இந்திய டெஸ்ட் அணியில் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ரஜாட் படிதாரிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
ஐசிசியின் சிறந்த டெஸ்ட் அணியில் திமுத்; ஒருநாள் அணியின் தலைவியாக சமரி
அதன்படி இந்தியாவின் மத்ய பிரதேஷத்தை சேர்ந்த 30 வயது நிரம்பிய ரஜாட் படிதார், இந்திய அணி இங்கிலாந்துடன் ஆடவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆடும் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார்.
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரான விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இருந்து விலகியதனை அடுத்து கோலியின் பிரதியீடாகவே படிதாருக்கு இந்திய டெஸ்ட் குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
இதற்கு முன்னர் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியொன்றில் மாத்திரம் ஆடிய ரஜாட் படிதார் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற போட்டியொன்றில் 151 ஓட்டங்கள் விளாசியதோடு, இந்திய A அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திலும் பிரகாசித்திருந்தார். இதுவே அவர் டெஸ்ட் குழாத்தில் உள்வாங்கப்படவும் காரணமாகியிருக்கின்றது.
முதல் இரண்டு டெஸ்ட்களிலும் கோலிக்கு ஓய்வு
இதேவேளை இந்திய – இங்கிலாந்து அணிகள் பங்கெடுக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (25) ஹைதராபாதில் ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<