அடுத்த ஆசியக் கிண்ணத் தொடர்களுக்கான இடங்கள் அறிவிப்பு

2

2025 மற்றும் 2026 ஆண்டுகளுக்கான ஆசியக் கிண்ணத் கிரிக்கெட் தொடர்கள் நடைபெறும் இடங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. 

T20I தொடரினைப் பறிகொடுத்த இலங்கை அணி 

அதன்படி 2025 மற்றும் 2026ஆம்  ஆண்டுகளுக்கான ஆசியக் கிண்ணத் தொடர் நடைபெறும் இடங்களாக முறையே இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. 

அதில் இந்தியாவில் நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடரானது T20 போட்டிகளாக ஒழுங்கு செய்யப்படவிருப்பதோடு, 2026ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடர் ஒருநாள் போட்டிகளாக ஒழுங்கு செய்யப்படவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 

அதேநேரம் சுமார் 34 வருட இடைவெயிளியின் பின்னர் ஆசியக் கிண்ணத் தொடர் இந்தியாவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இறுதியாக அங்கு 1990ஆம் ஆண்டிலேயே ஆசியக் கிண்ணத் தொடர் ஒன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இரண்டு ஆசியக் கிண்ணத் தொடர்களிலும் .சி.சி. இன் முழு அங்கத்துவம் பெற்ற ஆசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் மேலதிக அணியொன்று தகுதிகாண் தொடர் மூலம் தெரிவு செய்யப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<