Home Tamil த்ரில்லராக நிறைவுக்கு வந்த இலங்கை – இந்திய மோதல்

த்ரில்லராக நிறைவுக்கு வந்த இலங்கை – இந்திய மோதல்

153

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி வெற்றி, தோல்வியின்றி நிறைவடைந்திருக்கின்றது.

>>இலங்கை குழாத்தில் இணையும் எசான் மாலிங்க, மொஹமட் சிராஸ்!

முன்னதாக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவரான சரித் அசலன்க போட்டியில் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்திருந்தார்.

இப்போட்டிக்கான இலங்கை அணியானது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் சிராஸிற்கு அறிமுகம் வழங்க, சுழல்பந்துவீச்சாளரான அகில தனன்ஞய இலங்கை அணியில் மீண்டும் இணைக்கப்பட்டிருந்தார். மறுமுனையில் இந்திய அணி தமது சிரேஷ்ட வீரர்களான விராட் கோலி மற்றும் அணித்தலைவர் ரோஹிட் சர்மா ஆகியோருடன் இன்றைய போட்டியில் களம் கண்டிருந்தது.

இலங்கை பதினொருவர்

 

பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலன்க (தலைவர்), ஜனித் லியனகே, வனிந்து ஹஸரங்க, துனித் வெல்லாலகே, அகில தனன்ஞய, அசித பெர்னாண்டோ, மொஹமட் சிராஸ்

இந்தியா பதினொருவர்

 

ரோஹிட் சர்மா (தலைவர்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல், சிவம் டுபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஷார் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், மொஹமட் சிராஜ்

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த இலங்கை அணியானது பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க ஆகியோரோடு களம் வந்தது. இந்த நிலையில் இலங்கை போட்டியின் துவக்கத்திலேயே அவிஷ்க பெர்னாண்டோ மொஹமட் சிராஜின் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததோடு அவர் வெறும் ஒரு ஓட்டத்துடன் ஓய்வறை நடந்தார்.

அவிஷ்கவின் பின்னர் குசல் மெண்டிஸ் புதிய வீரராக வந்து இணைப்பாட்டம் ஒன்றிணை உருவாக்கிய போதிலும் அவரின் விக்கெட் 14 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. குசல் மெண்டிஸின் பின்னர் புதிய துடுப்பாட்டவீரர்களாக களம் வந்த சதீர சமரவிக்ரம (8), சரித் அலசன்க (14) ஆகியோர் ஏமாற்றத்தினை வெளிப்படுத்தினர். எனினும் பெதும் நிஸ்ஸங்க அரைச்சதம் பெற்று இலங்கை அணிக்கு நம்பிக்கை வழங்கினார்.

>>இலங்கை அணிக்காக சர்வதேச அறிமுகம் பெறும் மொஹமட் சிராஸ்

பெதும் நிஸ்ஸங்கவின் விக்கெட்டினை அடுத்து இலங்கை அணியானது 101 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும் இந்த நேரத்தில் பொறுப்புடன் ஆடிய துனித் வெல்லாலகே, தன்னுடைய கன்னி அரைச்சதத்தோடு இலங்கை அணியினை சரிவில் இருந்து மீட்டதோடு இறுதிவரை போராடினார்.

இதனால் இலங்கை அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களை எடுத்துக் கொண்டது. இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் துனித் வெல்லாலகே ஆட்டமிழக்காமல் 65 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் பெதும் நிஸ்ஸங்க தன்னுடைய 14ஆவது அரைச்சதத்தோடு 9 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்ஷார் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 231 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணியானது ஆரம்பத்தில் அதன் அணித்தலைவர் ரோஹிட் சர்மா மூலம் சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றுக் கொண்டது. அதிரடியாக ஆடிய ரோஹிட் சர்மா 47 பந்துகளில் அரைச்சதம் தாண்டி 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்கள் பெற்றார்.

ரோஹிட் சர்மாவின் விக்கெட்டினை அடுத்து இலங்கையின் சுழல்பந்துவீச்சாளர்கள் மூலம் இலங்கை அணி இந்தியாவிற்கு நெருக்கடி வழங்கிய போதிலும் இந்திய அணியின் ஆறாம் விக்கெட்டுக்காக கே.எல். ராகுல், அக்ஷார் பட்டேல் ஆகியோர் போராட்டம் காண்பித்து இணைப்பாட்டம் (57) ஒன்றிணை உருவாக்கி போட்டியில் முன்னேறினர்.

எனினும் ஹஸரங்க கே.எல். ராகுலின் விக்கெட்டினைக் கைப்பற்றி குறித்த இணைப்பாட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்ததோடு போட்டியில் திருப்பு முனையினையும் ஏற்படுத்தினார். அதன் பின்னர் இந்திய அணிக்கு நம்பிக்கை வழங்கிய அக்ஷார் பட்டேலின் விக்கெட்டும் சரித் அசலன்கவின் பந்துவீச்சில் பறிபோனது.

எனினும் புதிய துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக வந்த சிவம் டுபே நிதானம் கலந்த ஆட்டத்தோடு இந்திய அணியினை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற போதிலும், இலங்கை அணியின் தலைவர் சரித் அலசன்கவின் மாய சுழல் பந்துவீச்சின் காரணமாக இந்திய அணியானது 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. இதனால் போட்டியானது வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் பின்வரிசை வீரர்களான அக்ஷார் பட்டேல் 33 ஓட்டங்களையும், கே.எல். ராகுல் 31 ஓட்டங்களையும் பெற்றனர். அத்துடன் சிவம் டுபே இறுதி வரை போராடி 25 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க மற்றும் சரித் அசலன்க ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, துனித் வெல்லாலகே 2 விக்கெட்டுக்களைச் சுருட்டினார். போட்டியின் ஆட்டநாயகனாகவும் துனித் வெல்லாலகே தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
230/8 (50)

India
230/10 (47.5)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka lbw b Washington Sundar 56 75 9 0 74.67
Avishka Fernando c Arshdeep Singh b Mohammed Siraj 1 7 0 0 14.29
Kusal Mendis lbw b Shivam Dube 14 31 1 0 45.16
Sadeera Samarawickrama c Shubman Gill b Axar Patel 8 18 0 0 44.44
Charith Asalanka c Rohit Sharma b Kuldeep Yadav 14 21 2 0 66.67
Janith Liyanage  c Rohit Sharma b Axar Patel 20 26 1 1 76.92
Dunith Wellalage not out 67 65 7 2 103.08
Wanindu Hasaranga c Axar Patel b Arshdeep Singh 24 35 1 2 68.57
Akila Dananjaya c Washington Sundar b Arshdeep Singh 17 21 2 0 80.95
Mohamed Shiraz not out 1 1 0 0 100.00


Extras 8 (b 0 , lb 2 , nb 0, w 6, pen 0)
Total 230/8 (50 Overs, RR: 4.6)
Bowling O M R W Econ
Mohammed Siraj 8 2 36 1 4.50
Arshdeep Singh 8 0 47 2 5.88
Axar Patel 10 0 33 2 3.30
Shivam Dube 4 0 19 1 4.75
Kuldeep Yadav 10 0 33 1 3.30
Washington Sundar 9 1 46 1 5.11
Shubman Gill 1 0 14 0 14.00


Batsmen R B 4s 6s SR
Rohit Sharma lbw b Dunith Wellalage 58 47 7 3 123.40
Shubman Gill c Kusal Mendis b Dunith Wellalage 16 35 2 0 45.71
Virat Kohli lbw b Wanindu Hasaranga 24 32 2 0 75.00
Washington Sundar lbw b Akila Dananjaya 5 4 1 0 125.00
Shreyas Iyer b Asitha Fernando 23 23 4 0 100.00
KL Rahul c Dunith Wellalage b Wanindu Hasaranga 31 43 2 0 72.09
Axar Patel c Kusal Mendis b Charith Asalanka 33 57 2 1 57.89
Shivam Dube lbw b Charith Asalanka 25 24 1 2 104.17
Kuldeep Yadav b Wanindu Hasaranga 2 10 0 0 20.00
Mohammed Siraj not out 5 11 0 0 45.45
Arshdeep Singh lbw b Charith Asalanka 0 1 0 0 0.00


Extras 8 (b 0 , lb 4 , nb 0, w 4, pen 0)
Total 230/10 (47.5 Overs, RR: 4.81)
Bowling O M R W Econ
Asitha Fernando 6 1 34 1 5.67
Mohamed Shiraz 4 0 25 0 6.25
Dunith Wellalage 9 1 39 2 4.33
Akila Dananjaya 10 0 40 1 4.00
Wanindu Hasaranga 10 0 58 3 5.80
Charith Asalanka 8.5 0 30 3 3.53



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<