சர்வதேச கிரிக்கெட் வாரியத்தினால் (ஐ.சி.சி.) டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவை பின்தள்ளி தரவரிசையில் முதலிடம் பெற்றிருக்கின்றது.
ஒருநாள் போட்டிகளுக்கு திரும்பும் திமுத் கருணாரத்!
ஏற்கனவே 119 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் காணப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டதனை அடுத்து மேலதிகமாக 02 புள்ளிகளைப் பெற்று தற்போது 121 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருக்கின்றது.
இதேவேளை, ஏற்கனவே 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்பட்ட அவுஸ்திரேலிய அணி தற்போது 06 புள்ளிகளை இழந்து 116 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்குச் சென்றிருக்கின்றது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுடன் நிறைவுக்கு வந்த டெஸ்ட் தொடரினை பறிகொடுத்தமை இதற்கு காரணமாக பார்க்கப்படுகின்றது.
மறுமுனையில் 114 புள்ளிகளுடன் இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்தில் காணப்படுவதோடு, தென்னாபிரிக்கா (104 புள்ளிகள்) மற்றும் நியூசிலாந்து (100 புள்ளிகள்) அணிகள் முறையே நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் காணப்படுகின்றன. புதிய அணிகளுக்கான டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து 08 புள்ளிகளை மேலதிமாக பெற்றிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
அணிகள் தரவரிசையில் பாகிஸ்தான் 6ஆம் இடத்திலும், இலங்கை கிரிக்கெட் அணியானது 7ஆம் இடத்திலும் காணப்படுகின்றன. ஏற்கனவே 85 புள்ளிகளுடன் காணப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி ஒரு புள்ளியினை இழந்து புதிய அணிகள் தரவரிசையில் 84 புள்ளிகளுடன் உள்ளது.
இலங்கை அணி அயர்லாந்து வீரர்களுடனான டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய போதும் புள்ளிகளில் பின்னடைவதற்கு அண்மையில் நியூசிலாந்துடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என மோசமான தோல்வியினைச் சந்தித்தமை காரணமாகும்.
போட்டி கட்டணத்தை முழுமையாக இழக்கும் கோஹ்லி, கம்பீர்
மேற்கிந்திய தீவுகள் அணியானது டெஸ்ட் அணிகள் தரவரிசையில் 76 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திலும், பங்களாதேஷ் அணி (45 புள்ளிகள்) மற்றும் ஜிம்பாப்வே (32 புள்ளிகள்) ஆகிய அணிகள் முறையே 9ஆம், 10ஆம் இடங்களிலும் காணப்படுகின்றன.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<