சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகளுக்கான அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இம்மாதம் 22ம் திகதி இலங்கை வரவுள்ள இந்திய கிரிக்கெட் அணி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடவுள்ளது.
>>புற்றுநோய் விழிப்புணர்வுக்காக தம்புள்ள அணியுடன் கைகோர்க்கும் கோல் மார்வல்ஸ்<<
அதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான T20I போட்டிகள் இம்மாதம் 26, 27 மற்றும் 29ம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், ஒருநாள் போட்டிகள் ஆகஸ்ட் 01ம், 04ம் மற்றும் 7ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
போட்டி அட்டவணை
- முதல் T20I போட்டி – ஜூலை 26 – பல்லேகலை
- 2வது T20I போட்டி – ஜூலை 27 – பல்லேகலை
- 3வது T20I போட்டி – ஜூலை 29 – பல்லேகலை
- முதல் ஒருநாள் போட்டி – ஆகஸ்ட் 1 – ஆர்.பிரேமதாஸ
- 2வது ஒருநாள் போட்டி – ஆகஸ்ட் 4 – ஆர்.பிரேமதாஸ
- 3வது ஒருநாள் போட்டி – ஆகஸ்ட் 7 – ஆர்.பிரேமதாஸ
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<