Home Tamil த்ரில்லர் வெற்றியுடன் T20 தொடரினை சமநிலை செய்த இலங்கை

த்ரில்லர் வெற்றியுடன் T20 தொடரினை சமநிலை செய்த இலங்கை

258

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான T20 தொடரின் இரண்டாவது T20 போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருப்பதுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 1-1 என சமப்படுத்தியுள்ளது. 

அசலன்கவின் போராட்டம் வீண்: முதல் T20i இந்தியா வசம்

மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வென்று 1-0 முன்னிலை பெற்ற சந்தர்ப்பத்தில் இரண்டாவது போட்டி இன்று (28) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய அணிக்கு வழங்கினார்.

இந்த T20 போட்டி நேற்று (27) நடைபெறவிருந்த போதும், இந்திய கிரிக்கெட் அணியில் குர்னல் பாண்டியாவிற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்ட காரணத்தினால் இன்றைய நாளில் நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

அதேநேரம், இப்போட்டிக்கான இலங்கை அணி T20 போட்டிகளில் முதல்தடவையாக விளையாடும் வாய்ப்பினை சகலதுறைவீரரான ரமேஷ் மெண்டிஸிற்கு வழங்கி சதீர சமரவிக்ரமவினையும் அணியில் இணைக்க, இந்திய அணி ருத்திராஜ் கய்க்வாட், டேவ்தட் படிக்கல், நிதிஷ் ரானா மற்றும் சேட்டன் சக்கர்யா ஆகியோரினை T20 போட்டிகளில் அறிமுகம் செய்தது. 

இலங்கை – அவிஷ்க பெர்ணான்டோ, மினோத் பானுக்க, சதீர சமரவிக்ரம, தனன்ஞய டி சில்வா, ரமேஷ் மெண்டிஸ், தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக கருணாரட்ன, அகில தனன்ஞய, துஷ்மன்த சமீர, இசுரு உதான

இந்தியா – ஷிக்கர் தவான் (தலைவர்), ருத்திராஜ் கய்க்வாட், சஞ்சு சம்சன்,டேவ்தட் படிக்கல், நிதிஷ் ரானா, சேட்டன் சக்கர்யா, ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி, புவ்னேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இந்திய கிரிக்கெட் அணி, சிறந்த அடித்தளம் ஒன்றினை உருவாக்கிய போதும் இலங்கை அணியின் சுழல்பந்துவீச்சாளர்கள் உருவாக்கிய அழுத்தம் காரணமாக 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. 

T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 2ம் இடத்துக்கு முன்னேறிய வனிந்து

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் அணித்தலைவர் ஷிக்கர் தவான் 42 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களைப் பதிவு செய்ய, தேவ்தட் படிக்கல் 29 ஓட்டங்களை எடுத்திருந்தார். 

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் அகில தனன்ஞய 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க துஷ்மன்த சமீர, வனிந்து ஹஸரங்க மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 133 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, வெற்றி இலக்கிற்கான பயணத்தில் ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றம் காட்டியது. 

எனினும், தனன்ஞய டி சில்வாவின் பொறுப்பான ஆட்டம் மற்றும் சாமிக்க கருணாரட்னவின் சிறு அதிரடி என்பன கைகொடுக்க இலங்கை கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை த்ரில்லான முறையில் 19.4 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 133 ஓட்டங்களுடன் அடைந்தது. 

எனது வெற்றியில் சமிந்த வாஸுக்கு முக்கிய பங்கு உண்டு: துஷ்மன்த சமீர

இலங்கை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தனன்ஞய டி சில்வா 34 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 40 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருக்க, மறுமுனையில் சாமிக்க கருணாரட்னவும் ஆட்டமிழக்காது 12 ஓட்டங்களுடன் தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தார். இவர்கள் தவிர, மினோத் பானுக்கவும் 31 பந்துகளில் 36 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பின் வெற்றிக்கு மேலதிக பங்களிப்பு வழங்கினார். 

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தனது சுழல் மூலம் இலங்கை அணிக்கு அழுத்தம் உருவாக்கியிருந்த போதும் அவரது பந்துவீச்சு வீணாகியது. 

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான தனன்ஞய டி சில்வா தெரிவாகினார். 

இனி இரண்டு அணிகளும் மோதும், T20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளை (28) நடைபெறுகின்றது. 

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 132/5 (20) ஷிக்கர் தவான் 40(42), அகில தனன்ஞய 29/2(4), தசுன் ஷானக்க 14/1(2), வனிந்து ஹஸரங்க 30/1(4), துஷ்மன்த சமீர 23/1(4),

இலங்கை – 133/6 (19.4) தனன்ஞய டி சில்வா 40(34)*, மினோத் பானுக்க 36(31), குல்தீப் யாதவ் 30/2(4)

முடிவு – இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: controllers/Embed.php

Line Number: 86

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 86
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once


A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: embed/match_result.php

Line Number: 115

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/views/embed/match_result.php
Line: 115
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 92
Function: view

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once