தோல்வியிலிருந்து மேற்கிந்திய அணியைக் காப்பாற்றினார் ரோஸ்டன் செஸ்

247

இந்தியா – மேற்கிந்திய தீவுகள்  கிரிக்கட் அணிகளுக்கு  இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதல் இன்னிங்ஸில் முறையே 196 ஓட்டங்களையும்  ( ப்ளாக்வூட் 62, சாமுவேல்ஸ 37, கமின்ஸ் 24*,

ரவி அஷ்வின் 52/5) இந்தியா அணி 500 ஓட்டங்களையும் (லோகேஷ் ராஹுல் 158, ரஹானே 108*, ஷா 47, புஜாரா 46, கோஹ்லி 44, செஸ் 121/5 ) பெற்றனர் .

பின்னர் 304 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் மேற்கிந்திய தீவுகள்  அணி போட்டியின் 4ஆவது நாளில் 2ஆவது இனிங்ஸை ஆரம்பித்தது. மழை குறுக்கிட்டதால்  மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்டுகளுக்கு 48 ஓட்டங்கள் எடுத்த நிலையில்  4ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பின் 5ஆம் நாள் ஆட்டம் நேற்று ஆரம்பித்தது. மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ஆரம்பம் முதல் தோல்வியைத் தவிர்க்கும் நோக்குடன் நிதானமாக ஆடினார்கள்.

பிளாக்வுட் அதிரடியாக ஆடி 63 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அவருக்குப் பின் ஜோடி சேர்ந்த ரோஸ்டன் சேஸ் மற்றும் ஷேன் டோவ்ரிச் ஆகிய இருவரும் விக்கட்டுகள் விழாமல் கவனமாக ஆடி ஓட்டங்களைக் குவித்தார்கள்.

இந்த ஜோடியின் இணைப்பாட்டத்தை மிஸ்ரா பிரித்தார். 70 ஓட்டங்களை எடுத்திருந்த போது ஷேன் டோவ்ரிச் ஆட்டமிழந்தார். அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 285 ஓட்டங்களை  எடுத்து இருந்தது.

பின் ரோஸ்டன் சேஸ்ஸோடு இணைந்த தலைவர் ஜேசன் ஹோல்டர் அருமையாக விளையாடி 5ஆம் நாள் முடியும் வரை விக்கட்டுகளை பழிகொடுக்காமல் விளையாடினார். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 388 ஓட்டங்களை எடுத்து இருந்தது. இதில் மிக மிக அற்புதமாக ஆடிய ரோஸ்டன் சேஸ் ஆட்டம் இழக்காமல் 137 ஓட்டங்களையும் அவரோடு ஒத்துழைப்பு வழங்கிய அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் ஆட்டம் இழக்காமல் 64 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணியின் பந்துவீச்சில் முஹமத் ஷமி மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் கைப்பற்றினர். இறுதியில் போட்டி வெற்றி தோல்வி இன்று முடிவுற்றது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக பந்துவீச்சு துடுப்பாட்டம் இரண்டிலும் கலக்கிய ரோஸ்டன் சேஸ் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் – 196/10
ப்ளாக்வூட் 62, சாமுவேல்ஸ 37, கமின்ஸ் 24*
ரவி அஷ்வின் 52/5, மொஹமத் ஷமி 23/2, இஷாந்த் சர்மா 53/2

இந்தியா – 500/9d
லோகேஷ் ராஹுல் 158, ரஹானே 108*, ஷா 47, புஜாரா 46, கோஹ்லி 44
செஸ் 121/5

மேற்கிந்திய தீவுகள் – 388/6
ரோஸ்டன் சேஸ் 137*, ஜேசன் ஹோல்டர் 64*, டோவ்ரிச் 74, ப்ளாக்வூட் 63
மொஹமத் ஷமி 82/2, அமித் மிஸ்ரா 90/2

போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவு