ஏன் இந்திய, ஆஸி. அணிகள் புதிய ஜேர்ஸிகளுடன் களமிறங்கும்?

945

இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள், T20i கிரிக்கெட் தொடர்களில் இரு அணிகளும் புதிய ஜேர்ஸியில் (ஆடை) களமிறங்க உள்ளன.

இதன்படி, இந்திய அணி வீரர்கள் aவழக்கமான நீல நிற ஆடைக்குப் பதிலாக, கடந்த 1990களில் இந்திய வீரர்கள் அணிந்த ஜேர்ஸியைப் போல அணிந்து களமிறங்கவுள்ளனர்.

>>ரோஹித் சர்மா இல்லாமல் ஆஸி புறப்பட்ட இந்திய அணி

அதேபோல, அவுஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களைப் பெருமைப்படுத்தும் வகையில் புதிய வண்ணத்தில், புதிய வடிமைப்புடனான ஜேர்ஸியை அணிந்து அவுஸ்திரேலிய வீரர்கள் விளையாட உள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 3 T20i தொடர், 3 ஒருநாள் தொடர், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.இதில் இந்திய அணி வீரர்கள் சிட்னி, புல்மான் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இரு அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. முதல் இரு போட்டிகள் சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய தொடருக்காக டுபாயிலிருந்து புறப்பட்ட இந்திய அணியினர் வியாாழக்கிழமை (12) சிட்னியை சென்றடைந்தனர். சிட்னி நகரில் புல்மான் ஹோட்டலில் தங்கியுள்ள இந்திய அணியினர் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்குப் பின் போட்டிக்குத் திரும்புவார்கள்.

>>Video – மஹேலவின் தலைமையில் சாதித்த மும்பை இந்தியன்ஸ் | Cricket Galatta Epi 45

இதுஇவ்வாறிருக்க, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 தொடரில் இந்திய அணி புதிய ஜேர்ஸியில் களமிறங்க உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் பிசிசிஐ நிர்வாகம், எம்.பி.எல் நிறுவனத்துடன் ரூ.120 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

அந்த நிறுவனம் வடிவமைத்துள்ள ஜேர்ஸி, கடந்த 1992ஆம் ஆண்டு இந்திய அணி முதல்தடவையாக அணிந்த ஜேர்ஸியை ஒத்த வடிவமைப்பில உருவாக்கப்பட்டுள்ளது.


வழக்கமாக நீல நிறத்தில் ஆடை அணிந்திருக்கும் இந்திய அணி, இந்த முறை கருநீல நிறத்தில் தோள் பட்டையில் சில வண்ணக் கோடுகளுடன் ஆடை வடிமைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அவுஸ்திரேலிய அணியும் உள்நாட்டு பூர்வகுடி மக்கள் கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பைப் கௌரவப்படுத்தும் விதத்தில் ஜேர்ஸி அணிந்து விளையாடுகின்றனர்.

வழக்கமாக ஒருநாள் தொடருக்கு மஞ்சள் நிற ஜேர்ஸியும், T20i தொடருக்குக் கரும்பச்சை ஜேர்ஸியும் அவுஸ்திரேலிய அணியினர் அணிந்து விளையாடுவார்கள்.


அவுஸ்திரேலியாவின் ஏ.எஸ்.ஐ.சி.எஸ் மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆன்ட்டி பியோனா கிளார்க், கார்ட்னி ஹேகன் ஆகிய இரு பெண்கள் இணைந்து இந்த ஜேர்ஸியை வடிவமைத்துள்ளனர்.

>>இந்தியாவுக்கு எதிரான ஆஸி டெஸ்ட் அணியில் ஐந்து புதுமுக வீரர்கள்

முதன்முதலில் அவுஸ்திரேலிய அணி கடந்த 1868ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது அவுஸ்திரேலிய அணியில் பூர்வகுடியைச் சேர்ந்த மஸ்க்குயிட்டோ கோஜன் எனும் வீரர் அணியில் இடம் பெற்றிருந்தார்.

இதில் மறைந்த அந்த வீரரின் நேரடி உறவினர்தான் இந்த ஜேர்ஸியை உருவாக்கிய ஆன்ட்டி பியோனா கிளார்க் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, அவுஸ்திரேலிய அணியின் கடந்தகால, நிகழ்கால, எதிர்காலப் பூர்வகுடிகளைப் பெருமைப்படுத்தும் விதத்தில் ஜேர்ஸி வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<