Home Tamil மத்திய வரிசையில் தொடர் தடுமாற்றம், சுப்பர் ஓவரில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி

மத்திய வரிசையில் தொடர் தடுமாற்றம், சுப்பர் ஓவரில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி

India Tour of Sri Lanka 2024

145
India tour of Sri Lanka 2024 - 3rd T20I

சுற்றுலா இலங்கை – இந்திய அணிகள் இடையிலான T20I தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி சமநிலை அடைந்ததோடு இந்தியா சுப்பர் ஓவரில் வெற்றி பெற்று தொடரில் இலங்கையினை 3-0 என வைட்வொஷ் செய்திருக்கின்றது.

>> இலங்கையின் ஒருநாள் அணிக்கும் புதிய தலைவர்

கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் முன்னதாக இலங்கை – இந்திய அணிகள் மோதிய T20I தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் சரித் அசலன்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய வீரர்களுக்கு வழங்கினார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணியானது ஆரம்பத்தில் இருந்து தடுமாறியதோடு இலங்கை பந்துவீச்சாளர்கள் மூலம் ஒரு கட்டத்தில் 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும் இந்திய அணியின் ஆறாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த சுப்மான் கில் – ரியான் பராக் ஜோடி 54 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

இந்த இணைப்பாட்டத்தின் மூலம் சற்று சரிவில் இருந்து இந்தியா மீண்ட போதிலும் வனிந்து ஹஸரங்க தனது பந்துவீச்சு மூலம் நெருக்கடி உருவாக்கினார். எனினும் பின்வரிசையில் வந்த வோஷிங்டன் சுந்தர் சற்று பொறுப்புடன் ஆட இந்திய அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்கள் பெற்றது.

>> அடுத்த ஆசியக் கிண்ணத் தொடர்களுக்கான இடங்கள் அறிவிப்பு

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சுப்மான் கில் 39 ஓட்டங்களையும் ரியான் பராக் 26 ஓட்டங்களையும், வோஷிங்டன் சுந்தர் 25 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இலங்கை பந்துவீச்சு சார்பில் மகீஷ் தீக்ஸன 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, வனிந்து ஹஸரங்க 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை எடுத்தார். அதேநேரம் இன்றைய போட்டியில் சர்வதேச அறிமுகம் பெற்ற சமிந்து விஜேசிங்க, அசித பெர்னாண்டோ மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 137 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணியானது குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் ஆகியோரின் துடுப்பாட்டத்தோடு வெற்றி இலக்கினை நெருங்கிய போதிலும் மீண்டும் மத்திய வரிசையில் தடுமாற்றம் காண்பிக்க 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்கள் பெற்றது. இதனால் போட்டி சமநிலை அடைந்து சுப்பர் ஓவரில் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக குசல் பெரேரா 34 பந்துகளுக்கு 46 ஓட்டங்கள் எடுக்க, குசல் மெண்டிஸ் 43 ஓட்டங்கள் பெற்றார். இந்திய பந்துவீச்சில் வோஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், ரிங்கு சிங் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக வோஷிங்டன் சுந்தரும், தொடர் நாயகனாக இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ்வும் தெரிவு செய்யப்பட்டனர்.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
137/8 (20)

India
137/9 (20)

Batsmen R B 4s 6s SR
Yashasvi Jaiswal lbw b Mahesh Theekshana 10 9 2 0 111.11
Shubman Gill st Kusal Perera b Wanindu Hasaranga 39 37 3 0 105.41
Sanju Samson c Wanindu Hasaranga b Chamindu Wickramasinghe 0 4 0 0 0.00
Rinku Singh c Matheesha Pathirana b Mahesh Theekshana 1 2 0 0 50.00
Suryakumar Yadav c Wanindu Hasaranga b Asitha Fernando 8 9 1 0 88.89
Shivam Dube st Kusal Mendis b Ramesh Mendis 13 14 0 0 92.86
Riyan Parag c Ramesh Mendis b Wanindu Hasaranga 26 18 1 0 144.44
Washington Sundar b Maheesh Theekshana 25 18 2 0 138.89
Ravi Bishnoi not out 8 8 1 0 100.00
Mohammed Siraj run out (Kusal Mendis) 0 1 0 0 0.00


Extras 7 (b 0 , lb 2 , nb 0, w 5, pen 0)
Total 137/9 (20 Overs, RR: 6.85)
Bowling O M R W Econ
Chamindu Wickramasinghe 4 0 17 1 4.25
Mahesh Theekshana 4 0 28 3 7.00
Asitha Fernando 2 0 11 1 5.50
Ramesh Mendis 3 0 26 1 8.67
Wanindu Hasaranga 4 0 29 2 7.25
Kamindu Mendis 3 0 24 0 8.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Riyan Parag b Ravi Bishnoi 26 27 5 0 96.30
Kusal Mendis lbw b Ravi Bishnoi 43 41 3 0 104.88
Kusal Perera c & b Rinku Singh 46 34 5 0 135.29
Wanindu Hasaranga c Ravi Bishnoi b Washington Sundar 3 3 0 0 100.00
Charith Asalanka c Sanju Samson b Washington Sundar 0 0 0 0 0.00
Ramesh Mendis c Shubman Gill b Rinku Singh 3 6 0 0 50.00
Kamindu Mendis c Rinku Singh b Suryakumar Yadav 1 1 0 0 100.00
Chamindu Wickramasinghe not out 4 2 0 0 200.00
Maheesh Theekshana c Sanju Samson b Suryakumar Yadav 0 1 0 0 0.00
Asitha Fernando  not out 1 1 0 0 100.00


Extras 10 (b 0 , lb 2 , nb 0, w 8, pen 0)
Total 137/8 (20 Overs, RR: 6.85)
Bowling O M R W Econ
Khaleel Ahamed 3 0 28 0 9.33
Mohammed Siraj 3 0 11 0 3.67
Washington Sundar 4 0 21 2 5.25
Ravi Bishnoi 4 0 38 2 9.50
Riyan Parag 4 0 27 0 6.75
Rinku Singh 1 0 3 2 3.00
Suryakumar Yadav 1 0 5 2 5.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<