இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இம்மாதம் 4ஆம் திகதி அவர்களது சொந்த மண்ணில் ஆரம்பமாகவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ள 15 பேர்கள் அடங்கிய இந்திய வீரர்கள் குழாத்தினை இன்று (1) வெளியிட்டுள்ளது.
வெளியிடப்பட்டிருக்கும் வீரர்கள் குழாத்தில் இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயம் காரணமாக ஓய்வு வழங்கப்பட்டிருப்பதுடன், புதிய வீரர்களுக்கு அணியில் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
த்ரில்லர் வெற்றியுடன் ஏழாவது முறையாக ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்தியா
டுபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று (28) இடம்பெற்று …
அந்தவகையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான புவ்னேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா ஆகிய வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரில் ஓய்வு பெறுகின்றனர். இதில் புவ்னேஸ்வர் குமார் இந்திய அணியின் கடைசி டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விளையாடாது போயிருந்த போதிலும், அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசியக் கிண்ணத் தொடரில் இந்திய அணிக்காக திறமையினை வெளிக்காட்டியிருந்தார். இதேவேளை, பும்ரா இங்கிலாந்து அணியுடனான தொடரிலும், ஆசிய கிண்ணப் போட்டிகளிலும் இந்திய அணியினை பிரதிநிதித்துவம் செய்திருந்தார்.
முதுகு உபாதை ஒன்றின் காரணமாக சகலதுறை வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்டியாவும், உடற்தகுதி சோதனையில் நல்ல பெறுபேறுகளை காட்டாத வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
எனினும், உபாதை சிக்கல் ஒன்றினை எதிர்கொண்ட சுழல் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் உடற்தகுதி சோதனையில் நல்ல முடிவினை காட்டியதனை அடுத்து அணியில் வாய்ப்பினை பெற்றுள்ளார். அதேசமயம், இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணியின் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஆடிய சிக்கர் தவான் மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் போட்டியில் 257 ஓட்டங்களை விளாசிய அவுஸ்திரேலிய வீரர்
அவுஸ்திரேலியாவின் உள்ளூர் அணிகளுக்கு இடையில் …
இந்திய அணியின் வளர்ந்து வரும் வீரர்களில் ஒருவராக கருதப்படும் 18 வயதேயான ப்ரீத்வி சாஹ்விற்கு, மேற்கிந்திய தீவுகளுடனான தொடர் மூலம் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் ஆடும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இந்திய அணி 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த சாஹ் இதுவரையில், 14 முதல்தர போட்டிகளில் ஆடி 7 சதங்கள் அடங்கலாக 56.72 என்கிற சிறந்த துடுப்பாட்ட சராசரியைக் கொண்டிருக்கின்றார். ப்ரீத்வி சாஹ் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரின் துடுப்பாட்ட பாணியைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சிக்கர் தவானிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருப்பதால், இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் வரும் வாய்ப்பு லோக்கேஷ் ராகுலிற்கும், ப்ரீத்வி சாஹ்விற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிம்பாப்வே அணியை இலகுவாக வீழ்த்திய தென் ஆபிரிக்கா
மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 …
இதேநேரம், உள்ளூர் போட்டிகளில் திறமையினை வெளிப்படுத்தி வந்த ஆரம்ப வீரர்களில் ஒருவரான மயான்க் அகர்வாலும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 43 முதல்தரப் போட்டிகளில் ஆடிய அனுபவத்தினைக் கொண்டிருக்கும் அகர்வால் அண்மையில் தென்னாபிரிக்க A அணிக்கு எதிராக இரட்டைச் சதம் விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதோடு இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர்களான மொஹமட் சிராஜ் மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோரும் இந்திய அணியில் பெயரிடப்பட்டுள்ளனர். இவர்களோடு மொஹமட் சமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் இன்னும் மூன்று சுழல் வீரர்களுடன் சேர்ந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுத்துறையினை பலப்படுத்துகின்றனர்.
இந்திய அணிக்குழாம்
விராத் கோஹ்லி (அணித் தலைவர்), லோக்கேஷ் ராகுல், ப்ரீத்வி சாஹ், மயான்க் அகர்வால், செட்டஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே (உப தலைவர்), ஹனுமா விஹாரி, றிசப் பாண்ட், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மொஹமட் சமி, உமேஷ் யாதவ், மொஹமட் சிராஜ், சர்துல் தாக்கூர்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…