சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படவுள்ள 2021ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் என்பன இந்தியாவில் நடைபெறவுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை இன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இதன்படி சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு ஐ.சி.சி இனால் நடத்தப்படுகின்ற முக்கிய கிரிக்கெட் தொடரொன்று இந்தியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, ஆசிய நாடொன்றில் முதல் முறையாக உலகக் கிண்ணப் போட்டிகளை முழுமையாக நடாத்துகின்ற நாடாக இந்தியா இடம்பெறவுள்ளது. இதற்கு முன்னதாக, நடைபெற்ற 1987, 1996, 2011 ஆகிய உலகக் கிண்ணப் போட்டிகளை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
இதில் 1987ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து உலகக் கிண்ணத்தை நடத்தியது. பின்னர் 1996ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இலங்கையும் இணைந்து போட்டிகளை நடத்தியது. இதில் இலங்கை அணி முதற்தடவையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தது.
அங்குரார்ப்பண T-10 தொடரில் இலங்கை அணியின் தலைவராக சந்திமால
அங்குரார்ப்பண T-10 தொடரில் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்
சுருக்கமடைந்துவரும் கிரிக்கெட் உலகில் முதல் முறையாக இடம்பெறவுள்ள T -10 தொடரில் பங்குகொள்ளவுள்ள இலங்கை அணிக்கு தற்போதைய டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் …
இதனையடுத்து 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தியிருந்ததுடன், போட்டியை நடத்திய நாடுகள் இரண்டும் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகின. எனினும், மஹேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி 2ஆவது தடவையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இது மாத்திரமின்றி மினி உலகக் கிண்ணம் என வர்ணிக்கப்படுகின்ற 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியை பாகிஸ்தான் வெற்றிகொண்டதுடன், 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கது.