முன்னணி வீரர்கள் நீக்கம் ; இளம் வீரர்களுடன் ஜிம்பாப்வே செல்லும் இந்தியா!

India tour of Sri Lanka 2024

61
India tour of Sri Lanka 2024

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான இந்திய குழாத்தின் தலைவராக சுப்மான் கில் பெயரிடப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ள இந்த குழாத்தில் T20 உலகக்கிண்ணத்தில் இணைக்கப்பட்டுள்ள யசஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சம்சன் ஆகியோர் மாத்திரம் இணைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

>>இளையோர் லீக் தொடருக்கான குழாம்கள் அறிவிப்பு<<

சுப்மான் கில்லின் தலைமையில் களமிறங்கவுள்ள இந்திய குழாத்தில் நிதிஷ் ரெட்டி, அபிஷேக் சர்மா மற்றும் ரியான் பராக் ஆகிய புதுமுக வீரர்கள் வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

இவர்களை தவிர்த்து ருதுராஜ் கைக்வார்ட், ரிங்கு சிங், துரூவ் ஜூரல், வொசிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், ஆவேஷ் கான், கலீல் அஹ்மட், முகேஷ் குமார் மற்றும் துஷார் தேஷ்பாண்டே போன்ற வீரர்களும் IPL பிரகாசிப்பின் அடிப்படையில் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் ஐசிசி T20 உலகக்கிண்ண குழாத்தில் இணைக்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட T. நடராஜனுக்கு ஜிம்பாப்வே தொடருக்கான குழாத்திலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடர் அடுத்த மாதம் 6ம் திகதி ஹராரேயில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய குழாம்

சுப்மான் கில் (தலைவர்), யசஷ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கைக்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சம்சன், துரூவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வொசிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், ஆவேஷ் கான், கலீல் அஹ்மட், முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<