வரலாற்று சாதனையுடன் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி

148
©BCCI

கொல்கத்தாவில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியாபங்களாதேஷ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் கடந்த 22ஆம் திகதி ஆரம்பமாகியது.  

அணித்தலைவராக பொண்டிங்கின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான வரலாற்று ………..

பகலிரவு ஆட்டமாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடத்தப்படும் வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 106 ஓட்டங்களுக்கு சுருண்டது

இதில் வேகப் பந்துவீச்சாளர்களே 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இளஞ்சிவப்பு நிறப் பந்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமைக்கு ஷாந்த் சர்மா சொந்தக்காரரானார்.

இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸில் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை மயங்க் அகர்வால் 16, ரோஹித் ஷர்மா 21 ஓட்டங்களுடன் வெளியேறினர்

இதையடுத்து களமிறங்கிய புஜாராகோஹ்லி இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 55 ஓட்டங்கள் எடுத்த நிலையில் புஜாரா ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி அரைச்சதம் கடந்தார். இதேநேரம், டெஸ்ட் அணித் தலைவராக அதிவேகமாக 5,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்

இரண்டாம் நாளில் அரைச்சதம் அடித்த நிலையில் ரஹானே வெளியேறினார். இதையடுத்து கோஹ்லி ஓட்ட வேகத்தை தீவிரப்படுத்தினார். ஜடேஜா 12 ஓட்டங்களில் விக்கெட்டை பறிக்கொடுத்தார்

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோஹ்லி சதமடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோஹ்லியின் 27ஆவது சதம் இதுவாகும். பகலிரவு டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்

மேலும், சர்வதேச அரங்கில் அதிக சதங்களை விளாசிய வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார் கோஹ்லி. இவர் சர்வதேச அரங்கில் மூன்று வகையான போட்டிகளையும் சேர்த்து 70 சதங்களை விளாசியுள்ளார்அதேநேரத்தில் சர்வதேசப் போட்டிகளில் தலைவராக அதிக சதங்களை அடித்த ரிக்கி பொண்டிங்கின் சாதனையையும் கோஹ்லி சமன் செய்தார்

தொடர்ந்து விளையாடிய கோஹ்லி 136 ஓட்டங்களை எடுத்த நிலையில் பிடிகொடுத்து வெளியேறினார். இதன்பின் வந்த வீரர்கள் வேகமாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.  

இதன்படி, இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 347 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது

பின்னர், 241 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பங்களாதேஷ் அணி, இந்திய வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்தது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்களை எடுத்திருந்தது

இந்த நிலையில், 3 ஆம் நாள் ஆட்டம் நேற்று (24) ஆரம்பமாகியதும், சீரான இடைவெளியில் பங்களாதேஷ் அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில், 41.1 ஓவர்கள் தாக்குப் பிடித்த அந்த அணி 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.  

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினை தமது …………..

இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 5 விக்கெட்டுக்களையும், இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் சுழல் பந்துவீச்சாளர்கள் யாவரும் எந்த விக்கெட்டையும் வீழ்த்தவில்லை. இந்தியாவின் வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது இதுதான் முதல் முறையாகும்.

இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. அத்துடன், பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.

ஆட்டநாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் ஷாந்த் சர்மா பெற்றார்.

இந்திய அணி தொடர்ச்சியாக பெறும் 7ஆவது டெஸ்ட் வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தமாக உள்நாட்டில் தொடர்ச்சியாக 12 டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக …………

அத்துடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி கண்ட ஒரே அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டு டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி இரண்டு இன்னிங்சிலும் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், வரலாற்று சிறப்பு மிக்க பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக இளஞ்சிவப்பு நிறப் பந்தில் விளையாடிய இந்திய அணி அதில் இன்னிங்ஸ் வெற்றியும் பெற்று சாதித்துள்ளது.

இதன் மூலம் டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியில் இரு போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றி 120 புள்ளிகளை இந்திய அணி பெற்றது. ஒட்டுமொத்தமாக 420 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் இருக்கிறது.

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<