இந்திய மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான தொடர் ஜூலை 6ஆம் திகதி ஆரம்பம்

338
India to tour West Indies

இந்திய மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான தொடர் ஜூலை 6ஆம் திகதி ஆரம்பம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கான  நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இரண்டு பயிற்சிப் போட்டிகள் உள்ளடங்கிய ஏழு வாரத் தொடருக்காக எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நோக்கிச் செல்லவுள்ளது. அன்டிகுவா, ஜமைக்கா, சென். லூசியா, ட்ரினிடாட்டில் நான்கு டெஸ்ட் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

சென்ட்.கிட்ஸில், ஜூலை 9ஆம் திகதி இரண்டு நாள் பயிற்சிப் போட்டியுடன் ஆரம்பிக்கும் தொடரானது, அதேயிடத்தில் ஜூலை 14ஆம் திகதி ஆரம்பிக்கும் மூன்று நாள் பயிற்சிப் போட்டியுடன் தொடருகின்றதோடு, ஜூலை 21ஆம் திகதி முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கின்றது. ஜூலை 30ஆம் திகதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும், ஓகஸ்ட் 9ஆம் திகதி மூன்றாவது டெஸ்ட் போட்டியும், ஓகஸ்ட் 18ஆம் திகதி நான்காவது டெஸ்ட் போட்டியும் ஆரம்பிக்கின்றது.

மேற்படித் தொடரை ஆறு மாதங்களுக்கு முன்பே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையும் உறுதிப்படுத்தியபோதும் மேற்படி தொடரானது ஜூன் 30ஆம் திகதி ஆரம்பிக்கும் கரீபியன் பிறீமியர் லீக்குக்கிடையில் வருவதால் தொடரின் திட்டம் அறிவிக்கப்படுவது தாமதப்படுத்திருந்தத்து. ஏனெனில், ஒரே மைதானத்தில் இரண்டு தொடர்களினதும் போட்டிகள் வருவதை தவிர்க்க கரீபியன் பிறீமியர் லீக் அதிகாரிகளுடன் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தனர்.

ஆதாரம் –  விஸ்டன் இலங்கை

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்