ஒரே போட்டியில் இரு உலக சாதனைகளைப் படைத்த கோஹ்லி

838
Virat Kohli

கிரிக்கெட் உலகில் அண்மைக்காலமாக சாதனைகளுக்கு மேல் சாதனைகளை படைத்து வருகின்ற இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும் உலகின் முன்னணி நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான விராட் கோஹ்லி நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணியுடனான 3ஆவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டியில் 2 புதிய சாதனைகளை நிலைநாட்டினார்.

இதில் அணித் தலைவராக ஆண்டில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றுக்கொண்டார்.

டி20 போட்டிகளில் தென்னாபிரிக்க வீரர் புதிய உலக சாதனை

தென்னாபிரிக்க அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரரான..

நியூசிலாந்து அணிக்கெதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் 91 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை, 1,460 ஓட்டங்கள் பெற்று ஒரு ஆண்டில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங்கின் (1,424 ஓட்டங்கள்) சாதனையை முறிடியத்தார்.

இந்த வரிசையில் 1,373 ஓட்டங்களுடன் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் மிஸ்பா உல் ஹக்கும், 1,268 ஓட்டங்களுடன் இந்தியாவின் அசாரூதீனும், 1,244 ஓட்டங்களுடன், இலங்கையின் அஞ்செலோ மெதிவ்சும் உள்ளனர்.

வீரர்கள் போட்டிகள் இன்னிங்ஸ் சதம் அரைச்சதம் வருடம்
விராட் கோஹ்லி 26 26 6 7 2017
ரிக்கி பொண்டிங் 27 24 5 8 2007
மிஸ்பா உல் ஹக் 34 32 0 15 2013
மொஹமட் அசாருடீன் 37 33 3 8 1998
அஞ்செலோ மெதிவ்ஸ் 32 31 1 9 2014

3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு சதங்கள் உள்ளடங்கலாக 263 ஓட்டங்களைக் குவித்த கோஹ்லி, ஒரு நாள் அரங்கில் அதிவேகமாக 9,000 ஓட்டங்களை குவித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்ததுடன், தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் . பிடி. வில்லியர்ஸின் சாதனையையும் முறியடித்தார்.   

இதுவரை இச்சாதனையை 205 இன்னிங்ஸ்களில் கடந்த தென்னாபிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் வசமிருந்தது. குறித்த சாதனையை தனது 194ஆவது இன்னிங்ஸில்(202ஆவது போட்டி) கோஹ்லி கடந்திருந்தார்.

பாகிஸ்தானால் T-20 தொடரிலும் வைட் வொஷ் செய்யப்பட்ட இலங்கை

இன்று (29) நடைபெற்று முடிந்திருக்கும் பாகிஸ்தான்….

கிராண்ட்ஹோம் வீசிய 37ஆவது ஓவரில் பௌண்டரி விளாசியபோது இந்த சாதனை மைல்கல்லை அவர் எட்டினார். சச்சின், கங்குலி, டிராவிட், அசாருதீன், டோனி ஆகியோரை தொடர்ந்து, ஒருநாள் போட்டிகளில் 9,000 ஓட்டங்களைக் குவித்த 6ஆவது இந்திய வீரர் என்ற பெருமையையும் கோஹ்லி பெற்றுக்கொண்டதுடன், உலக அளவில் 19ஆவது வீரராகவும் இடம் பிடித்தார்.

இந்நிலையில், ஒரு நாள் போட்டிகளில் கோஹ்லி தனது 32ஆவது சதத்தை பதிவு செய்தார். 31ஆவது சதம் அடித்தபோது அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங்கை பின்தள்ளி 2ஆவது இடம் பிடித்தார். எனினும் அதிக சதங்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சச்சினின் சாதனையையும் (49 சதம்) இன்னும் சில ஆண்டுகளில் அவர் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அத்துடன், இந்த ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 2,000 ஓட்டங்கள் எனும் மைல்கல்லை எட்டிய முதல் வீரராகவும், ஒரு நாள் அரங்கில் இந்த ஆண்டில் அதிகூடிய ஓட்டங்களைக் பெற்றவராகவும் முன்னணியில் கோஹ்லி திகழ்கிறார். தென்னாபிரிக்காவின் ஹஷிம் அம்லா 1,988 ஓட்டங்களை விளாசி 2ஆவது இடத்தில் உள்ளார்.

எனினும், 2,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை 2012, 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளிலும் கோஹ்லி எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 2000 ஓட்டங்களை தொடர்ச்சியாக பெற்ற 2ஆவது இந்திய வீரராகவும் மாறினார். முன்னதாக 1996, 1997 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கர் பெற்றிருந்தார்.

அத்துடன் சச்சின் மற்றும் சங்கக்கார ஆகிய வீரர்கள் 6 தடவைகள் இவ்வாறு 2,000 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன், மஹேல ஜயவர்தன, மெத்யூ ஹெய்டன் மற்றும் ஜெக் கலிஸ் ஆகிய வீரர்கள் 3 தடவைகள் இம்மைல்கல்லை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீரர்கள் காலப்பகுதி
சச்சின் டெண்டுல்கர் 1996 – 1998
மெத்யூ ஹெய்டன் 2002 – 2004
மைக் ஹஸ்ஸி 2009 – 2010
மஹேல ஜயவர்தன 2006 – 2007
ரிக்க பொண்டிங் 2005 – 2006
குமார் சங்கக்கார 2011 – 2012
ஸ்டீவ் ஸ்மித் 2015 – 2016
விராத் கோஹ்லி 2016 – 2017

இதேவேளை, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய நியூஸிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியது. இதன்மூலம் தொடர்ச்சியாக 7 ஒரு நாள் தொடர்களைக் கைப்பற்றி இந்திய அணி புதிய சாதனையும் படைத்தது. முன்னதாக 2007 – 2009 காலப்பகுதியில் தொடர்ச்சியாக 6 தொடர்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.