ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள இம்ரான் தாஹிர்

410

தென்னாபிரிக்க அணியின் சுழல் பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிர், இந்த ஆண்டு இடம்பெறவிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரோடு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

உலகின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம் வரும் 39 வயதான இம்ரான் தாஹிர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காகவே ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்திருப்பதாக கூறியிருக்கின்றார்.

அறிமுக வீரர் ஓசதவின் துடுப்பாட்டத்தை புகழ்ந்த லசித் மாலிங்க

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியிருந்த …..

இம்ரான் தாஹிர், ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் அடுத்த T20 உலக சம்பியன்ஷிப் தொடர் வரை, தென்னாபிரிக்க அணிக்காக T20 போட்டிகளில் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எனக்கு எப்போதும் உலகக் கிண்ணத்தில் விளையாடுவது விருப்பம். எனவே, (உலகக் கிண்ணத்தில்) மிகச் சிறந்த இந்த அணிக்காக விளையாடுவதை பெரிய அடைவுமட்டமாக கருதுகின்றேன். எனக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் ஒரு பரஸ்பர புரிந்துணர்வு இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே உலகக் கிண்ணத்தோடு எனது ஒப்பந்த காலம் நிறைவுக்கு வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.”

“இதேநேரம், தென்னாபிரிக்க அணி என்னை உலகின் பல்வேறு நாடுகளில் கிரிக்கெட் விளையாட அனுமதித்திருக்கின்றது. எனினும், நான் தென்னாபிரிக்க அணிக்காக தொடர்ந்தும் T20 போட்டிகளில் விளையாட விரும்புகின்றேன். என்னைப் பொருத்தவரையில் நான் T20 போட்டிகளில் தென்னாபிரிக்க அணிக்காக ஒரு முக்கிய பணியை ஆற்ற முடியும் என நினைக்கின்றேன். எனக்கு இந்த வாய்ப்பினை தந்தமைக்கு நான் தென்னாபிரிக்க அணிக்கு நன்றிக் கடன்பட்டவனாக இருக்கின்றேன்“ என்றார்.

இந்த ஆண்டு இடம்பெறவிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இம்ரான் தாஹிர் பங்கேற்கின்ற, ஐ.சி.சி. இன் மூன்றாவது பெரிய சர்வதேச தொடராக அமைகின்றது.

பொலிஸ் அணிக்கு எதிராக பந்துவீச்சில் அசத்திய மொஹமட் சிராஸ்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் முதல்தர கழகங்கள் இடையே ஒழுங்கு ….

தென்னாபிரிக்க அணிக்காக 95 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இம்ரான் தாஹிர், 24.56 என்ற பந்துவீச்சு சராசரியுடன் 156 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார். அதேநேரம் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இம்ரான் தாஹிர், 37 T20 போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணிக்காக பங்கேற்றிருக்கின்றார். தாஹிர் தென்னாபிரிக்க அணிக்காக பங்குபற்றிய டெஸ்ட் போட்டிகளில் 62 விக்கெட்டுக்களையும், T20 போட்டிகளில் 57 விக்கெட்டுகளையும் சாய்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“எனக்கு இயலுமான வரையில் விளையாடுவதற்கு விருப்பம் தான், ஆனால் உங்களது வாழ்க்கையில் நீங்கள் சில நேரத்தில் பெரிய முடிவுகளை எடுக்க வேண்டி வரும். அப்படியான ஒரு பெரிய முடிவே இது. இந்த நாட்டில் (தென்னாபிரிக்காவில்) சில சிறந்த சுழல் வீரர்களுக்கு வாய்ப்பு தேவையாக இருக்கின்றது. நாங்களும் அந்த இடத்தினை அடைவதற்காக போராடி வருகின்றோம். ஆனால், எதிர்காலத்தினை நோக்கும் போது அவர்களுக்கு (இளம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு) அதிக வாய்ப்புக்கள் உருவாகி இருக்கும்“ என இம்ரான் தாஹிர் பேசியிருந்தார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<