மேல் மாகாணத்தை வீழ்த்திய ரஜரட; தோல்வி காணாத அணியாக கிழக்கு, சபரகமுவ

711

மேல் மாகாணத்திற்கு எதிராக வியாழக்கிழமை (03) மட்டக்களப்பில் இடம்பெற்ற சுதந்திர கிண்ண கால்பந்து லீக் தொடரின் ஒரு போட்டியில் 3-2 என்ற கோல்கள் கணக்கில் ரஜரட அணி வெற்றி பெற்றது. அதேவேளை, கிழக்கு மற்றும் சபரகமுவ மாகாண அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலை பெற்றது.

ரஜரட எதிர் மேல்  

மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் ரஜரட அணிக்காக தேசிய அணி வீரர் அசிகூர் ரஹ்மான் மற்றும் நெத்ம மல்ஷான், மொஹமட் இன்பாஸ் ஆகியோர் மூன்று கோல்களைப் போட, மேல் மாகாண அணிக்காக 21 வயதின்கீழ் வீரர் சுபுன் நாலக ஒரு கோலைப் பெற்றார்.

எனவே, 3-1 என்ற ரஜரட அணியின் முன்னிலையுடன் ஆரம்பமான இரண்டாம் பாதி ஆட்டத்தில் மேல் மாகாண அணிக்கான மாற்று வீரராக வந்த ஹஸ்மீர் 75 ஆவது நிமிடத்தில் அடுத்த கோலைப் பெற்றார். எனினும், போட்டியின் எஞ்சிய நிமிடங்களில் எந்த அணியினராலும் கோல் பெற முடியாமல் போனமையினால் ஆட்ட நிறைவில் 3-2 என்ற கோல்கள் கணக்கில் ரஜரட அணியினர் வெற்றி பெற்றனர்.

 முழு நேரம்: ரஜரட 3 – 2 மேல் 

கொல் பெற்றவர்கள்

ரஜரட – அசிகூர் ரஹ்மான் 14‘, நெத்ம மல்ஷான் 17‘, மொஹமட் இன்பாஸ் 33‘,

மேல் மாகாணம் – சுபுன் நாலக 39‘, மொஹமட் ஹஸ்மீர் 75‘

கிழக்கு எதிர் சபரகமுவ

கந்தலாய் லீலாரத்ன விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதி எந்தவித கோல்களும் இன்றி நிறைவு பெற்றது. பின்னர், இரண்டாம் பாதியும் கோல்கள் இன்றி நிறைவடைய ஆட்டம் 0-0 என சமநிலையில் முடிவடைந்தது.

இதுவரை நடந்த போட்டிகளில் சபரகமுவ மாகாண அணி ஒரு வெற்றி மற்றும் இரண்டு சமநிலை முடிவுகளையும், கிழக்கு மாகாண அணி மூன்று சமநிலையான முடிவுகளையும் பெற்று தோல்வி காணாத அணிகளாக உள்ளன.

முழு நேரம்: கிழக்கு 0 – 0 சபரகமுவ

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<