ஆஸி.யில் உள்ள ஆறு சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் நானும் ஒருவர் – உஸ்மான் கவாஜா

128
USMAN KHAWAJA
(Photo by GIUSEPPE CACACE / AFP)

தான் அவுஸ்திரேலியாவில் தற்போது இருக்கின்ற ஆறு சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் எனத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான உஸ்மான் கவாஜா, தனது நாட்டின் டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு பெறுவதில் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

T20I உலகக் கிண்ணத்துக்கான குழாத்துடன் தயார் நிலையில் ஆஸி

ஐசிசி T20I உலகக் கிண்ணத்திற்கு குறைந்த காலப்பகுதி மாத்திரமே உள்ள நிலையில்..

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை (CA), நடப்பு ஆண்டில் தமது கிரிக்கெட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் 20 வீரர்களின் பெயர்ப் பட்டியலை அண்மையில் அறிவித்தது. எனினும், உஸ்மான் கவாஜா இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.  

இந்த பட்டியலில் இடம்பெறாததனால் தற்போது 33 வயதாக இருக்கும் கவாஜா அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது கடினம் என தகவல்கள் வெளியாகின. இவ்வாறாக வயதினை வைத்து விமர்சனங்கள் எழும் நிலையிலையே தற்போது கவாஜா தனது நாட்டின் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிப்பதில் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்திருப்பது  குறிப்பிடத்தக்கது.   

”நீங்கள் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தினால் வயது வெறும் ஒரு எண்ணே. சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்திய போதும் எனது கிரிக்கெட் வாழ்க்கையினை முடித்துக் கொள்ள நான் 37 வயதிலோ அல்லது 38 வயதிலோ இருக்கவில்லை.” எனக் குறிப்பிட்ட உஸ்மான் கவாஜா தான் அவுஸ்திரேலியாவில் தற்போது இருக்கின்ற ஆறு சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் எனவும் தெரிவித்திருந்தார்.  

முன்னர் உஸ்மான் கவாஜா, துணைக்கண்ட நாடுகளில் சுழல்பந்துவீச்சுக்கு தடுமாறுவதாக விமர்சனங்கள் எழுந்திருந்தன. எனினும், இதற்கு பதில் கொடுத்த கவாஜா கடந்த 2018ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் சதம் விளாசி தனது திறமையினை நிரூபித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதல் இடத்திலுள்ள அவுஸ்திரேலிய அணியில் துடுப்பாட்ட வீரர்கள் இடையில் பெரும் போட்டித்தன்மை நிலவுகின்றது. இவ்வாறான போட்டித்தன்மை தனக்கு புதிது அல்ல எனவும் உஸ்மான் கவாஜா குறிப்பிட்டிருக்கின்றார்.

”நான் இதையெல்லாம் கடந்தே வந்திருக்கின்றேன். நான் பல்வேறு பயிற்சியாளர்களையும் பார்த்துவிட்டேன். நான் இளம் வீரராக இருக்கும் போது நிறைய தடவைகள் அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டிருக்கின்றேன்.”

கடந்த 2019ஆம் ஆண்டு லீட்ஸ் நகரில் இடம்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் போட்டியே உஸ்மான் கவாஜா தனது நாட்டுக்காக கடைசியாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டியாக அமைந்தது.  

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<