அடுத்த ஐ.சி.சி.சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் இடம்பெறவுள்ளது.
18 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தமாக 15 போட்டிகள் ஓவல், எட்பஸ்டன் மற்றும் கார்டிப் ஆகிய மைதானங்களில் விளையாடப்படவுள்ளன.
சரியாக இன்னும் ஒரு வருடங்களில் ஆரம்பமாகவுள்ள 8ஆவது ஐ.சி.சி.சம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில் 2 குழுக்களில் 8 அணிகள் இடம்பிடித்துள்ளன. குழு Aயில் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளும், குழு Bயில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
அந்த அடிப்படையில் குழு Bயில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஜூன் மாதம் 04ஆம் திகதி எட்பஸ்டன் மைதானத்தில் மோதுகின்றன.
ஐ.சி.சியினால் நடாத்தப்படும் கிரிக்கட் தொடர்களில் பாகிஸ்தான் அணி இந்தியாவை இதுவரை 11 தடவை சந்தித்துள்ளது. அந்த 11 தடவைகளிலும் இந்திய அணியே வெற்றிபெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றது கிடையாது.
ஐ.சி.சி போட்டிகளில் இந்திய எதிர் பாகிஸ்தான்
50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளில்
1992ஆம் ஆண்டு – மார்ச் 04ஆம் திகதி (சிட்னி கிரிக்கட் மைதானத்தில்)
இந்தியா 216/7 (49)
சச்சின் டெண்டுல்கர் 54*
முஸ்தாக் அஹமத் 59/3
பாகிஸ்தான் 173/10 (48.1)
அமீர் சுஹைல் 62
மனோஜ் பிரபாகர் 22/2
இந்திய அணி 43 ஓட்டங்களால் வெற்றி
1996ஆம் ஆண்டு – மார்ச் 09ஆம் திகதி (சின்னஸ்வாமி கிரிக்கட் மைதானத்தில்)
இந்தியா 287/8 (50)
நவ்ஜொட் சிது 93
முஸ்தாக் அஹமத் 56/2
பாகிஸ்தான் 248/9 (49)
அமீர் சுஹைல் 55
வெங்கடேஷ் பிரசாத் 45/3
இந்தியா அணி 39 ஓட்டங்களால் வெற்றி
1999ஆம் ஆண்டு – ஜூன் 08ஆம் திகதி (ஓல்ட் ட்ரபர்ட் கிரிக்கட் மைதானத்தில்)
இந்தியா 227/6 (50)
ராஹுல் டிராவிட் 61
வசீம் அக்ரம் 22/2
பாகிஸ்தான் 180/10 (45.3)
இன்சமாம் உல் ஹக் 41
அமீர் சுஹைல் 55
வெங்கடேஷ் பிரசாத் 27/5
இந்திய அணி 47 ஓட்டங்களால் வெற்றி
2003ஆம் ஆண்டு – மார்ச் 01ஆம் திகதி (சென்சூரியன் கிரிக்கட் மைதானத்தில்)
பாகிஸ்தான் 273/7 (50)
சயீத் அன்வர் 101
சஹீர் கான் 46/2
இந்தியா 276/4 (45.4)
சச்சின் டெண்டுல்கர் 98
வகார் யூனிஸ் 71/2
இந்திய அணி 6 விக்கட்டுகளால் வெற்றி
2011ஆம் ஆண்டு – மார்ச் 30ஆம் திகதி (மொஹாலி கிரிக்கட் மைதானத்தில்)
இந்தியா 260/9 (50)
சச்சின் டெண்டுல்கர் 85
வஹாப் ரியாஸ் 46/5
பாகிஸ்தான் 231/10 (49.5)
மிஸ்பாஹ் உல் ஹக் 56
அசிஷ் நெஹ்ரா 33/2
இந்திய அணி 29 ஓட்டங்களால் வெற்றி
2015ஆம் ஆண்டு – பிப்ரவரி 15ஆம் திகதி (எடிலயிட் கிரிக்கட் மைதானத்தில்)
இந்தியா 300/7 (50)
விராத் கொஹ்லி 107
சுஹைல் கான் 55/5
பாகிஸ்தான் 224/10 (47)
மிஸ்பாஹ் உல் ஹக் 76
முஹமத் ஷமி 35/4
இந்திய அணி 76 ஓட்டங்களால் வெற்றி
டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில்
2007ஆம் ஆண்டு – செப்டம்பர் 14ஆம் திகதி (டர்பன் கிரிக்கட் மைதானத்தில்)
இந்தியா 141/9 (20)
ரொபின் உத்தப்பா 50
முஹமத் ஆசிப் 18/4
பாகிஸ்தான் 141/7 (20)
மிஸ்பாஹ் உல் ஹக் 53
இர்பான் பதான் 20/2
Bowl-out முறையில் இந்தியா வெற்றி 3–0 (இந் X X X, பாக் Pak O O O)
2007ஆம் ஆண்டு – செப்டம்பர் 24ஆம் திகதி (டர்பன் கிரிக்கட் மைதானத்தில்)
இந்தியா 157/5 (20)
கவ்தம் கம்பீர் 75
உமர் குல் 38/2
பாகிஸ்தான் 152/10 (19.3)
மிஸ்பாஹ் உல் ஹக் 43
இர்பான் பதான் 16/3
இந்திய அணி 5 ஓட்டங்களால் வெற்றி
2012ஆம் ஆண்டு – செப்டம்பர் 30ஆம் திகதி (ஆர். பிரேமதாச கிரிக்கட் மைதானத்தில்)
பாகிஸ்தான் 128/10 (19.4)
சுஹைப் மலிக் 28
லட்சுமிபதி பாலாஜி 22/3
இந்தியா 129/2 (17)
விராத் கொஹ்லி 78*
ராசா ஹசன் 22/1
இந்திய அணி 8 விக்கட்டுகளால் வெற்றி
2014ஆம் ஆண்டு – மார்ச் 21ஆம் திகதி (மீர்பூர் கிரிக்கட் மைதானத்தில்)
பாகிஸ்தான் 130/7 (20)
உமர் அக்மல் 33
அமித் மிஷ்ரா 22/2
இந்தியா 131/3 (18.3)
விராத் கொஹ்லி 36*
பிலாவல் பட்டி 17/1
இந்திய அணி 7 விக்கட்டுகளால் வெற்றி
2016ஆம் ஆண்டு – மார்ச் 19ஆம் திகதி (ஈடன் கார்டன் கிரிக்கட் மைதானத்தில்)
பாகிஸ்தான் 118/5 (18)
சுஹைப் மலிக் 26
சுரேஷ் ரயினா 4/1
இந்தியா 119/4 (15.5)
விராத் கொஹ்லி 55*
முகமத் சமி 17/2
இந்திய அணி 6 விக்கட்டுகளால் வெற்றி
இதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2011, 2012 ,2013, 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் ஐ.சி சியினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஐ.சி.சி.சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இந்த இரண்டு அணிகளும் விளையாடுவதன் மூலம் தொடர்ச்சியாக 7 வருடங்கள் இந்த அணிகள் ஐ.சி சியினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் விளையாடிய பெருமையைப் பெரும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.