மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் இலங்கை அணியுடன் விளையாடவிருக்கும் 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணிக் குழாமை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று (4) வெளியிட்டுள்ளது.
இக்குழாமிற்கு வாஷிங்டன் சுந்தர், ஜெய்தேவ் உனட்கட், பாசில் தம்பி மற்றும் தீபக் ஹூடா போன்ற வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் உனட்கட் தவிர ஏனைய அனைவரும் அறிமுக வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்கு எதிரான T20 குழாமை ரோஹித் சர்மா தலைமை தாங்க, இந்திய அணியின் வழமையான தலைவர் விராட் கோஹ்லிக்கு இந்த T20 போட்டிகளில் தென்னாபிரிக்க அணியுடனான தொடர் கருதி ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்தியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை ஒரு நாள் குழாம் அறிவிப்பு
இந்தியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை ஒரு நாள் குழாம் அறிவிப்பு
இம்மாதம் 10ஆம் திகதி இந்தியாவின் தர்மாசாலாவில்..
தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் இந்த பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரிலும் திறமையான ஆட்டத்தைக் காட்டியிருந்ததோடு தமிழ் நாடு பிரிமியர் லீக் (TNPL) தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராகவும், அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இரண்டாவது வீரராகவும் பதிவாகியிருந்தார்.
குஜராத் லயன்ஸ் அணிக்காக ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடிய பாசில் தம்பி இந்திய A அணியில் தனக்குக் கிடைத்த வாய்ப்பையும் சரியாக உபயோகப்படுத்தியிருந்தார்.
“பாசிலும், சிராஜூம் T20 போட்டிகளுக்கு மிகவும் பொருத்தமானவர்களாக நாம் தற்போது கருதுகின்றோம்“ என இந்திய அணித் தேர்வாளர்களின் தலைவரான MSK. பிரசாத், பாசிலின் தெரிவு பற்றி தெரிவித்திருந்தார்.
ஜெய்தேவ் உனட்கட் இந்த வருடத்திற்கான ஐ.பி .எல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 12 போட்டிகளில் விளையாடிய இவர் ரைசிங் புனே சுபர்ஜயன்ட்ஸ் அணிக்காக 13.41 என்ற சராசரியில் 24 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாகிய மொஹமட் சிராஜூக்கும் இந்த குழாமில் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனினும் அத்தொடரில் விளையாடிய கேதர் யாதவ்வுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் ஓய்வு வழங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, இலங்கைக்கு எதிரான இந்திய அணியின் ஒரு நாள் குழாமில் உள்வாங்கப்பட்டது போன்று T20 குழாமிலும் சேர்க்கப்பட்டிருக்கின்றார்.
உள்ளூர் போட்டிகளில் நல்ல ஓட்டப் பதிவை கொண்ட துடுப்பாட்ட வீரரான தீபக் ஹூடாவுக்கும் தற்போது இந்திய அணியை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு கிட்டியிருக்கின்றது.
இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் குழாமில் உள்ளடக்கப்பட்டிருக்கும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சிக்கர் தவானுக்கும் தென்னாபிரிக்க அணியுடனான தொடரைக் கருத்திற்கொண்டு T20 தொடரில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி போன்று ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.
10 வருடங்களுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகும் இலங்கை
10 வருடங்களுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகும் இலங்கை
2018 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி பல கிரிக்கெட்..
தவானின் ஓய்வு இந்திய அணிக்காக இந்த T20 தொடரில் லோக்கேஷ் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்குவார்கள் என்பதை காட்டுகின்றது.
இந்தியாவுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை அடுத்து இலங்கை டிசம்பர் மாதம் 20, 22 மற்றும் 24 ஆம் திகதிகளில் முறையே கட்டாக், இந்தூர் மற்றும் மும்பை ஆகிய மைதானங்களில் நடைபெறும் T20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
இந்திய T20 குழாம்
ரோஹித் சர்மா (அணித் தலைவர்), லோக்கேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா, ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், பாசில் தம்பி, ஜெய்தேவ் உனட்கட்