நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் குழாம் அறிவிப்பு

150
© BCCI

தற்போது நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இந்த மாதம் 24ஆம் திகதி ஆரம்பாகும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் நியூசிலாந்துடன் விளையாடவுள்ளது. இந்த T20 தொடரின் பின்னர் இந்திய – நியூசிலாந்து அணிகள் இடையில் 3 ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களும் இடம்பெறவுள்ளன.

இந்த சுற்றுப்பயணத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் மோதும் 15 பேர் அடங்கிய இந்திய ஒருநாள் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய டி20 குழாமிலிருந்து வெளியேறும் ஷிகர் தவான்

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான இந்திய அணியின் 15 பேர் கொண்ட குழாத்திலிருந்து உபாதை காரணமாக அணியின் ஆரம்ப …..

அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் குழாத்தில் முன்வரிசை துடுப்பாட்ட வீரரான சிக்கர் தவான் தோற்பட்டை உபாதை காரணமாக விலகியிருக்கின்றார். அண்மையில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரினை வெற்றி கொள்வதில் முக்கிய பங்கு வகித்த சிக்கர் தவான் தற்போது விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான  பிரித்வி சாஹ் மூலம் இந்திய ஒருநாள் குழாத்தில் பிரதியீடு செய்யப்பட்டிருக்கின்றார். 

இதுவரையில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் பெறாத பிரித்வி சாஹ் நியூசிலாந்தின் பதினொருவர் அணிக்கு எதிராக அண்மையில் இடம்பெற்ற List A போட்டி ஒன்றில் 150 ஓட்டங்கள் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரித்வி சாஹ்வின் மாற்றம் தவிர இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற அதே அணியினையே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் களமிறக்குகின்றது. 

அதன்படி, இருக்கும் இந்திய ஒருநாள் அணியின் துடுப்பாட்டம் அதன் அணித்தலைவர் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் லோக்கேஷ் ராகுல் ஆகியோர் மூலம் பலப்படுத்தப்படுகின்றது. 

இவர்கள் ஒருபுறமிருக்க ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி சாஹ் மற்றும் மனீஷ் பாண்டே ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணிக்கு மேலதிக துடுப்பாட்ட வீரர்களாக வலுச் சேர்க்கின்றனர்.

இந்திய அணியின் பந்துவீச்சுத் துறையினை நோக்கும் போது அதன் வேகப் பந்துவீச்சுத் துறை ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சமி, நவ்தீப் சைனி போன்றோரினால் பலப்படுத்தப்பட குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் ரவிந்தீர ஜடேஜாவுடன் இணைந்து சுழல் பந்துவீச்சாளர்களாக இந்திய கிரிக்கெட் அணிக்கு பலம் சேர்க்கவுள்ளனர்.

நியூசிலாந்து – இந்திய அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி ஹேமில்டன் நகரில் ஆரம்பமாகின்றது.

இந்திய ஒருநாள் குழாம் 

விராட் கோலி (அணித்தலைவர்), ரோஹித் சர்மா, பிரித்வி சாஹ், லோக்கேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனீஷ் பாண்டே, ரிசாப் பாண்ட், சிவம் டூபே, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவிந்திர ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சமி, நவ்தீப் சைனி, சர்துல் தாக்கூர், கேதர் ஜாதவ்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<