இலங்கை – இந்தியா தொடருக்கான போட்டி அட்டவணையில் மாற்றம்!

India Tour of Sri Lanka 2024

27
India Tour of Sri Lanka 2024

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகளுக்கான அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி T20I போட்டிகள் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், ஒருநாள் போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

>>இலங்கை – இந்தியா தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

T20I தொடர் இம்மாதம் 26ம் திகதி ஆரம்பமாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் புதிய அட்டவணையின் படி   முதல் T20I போட்டி 27ம் திகதியும், இரண்டாவது T20I போட்டி 28ம் திகதியும் மூன்றாவது T20I போட்டி 30ம் திகதியும் நடைபெறவுள்ளன.

அதனைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் முறையே 04ம் மற்றும் 7ம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணி எதிர்வரும் 22ம் திகதி இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

  • முதல் T20I போட்டி – ஜூலை 27 – பல்லேகலை
  • 2வது T20I போட்டி – ஜூலை 28 – பல்லேகலை
  • 3வது T20I போட்டி – ஜூலை 30 – பல்லேகலை
  • முதல் ஒருநாள் போட்டி – ஆகஸ்ட் 2 – ஆர்.பிரேமதாஸ
  • 2வது ஒருநாள் போட்டி – ஆகஸ்ட் 4 – ஆர்.பிரேமதாஸ
  • 3வது ஒருநாள் போட்டி – ஆகஸ்ட் 7 – ஆர்.பிரேமதாஸ

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<