Home Tamil திக்வெல்லவின் சதம் வீண்: இலங்கை A அணிக்கு இன்னிங்ஸ் தோல்வி

திக்வெல்லவின் சதம் வீண்: இலங்கை A அணிக்கு இன்னிங்ஸ் தோல்வி

936

சுற்றுலா இலங்கை A மற்றும் இந்திய A அணிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய A அணி, இன்னிங்ஸ் மற்றும் 205 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இவ்வெற்றியோடு இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரிலும் இந்திய A அணி, 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.

இலங்கைக்கு எதிராக இமாலய ஓட்டங்களைக் குவித்துள்ள இந்திய A அணி

சுற்றுலா இலங்கை A அணி மற்றும் இந்திய A அணி ஆகியவை இடையே இடம்பெற்றுவரும்…

இலங்கை A அணியின் இந்திய சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, பெலகவி நகரில் கடந்த சனிக்கிழமை (25) ஆரம்பமானது.

நான்கு நாட்கள் கொண்ட இப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய A அணி 5 விக்கெட்டுகளை இழந்து 622 ஓட்டங்கள் குவித்த நிலையில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை A அணி 83 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து காணப்பட்ட நிலையில், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இலங்கை A  அணியின் துடுப்பாட்டம் சார்பாக களத்தில் நின்ற நிரோஷன் திக்வெல்ல மற்றும் அஷான் பிரியஞ்சன் ஆகியோர் தலா 22 ஓட்டங்கள் வீதம் பெற்றிருந்தனர்.

இன்று இந்திய A அணியினை விட 539 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை A அணிக்கு அஷான் பிரியஞ்சன் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஜோடி ஐந்தாம் விக்கெட்டுக்காக 111 ஓட்டங்களை பகிர்ந்து நம்பிக்கை தந்தது.

இந்நிலையில், இலங்கை A அணியின் ஐந்தாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த அஷான் பிரியஞ்சன் 49 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.

அஷான் பிரியஞ்சனின் விக்கெட்டினை அடுத்து நிரோஷன் திக்வெல்ல தவிர இலங்கை A அணியின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் இந்திய A அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் தடுமாற்றத்தினை எதிர்கொண்டனர்.

இதனால், அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை A அணி தமது முதல் இன்னிங்ஸினை 232 ஓட்டங்களுடன் நிறைவு செய்து கொண்டது.

இலங்கை A அணியின் துடுப்பாட்டம் சார்பாக முதல்தரப் போட்டிகளில் தனது 11ஆவது சதத்தினை பூர்த்தி செய்த நிரோஷன் திக்வெல்ல 113 பந்துகளில் 15 பெளண்டரிகள் அடங்கலாக 103 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதேநேரம், இந்திய A அணியின் பந்துவீச்சு சார்பாக ராகுல் சாஹார் 78 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர், சிவாம் தாபே மற்றும் ஜயாந்த் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் சாய்த்திருந்தனர்.

இலங்கை A அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதால் பலோவ் ஒன் முறையில் தமது இரண்டாம் இன்னிங்ஸில் மீண்டும் துடுப்பாடியது.

இலங்கை A அணிக்கு இன்னிங்ஸ் தோல்வியினை தவிர்க்க 390 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், இலங்கை வீரர்கள் இரண்டாம் இன்னிங்ஸிலும் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறினர்.

SLC இன் அழைப்பை மறுத்த மஹேலவுக்கு மெதிவ்ஸின் வேண்டுகோள்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவரும், மும்பை இந்தியன்ஸ்…

அதன்படி, தமது இரண்டாம் இன்னிங்ஸில் வெறும் 185 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இலங்கை A அணி, போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவியது.

இலங்கை A அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் சதீர சமரவிக்ரம 48 ஓட்டங்கள் குவித்து அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையினை பதிவு செய்திருந்தார்.

இதேநேரம், மீண்டும் சிறப்பாக பந்துவீசிய ராகுல் சாஹர் 4 விக்கெட்டுகளை சாய்த்து இந்திய A அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தார். இதேநேரம், அங்கிட் ராஜ்பூட், சந்தீப் வாரியர் மற்றும் ஜயந்த் ஜாதவ் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்து இந்திய தரப்பின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்தனர்.

தமது இந்திய சுற்றுப் பயணத்தினை தோல்வியுடன் ஆரம்பித்திருக்கும் இலங்கை A அணி, இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய A அணியினை வரும் வெள்ளிக்கிழமை ஹப்லி நகரில் வைத்து மீண்டும் எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka A Team
232/10 (63.4) & 185/10 (52.3)

India A Team
622/5 (141)

Batsmen R B 4s 6s SR
PK Panchal c Niroshan Dickwella b Vishwa Fernando 160 261 9 2 61.30
AR Easwaran lbw b Akila Dananjaya 233 321 22 3 72.59
Jayant Yadav c Niroshan Dickwella b Vishwa Fernando 8 18 1 0 44.44
Anmolpreet Singh not out 116 165 11 0 70.30
Ricky Bhui b Lakshan Sandakan 1 3 0 0 33.33
Siddhesh Lad c Niroshan Dickwella b Lahiru Kumara 76 89 6 1 85.39


Extras 28 (b 8 , lb 12 , nb 5, w 3, pen 0)
Total 622/5 (141 Overs, RR: 4.41)
Fall of Wickets 1-390 (44.4) Jayant Yadav, 2-352 (83.1) PK Panchal, 3-466 (109.6) AR Easwaran, 4-469 (110.5) Ricky Bhui, 5-622 (141.6) Siddhesh Lad,

Bowling O M R W Econ
Vishwa Fernando 20.1 0 83 2 4.13
Lahiru Kumara 21 2 81 0 3.86
Akila Dananjaya 29 0 136 1 4.69
Chamika Karunaratne 18.5 1 62 0 3.35
Lakshan Sandakan 28 0 145 1 5.18
Ashan Priyanjan 12 1 48 0 4.00
Bhanuka Rajapaksa 10 0 27 0 2.70
Sangeeth Cooray 2 0 15 0 7.50
Batsmen R B 4s 6s SR
Sangeeth Cooray b Sandeep Warrier 0 6 0 0 0.00
Pathum Nissanka c AR Easwaran b Shivam Dube 6 38 1 0 15.79
Sadeera Samarawickrama b Sandeep Warrier 31 56 5 0 55.36
Bhanuka Rajapaksa c PK Panchal b Shivam Dube 0 1 0 0 0.00
Ashan Priyanjan c Ricky Bhui b Jayant Yadav 49 87 8 2 56.32
Niroshan Dickwella c Ankit Rajpoot b PK Panchal 103 113 13 0 91.15
Chamika Karunaratne b Rahul Chahar 1 11 0 0 9.09
Akila Dananjaya c KS Bharat b Rahul Chahar 16 28 2 1 57.14
Lakshan Sandakan lbw b Jayant Yadav 13 37 0 0 35.14
Vishwa Fernando not out 2 6 0 0 33.33
Lahiru Kumara c Ricky Bhui b Rahul Chahar 0 5 0 0 0.00


Extras 11 (b 0 , lb 5 , nb 6, w 0, pen 0)
Total 232/10 (63.4 Overs, RR: 3.64)
Fall of Wickets 1-1 (1.3) Sangeeth Cooray, 2-18 (11.4) Pathum Nissanka, 3-18 (11.5) Bhanuka Rajapaksa, 4-50 (20.1) Sadeera Samarawickrama, 5-161 (42.4) Ashan Priyanjan, 6-170 (45.4) Chamika Karunaratne, 7-203 (51.6) Akila Dananjaya, 8-229 (61.1) Niroshan Dickwella, 9-231 (62.2) Lakshan Sandakan, 10-232 (63.4) Lahiru Kumara,

Bowling O M R W Econ
Ankit Rajpoot 11 4 13 0 1.18
Sandeep Warrier 12 2 50 2 4.17
Shivam Dube 6 1 19 2 3.17
Rahul Chahar 17.4 1 78 4 4.48
Jayant Yadav 17 2 67 2 3.94


Batsmen R B 4s 6s SR
Sangeeth Cooray c Ricky Bhui b Sandeep Warrier 1 6 0 0 16.67
Pathum Nissanka c KS Bharat b Ankit Rajpoot 0 2 0 0 0.00
Sadeera Samarawickrama c Ricky Bhui b Rahul Chahar 48 92 6 0 52.17
Bhanuka Rajapaksa b Ankit Rajpoot 1 9 0 0 11.11
Ashan Priyanjan st KS Bharat b Rahul Chahar 39 69 7 0 56.52
Niroshan Dickwella c KS Bharat b Sandeep Warrier 27 39 0 0 69.23
Chamika Karunaratne c Jayant Yadav b Rahul Chahar 20 20 0 0 100.00
Akila Dananjaya st KS Bharat b Jayant Yadav 10 19 0 0 52.63
Lakshan Sandakan not out 10 30 0 0 33.33
Vishwa Fernando st KS Bharat b Jayant Yadav 10 18 0 0 55.56
Lahiru Kumara b Rahul Chahar 8 10 0 0 80.00


Extras 11 (b 4 , lb 6 , nb 0, w 1, pen 0)
Total 185/10 (52.3 Overs, RR: 3.52)
Fall of Wickets 1-1 (0.5) Pathum Nissanka, 2-3 (1.3) Sangeeth Cooray, 3-4 (4) Bhanuka Rajapaksa, 4-92 (28.4) Ashan Priyanjan, 5-99 (30.4) Sadeera Samarawickrama, 6-133 (36.1) Chamika Karunaratne, 7-153 (41.4) Akila Dananjaya, 8-153 (42.6) Niroshan Dickwella, 9-166 (47.6) Vishwa Fernando, 10-185 (52.3) Lahiru Kumara,

Bowling O M R W Econ
Ankit Rajpoot 5.2 1 11 2 2.12
Sandeep Warrier 10.4 4 26 2 2.50
Shivam Dube 7 0 27 0 3.86
PK Panchal 1 0 8 0 8.00
Rahul Chahar 13.3 2 45 4 3.38
Jayant Yadav 15 0 58 2 3.87




முடிவு – இந்திய A அணி இன்னிங்ஸ் மற்றும் 205 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<