben Stokes | 4 | 0 | 34 | 0 | 8.50 |