Home Tamil T20I தொடரினைப் பறிகொடுத்த இலங்கை அணி

T20I தொடரினைப் பறிகொடுத்த இலங்கை அணி

India tour of Sri Lanka 2024

382

சுற்றுலா இலங்கை – இந்திய அணிகள் இடையிலான T20I தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுக்களால் டக்வெத் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றிருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. 

இந்தியாவை வீழ்த்தி புது சரித்திரம் படைத்த இலங்கை மகளிர் அணி

கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் முன்னதாக இலங்கைஇந்திம அணிகள் மோதிய போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கினார். 

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி குசல் மெண்டிஸின் விக்கெட்டை 10 ஓட்டங்களுடன் இழந்த போதிலும் பின்னர் குசல் பெரேரா, பெதும் நிஸ்ஸங்க ஆகியோரது ஆட்டத்தோடு போட்டியில் முன்னேறியது 

இந்த நிலையில் இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த பெதும் நிஸ்ஸங்க 23 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் குசல் பெரேரா அரைச்சதம் விளாசி இலங்கை அணியினை பலப்படுத்தினார். 

பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் மத்திய வரிசையில் தடுமாறி 20 ஓவர்களுக்கு இலங்கை அணியானது 9 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்கள் பெற்றது 

இலங்கை துடுப்பாட்டத்தில் குசல் பெரேரா அதிகபட்சமாக தன்னுடைய 14ஆவது அரைச்சதத்தோடு 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகளோடு 53 ஓட்டங்கள் எடுத்தார். 

சடுதியான விக்கெட்டுக்களினால் இலங்கை அணிக்கு தோல்வி

இலங்கைப் பந்துவீச்சில் ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுக்களையும் அர்ஷ்தீப் சிங், ஹார்திக் பாண்டியா மற்றும் அக்ஷார் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்தனர். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 162 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த போது போட்டியில் மழை குறுக்கிட்டது. 

பின்னர் மழை காரணமாக போட்டியின் வெற்றி இலக்கு 8 ஓவர்களுக்கு 78 ஓட்டங்கள் என டக்வெத் லூயிஸ் முறையில் தீர்மானிக்கப்பட்டதோடு, குறித்த வெற்றி இலக்கை இந்திய அணி 6.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களுடன் அடைந்தது 

இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த வீரர்களில் யஷாஷ்வி ஜெய்ஸ்வால் 15 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்தார் 

போட்டியின் ஆட்டநாயகனாக ரவி பிஸ்னோய் தெரிவாகினார். இலங்கை இந்திய அணிகள் இடையிலான T20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளை (30) நடைபெறுகின்றது 

போட்டியின் சுருக்கம் 

Result


Sri Lanka
161/9 (20)

India
81/3 (6.3)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka lbw b Ravi Bishnoi 32 23 5 0 139.13
Kusal Mendis c Ravi Bishnoi b Arshdeep Singh 10 11 2 0 90.91
Kusal Perera c Rinku Singh b Hardik Pandya 54 34 6 2 158.82
Kamindu Mendis c Rinku Singh b Hardik Pandya 26 23 4 0 113.04
Charith Asalanka c Sanju Samson b Arshdeep Singh 14 12 0 1 116.67
Dasun Shanaka b Ravi Bishnoi 0 1 0 0 0.00
Wanindu Hasaranga b Ravi Bishnoi 0 1 0 0 0.00
Ramesh Mendis st Rishab Pant b Axar Patel 12 10 0 1 120.00
Mahesh Theekshana b Axar Patel 2 3 0 0 66.67
Matheesha Pathirana not out 1 1 0 0 100.00


Extras 10 (b 0 , lb 0 , nb 0, w 10, pen 0)
Total 161/9 (20 Overs, RR: 8.05)
Bowling O M R W Econ
Mohammed Siraj 3 0 27 0 9.00
Arshdeep Singh 3 0 24 2 8.00
Axar Patel 4 0 30 2 7.50
Ravi Bishnoi 4 0 26 3 6.50
Riyan Parag 4 0 30 0 7.50
Hardik Pandya 2 0 24 2 12.00


Batsmen R B 4s 6s SR
Yashasvi Jaiswal c Dasun Shanaka b Wanindu Hasaranga 30 13 3 2 230.77
Sanju Samson b Maheesh Theekshana 0 1 0 0 0.00
Suryakumar Yadav c Dasun Shanaka b Matheesha Pathirana 26 12 4 1 216.67
Hardik Pandya not out 22 9 3 1 244.44
Rishab Pant not out 2 2 0 0 100.00


Extras 1 (b 0 , lb 1 , nb 0, w 0, pen 0)
Total 81/3 (6.3 Overs, RR: 12.46)
Bowling O M R W Econ
Dasun Shanaka 1 0 12 0 12.00
Maheesh Theekshana 2 0 16 1 8.00
Wanindu Hasaranga 2 0 34 0 17.00
Matheesha Pathirana 1.3 0 18 1 13.85



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<