மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி

399
ASSOCIATED PRESS

இந்திய கிரிக்கெட் அணி, இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டெஸ்ட், ஒருநாள், T20 என மூவகைப் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் ஆடவுள்ளது.  

ஆஸியுடன் விட்ட தவறை பாகிஸ்தான் இந்தியாவுடன் செய்யாது

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் …….

இந்த சுற்றுப் பயணம், அமெரிக்காவில் இடம்பெறும் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருடன் ஆரம்பமாகின்றது. அதன்படி, இந்த T20 தொடரின் முதல் போட்டியும், இரண்டாவது போட்டியும் ப்ளோரிடா மாநிலத்தில் ஓகஸ்ட் மாதம் 03ஆம் மற்றும் 04ஆம் திகதிகளில் இடம்பெறவிருக்கின்றன.

இதன் பின்னர், தொடரின் மூன்றாவதும் கடைசியுமான போட்டியில் விளையாட இரண்டு அணிகளும் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகும். அந்தவகையில் இந்த T20 தொடரின் மூன்றாவது போட்டி ஒகஸ்ட் மாதம் 06ஆம் திகதி கயானா நகரில் இடம்பெறவுள்ளது.  

T20 தொடரின் பின்னர் இரண்டு அணிகளும் மேற்கிந்திய தீவுகளில் இடம்பெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவிருக்கின்றன.

இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி, கயானா நகரில் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறுகின்றது. குறித்த தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளும் ட்ரினிடாட் நகரில் ஓகஸ்ட் மாதம் 11ஆம், 14ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

T20, ஒருநாள் தொடர்களின் நிறைவுக்கு பின்னர் இரண்டு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றன. இந்த டெஸ்ட் தொடர், ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

வோர்னரின் சதத்தோடு பாகிஸ்தானை வீழ்த்திய அவுஸ்திரேலியா

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின்……..

டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை என்டிகுவா நகரில் நடைபெறவுள்ளதோடு, இரண்டாவது போட்டி ஜமெய்க்கா நகரில் ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது.  

இந்த பருவகாலத்தின் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இரண்டு வருட காலப்பகுதிக்குள் (ஜூலை 15,2019 – ஏப்ரல் 30,2021) டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதல் ஒன்பது இடங்களுக்குள் இருக்கும் அணிகள் பொது ஒப்பந்தத்தின் படி தெரிவு செய்யப்பட்ட தமது எதிரணியுடன் ஆறு டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும்.

தொடர்ந்து இந்த டெஸ்ட் தொடர்களுக்கு வழங்கப்படும் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களையும் பெறும் இரண்டு அணிகள் 2021ஆம் ஆண்டின் ஜூன் மாதம் இடம்பெறும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கெடுக்கவிருக்கின்றன.

சுற்றுப் பயண அட்டவணை

  • ஓகஸ்ட் 3 – முதல் T20 போட்டி – ப்ளோரிடா
  • ஓகஸ்ட் 4 – இரண்டாவது T20 போட்டி – ப்ளோரிடா
  • ஓகஸ்ட் 6 – மூன்றாவது T20 போட்டி – கயானா
  • ஓகஸ்ட் 8 – முதாலவது ஒருநாள் போட்டி – கயானா
  • ஓகஸ்ட் 11 – இரண்டாவது ஒருநாள் போட்டி – ட்ரினிடாட்
  • ஓகஸ்ட் 14 – மூன்றாவது ஒருநாள் போட்டி – ட்ரினிடாட்
  • ஓகஸ்ட் 22-26 – முதல் டெஸ்ட் போட்டி – என்டிகுவா
  • ஓகஸ்ட் 30-செப்டம்பர் 3 – இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஜமெய்க்கா

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<