T20 உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் இந்தியா!

ICC Men’s T20 World Cup 2024

141
ICC Men’s T20 World Cup 2024

ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தகுதிபெற்றுள்ளன.

முதல் அரையிறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென்னாபிரிக்கா அரையிறுதிக்கான வாய்ப்பை ஏற்கனவே தக்கவைத்திருந்த நிலையில், இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியானது இங்கிலாந்தை வீழ்த்தியது.

>>LPL தொடரில் அறிமுகப்படுத்தப்படும் புதிய விதிமுறை!<<

கயானாவில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணித்தலைவர் ரோஹித் சர்மா மிகச்சிறப்பாக ஆடி 57 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் கிரிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அக்ஷர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் அபார சுழல் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 103 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் அக்ஷர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரிட் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி சனிக்கிழமை (29) தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

இந்தியா – 171/7 (20), ரோஹித் சர்மா 57, சூர்யகுமார் யாதவ் 47, கிரிஸ் ஜோர்டன் 3/37

 

இங்கிலாந்து – 103/10 (16.4), ஹெரி புரூக் 25, ஜோஸ் பட்லர் 23, குல்தீப் யாதவ் 3/19, அக்ஷர் பட்டேல் 3/23

 

முடிவு – இந்திய அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<