இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து

183
IND VS NZ 2ND ODI
Getty image

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2-0 என்ற கணக்கில் தொடரையும் வெற்றி கொண்டது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 

ரொஸ் டெய்லரின் அதிரடி சதத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து

இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ரொஸ் டெய்லர் மற்றும் டொம் லேதமின் அதிரடியால் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் ஹெமில்டனில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஓக்லாந்தில் இன்று (8) நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி நியூசிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. 

இதன்படி, அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய மார்டின் கப்டில் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் வலுவான தொடக்கத்தை அளித்தனர். நிக்கோல்ஸ் நிதானமாக விளையாட மறுமுனையில் கப்டில் அதிரடி காட்டினார். 

கப்டில் 8 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 79 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்க, நிக்கோல்ஸ் 41 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதன் பின்னர் வந்த வீரர்களில் ரொஸ் டெய்லரை தவிர யாரும் நிலைத்து ஆடவில்லை. 

இதனால், நியூசிலாந்து அணி 197 ஓட்டங்களுக்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால், 250 ஓட்டங்களுக்குள் அந்த அணி சுருண்டு விடும் என எதிர்பார்த்த நிலையில், ரொஸ் டெய்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். 

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சஷிகலா சிறிவர்தன ஓய்வு

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவியும், சிரேஷ்ட வீராங்கனையுமான

இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ஓட்டங்களை குவித்தது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரொஸ் டெய்லர் 73 ஓட்டங்களை எடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில், யுஸ்வேந்திரா சஹால் 3 விக்கெட்டுக்களையும், சர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷாவ் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

பின்னர் வந்த விராட் கோஹ்லியும் 15 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார். டி20 போட்டிகளில் ஜொலித்த கே.எல் ராகுல் 4 ஓட்டங்களுடன் வெளியேற, கேதார் ஜாதவ் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

துடுப்பாட்டத்தில் இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் (52) அரைச் சதம் கடந்து ஆட்டமிழந்தார்.   

ஆனால் அதன் பின்னர் வந்த துடுப்பாட்ட வீரர்களான சர்தூல் தாகூர், நவ்தீப் சைனி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சைனி 45 ஓட்டங்களை பெற்றார். 

மறுமுனையில் ரவீந்திர ஜடேஜா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு போராடினார். ஆனால் நியூசிலாந்து அணியினரின் நேர்த்தியான பந்துவீச்சினால் இந்திய அணியின் விக்கெட்டுகள்  வீழ்த்தப்பட்டது. 

இறுதியில் இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இலங்கையுடனான டெஸ்ட் தொடரிலிருந்து ஜொப்ரா ஆர்ச்சர் விலகல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான

நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌத்தி, கொலின் டி கிராண்ட்ஹோம்,  ஹமிஷ் பென்னெட், ஜேமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 55 ஓட்டங்களையும், ஸ்ரேயஸ் ஐயர் 52 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இதன்படி, 3 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த நியூசிலாந்து அணி, இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை தன்வசமாக்கியது. 

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி மவுண்ட் மௌங்கனுயில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

நியூசிலாந்து – 273/8 (50) – மார்டின் கப்டில் 79, ரொஸ் டெய்லர் 73*, ஹென்றி நிகோல்ஸ் 41, யுஸ்வேந்திரா சஹால் 3/58

இந்தியா – 251 (48.3) – ரவீந்திர ஜடேஜா 55, ஸ்ரேயாஸ் ஐயர் 52, டிம் சௌத்தி 41/2

முடிவு – நியூசிலாந்து அணி 22 ஓட்டங்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க