ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம் காண்பித்த இந்தியா

251

ஒருநாள் அணிகளுக்கான புதிய தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி முன்னேற்றம் காண்பித்துள்ளது.

அவுஸ்திரேலியா செய்தது போல நாம் செய்ய மாட்டோம் – பாகிஸ்தான்

நேற்று (24) நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா தமது நாட்டில் வைத்து நியூசிலாந்தினை 3-0 என ஒருநாள் தொடரில் வைட்வொஷ் செய்திருந்தது. இந்த தொடர் வெற்றி மற்றும் இதற்கு முன்னர் இலங்கையுடனான ஒருநாள் தொடர் வெற்றி என்பன இந்திய அணி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் முன்னேற்றம் காட்ட பிரதான காரணமாக மாறியிருக்கின்றது.

அந்தவகையில் இந்திய அணி தற்போது ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியிருப்பதோடு, தற்போது இந்தியா மொத்தமாக 114 புள்ளிகளைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் ஏற்கனவே முதல் இடத்தில் காணப்பட்ட இங்கிலாந்து தற்போது 113 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருப்பதுடன், அவுஸ்திரேலிய அணி 112 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், இந்தியாவுடன் தொடர் தோல்வி அடைந்த நியூசிலாந்து அதற்கு அடுத்ததாக 111 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் காணப்படுகின்றது.

பயிற்சிப்போட்டிக்கான SLC பதினொருவர் குழாம் அறிவிப்பு

இந்த சந்தர்ப்பத்தில் இங்கிலாந்து தென்னாபிரிக்க வீரர்களுடன் விளையாடவுள்ள ஒருநாள் தொடரினை 3-0 எனக் கைப்பற்றும் போது மீண்டும் ஒருநாள் அணிகள் தரவரிசையில் முதல் இடம் பெறுவதற்குரிய வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்றது.

அதேவேளை புள்ளிகள் அட்டவணையில் இலங்கை கிரிக்கெட் அணி 88 புள்ளிகளுடன் 8ஆம் இடத்தில் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

அணிகள் தரவரிசை

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<