இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள ஐந்தாவது அணியாக தெரிவாகியுள்ளது.
மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2021ஆம் ஆண்டின் பெப்ரவரி 6ஆம் திகதி தொடக்கம் மார்ச் 7ஆம் திகதி வரை, நியூசிலாந்தின் ஆறு நகரங்களில் நடைபெறவிருக்கின்றது.
ஐ.பி.எல். போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு
இந்த ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர்….
இந்நிலையில், இந்திய மகளிர் அணி இந்த உலகக் கிண்ணத்தில் தகுதி பெறும் வாய்ப்பினை ஐ.சி.சி. இன் மகளிர் சம்பியன்ஷிப்பின் நிர்வாகக் குழு எடுத்த முடிவு ஒன்றுக்கு அமைய பெற்றிருக்கின்றது.
2021ஆம் ஆண்டுக்கான மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த 8 அணிகளில் 5 அணிகள் ஐ.சி.சி. இன் மகளிர் சம்பியன்ஷிப் எனப்படும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு கொடுக்கப்படும் புள்ளிகளுக்கு அமைய 2021ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத்திற்கு நேரடித் தகுதியினைப் பெற்றுக் கொள்ளும்.
அதாவது, 2021ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர் இடம்பெறவுள்ள நியூசிலாந்தின் மகளிர் அணியுடன் சேர்த்து, ஐ.சி.சி. மகளிர் சம்பியன்ஷிப்பின் புள்ளிகள் அட்டவணையில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் 2021ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு நேரடித் தகுதியினைப் பெற்றுக் கொள்ளும்.
அதன்படி, இந்திய வீராங்கனைகள் ஐ.சி.சி. மகளிர் சம்பியன்ஷிப்பின் நிர்வாகக் குழு எடுத்த முடிவுக்கு அமைய தற்போது ஐ.சி.சி. மகளிர் சம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் நான்காம் இடத்தினைப் பெற்றவாறே 2021ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத்திற்கு ஐந்தாவது அணியாக தெரிவாகியிருக்கின்றனர்.
Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 118
கொரேனா அச்சுறுத்தலால் இரத்தாகவுள்ள…..
இந்திய மகளிர் அணிக்கு முன்னதாக, நியூசிலாந்துடன் சேர்த்து அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் 2021ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தினைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், 2021ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத்தில் ஐந்து அணிகள் நேரடித் தகுதியினைப் பெற்ற நிலையில், (உலகக் கிண்ணத்தில் விளையாட வேண்டிய மொத்த அணிகள் 8 என்பதால்) எஞ்சியிருக்கும் மூன்று அணிகளை தெரிவு செய்யும் தகுதிகாண் தொடர் இந்த ஆண்டு ஜூலை 7ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
எனினும், மொத்தமாக 10 நாடுகளின் மகளிர் அணிகள் பங்குபெறும் இந்த தகுதிகாண் தொடர் தற்போது உலகில் இருக்கும் கொரோனா பிரச்சினை காரணமாக நடைபெறுமா இல்லையா என்ற சந்தேகத்தினையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<