ருதுராஜ் கேய்க்வாட்டின் அபார சதத்தின் மூலம் இலங்கை A அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய A அணி 48 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன்போது இலங்கைக்காக போராடிய ஷெஹான் ஜயசூரியவின் சதம் வீணானது.
இந்தியாவின் பெல்கவும், யூனியன் ஜிம்கானா மைதானத்தில் இன்று (06) நடைபெற்ற இந்தப் போட்டி 42 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இந்திய அணியின் முதல் விக்கெட்டை 11 ஓட்டங்களில் வீழ்த்துவதற்கு வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவினால் முடிந்தது.
முஸ்பிகுர் ரஹீமில் குற்றம் பிடிக்கும் நோக்குடன் இல்லை: மொர்தஸா
எனினும் இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த ருதுராஜ் கேய்க்வாட் மற்றும் அன்மோல்பிரீத் சிங் இருவரும் 163 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். இதன்போது அதிரடியாக துடுப்பாடிய 22 வயதுடைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ருதுராஜ் கேய்க்வாட் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.
136 பந்துகளுக்கு முகங்கொடுத்த அவர் 26 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காது இருந்து 187 ஓட்டங்களை விளாசினார். அன்மோல்பிரீத் சிங் 67 பந்துகளில் 65 ஓட்டங்களை பெற்றார்.
இதன் மூலம் இந்திய A அணி 42 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களை எடுத்தது. இந்திய துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்தப் போராடிய அஷான் பிரியன்ஜன் தலைமையிலான இலங்கை A அணி எட்டு பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. இதில் லஹிரு குமார 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி ஒரு ஓட்டத்தைப் பெற்ற நிலையில் சதீர சமரவிக்ரம ஓட்டம் பெறும் முன்னரே வெளியேறினார். தொடர்ந்து நிரோஷன் திக்வெல்லவும் 19 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்த நிலையில் மத்திய வரிசையில் ஷெஹான் ஜயசூரிய ஒருமுனையில் நின்றுபிடித்து ஆடினார்.
எனினும் மறுமுனை துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்த நிலையில் ஓட்ட வேகம் அதிகரித்தது. கடைசி நேரத்தில் தசுன் சானக்க 31 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பெற்றபோதும் அது வெற்றி இலக்கை எட்டுவதற்கு போதுமாக அமையவில்லை.
இதனால் 42 ஓவர்கள் முடிவில் இலங்கை A அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ஓட்டங்களையே பெற்றது. சிறப்பாக துடுப்பாடிய ஷெஹான் ஜயசூரிய 120 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 108 ஓட்டங்களைப் பெற்றார்.
ஏற்கனவே இந்திய A அணியுடனான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை A அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என பின்தங்கி உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (8) நடைபெறவுள்ளது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Shubman Gill | c Niroshan Dickwella b Lahiru Kumara | 5 | 6 | 1 | 0 | 83.33 |
Ruturaj Gaikwad | not out | 187 | 136 | 26 | 2 | 137.50 |
Anmolpreet Singh | c Akila Dananjaya b Ashan Priyanjan | 65 | 67 | 6 | 0 | 97.01 |
Ishan Kishan | b Lahiru Kumara | 45 | 34 | 4 | 1 | 132.35 |
Shivam Dube | b Lahiru Kumara | 6 | 3 | 0 | 1 | 200.00 |
Ricky Bhui | not out | 7 | 6 | 1 | 0 | 116.67 |
Extras | 2 (b 0 , lb 2 , nb 0, w 0, pen 0) |
Total | 317/4 (42 Overs, RR: 7.55) |
Fall of Wickets | 1-11 (2.4) Shubman Gill, 2-174 (27.6) Anmolpreet Singh, 3-273 (38.5) Ishan Kishan, 4-299 (40.2) Shivam Dube, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lahiru Kumara | 9 | 1 | 62 | 3 | 6.89 | |
Asitha Fernando | 6 | 0 | 48 | 0 | 8.00 | |
Ishan Jayaratne | 6 | 0 | 52 | 0 | 8.67 | |
Akila Dananjaya | 6 | 0 | 51 | 0 | 8.50 | |
Kamindu Mendis | 5 | 0 | 29 | 0 | 5.80 | |
Shehan Jayasuriya | 3 | 0 | 23 | 0 | 7.67 | |
Ashan Priyanjan | 5 | 0 | 29 | 1 | 5.80 | |
Dasun Shanaka | 2 | 0 | 21 | 0 | 10.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sadeera Samarawickrama | lbw b Sandeep Warrier | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Niroshan Dickwella | c Shubman Gill b Tushar Deshpande | 19 | 21 | 3 | 1 | 90.48 |
Bhanuka Rajapaksa | b Shivam Dube | 29 | 37 | 1 | 2 | 78.38 |
Shehan Jayasuriya | not out | 108 | 120 | 8 | 2 | 90.00 |
Ashan Priyanjan | c Ishan Kishan b Mayank Markande | 29 | 15 | 2 | 2 | 193.33 |
Kamindu Mendis | c Ruturaj Gaikwad b Deepak Hooda | 9 | 10 | 0 | 0 | 90.00 |
Dasun Shanaka | c Ricky Bhui b Mayank Markande | 44 | 31 | 3 | 2 | 141.94 |
Ishan Jayaratne | not out | 20 | 16 | 3 | 0 | 125.00 |
Extras | 11 (b 3 , lb 1 , nb 3, w 4, pen 0) |
Total | 269/6 (42 Overs, RR: 6.4) |
Fall of Wickets | 1-1 (1.5) Sadeera Samarawickrama, 2-22 (4.4) Niroshan Dickwella, 3-81 (17.2) Bhanuka Rajapaksa, 4-132 (22.4) Ashan Priyanjan, 5-145 (25.2) Kamindu Mendis, 6-237 (36.6) Dasun Shanaka, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tushar Deshpande | 7 | 1 | 48 | 1 | 6.86 | |
Sandeep Warrier | 7 | 0 | 39 | 1 | 5.57 | |
Washington Sundar | 9 | 0 | 53 | 0 | 5.89 | |
Shivam Dube | 7 | 0 | 35 | 1 | 5.00 | |
Mayank Markande | 7 | 0 | 66 | 2 | 9.43 | |
Deepak Hooda | 5 | 0 | 24 | 1 | 4.80 |
முடிவு – இந்திய A அணி 48 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<