“மெஸ்ஸியை விட ரொனால்டினோ மிகச்சிறந்த வீரர்” – கார்டெட்டி

220
@fcbarcelona

ஆர்ஜன்டீன கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை விட, பிரேசில் வீரர் ரொனால்டினோ வரலாற்றில் மிகச்சிறந்த வீரர் என ஆர்ஜன்டீனாவின் முன்னாள் வீரரும், பயிற்றுவிப்பாளருமான மார்டின் கார்டெட்டி தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் இம்மாதம் கால்பந்து போட்டிகள் ஆரம்பம்

கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுக்கு மத்தியில் ஐரோப்பாவின் முதல் பிரதான..

பரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்காக 2003ம் ஆண்டு காலப்பகுதியில் ரொனால்டினோ மற்றும் மார்டின் கார்டெட்டி ஆகியோர் இணைந்து விளையாடியிருந்தனர். இந்த அனுபவத்தைக் கொண்டு, ரொனால்டினோ பந்தை பயன்படுத்தும் விதம் ஏனைய வீரர்களில் இருந்து அவரை வித்தியாசப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார். 

தன்னுடைய அணியில் ரொனால்டினோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோரில் ஒருவரை தெரிவுசெய்ய வேண்டுமென்றால், மெஸ்ஸியை விடவும் ரொனால்டினோவே எனது தெரிவாக இருக்கும் என மார்டின் கார்டெட்டி சுட்டிக்காட்டியுள்ளார். 

ரொனால்டினோ பிரேசில், ஏசி மிலன், பி.எஸ்.ஜி மற்றும் பார்சிலோனா ஆகிய அணிகளுக்காக விளையாடி மிகச்சிறப்பாக பிரகாசித்துள்ளார். குறிப்பிட்ட காலப்பகுதியில் 2005ம் ஆண்டு பலோன் டி ஓர் விருதினை வென்றதுடன், உலகக் கிண்ணம், சம்பியன்ஸ் லீக் மற்றும் லா லீகா போன்ற முன்னணி தொடர்களில் விருதுகளை வென்றுள்ளார்.  

எனினும், நட்சத்திர கால்பந்து வீரரான மெஸ்ஸி 6 பலோன் டி ஓர் விருதுகளை வென்றுள்ளதுடன், 10 லா லீகா கிண்ணங்கள், 4 சம்பியன்ஸ் லீக் பதக்கங்கள் என பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

ஆனால், ரொனால்டினோவுடனான கடந்தகால அனுபவங்களை வைத்து கருத்து வெளியிட்ட கார்டெட்டி, “நான் ஒரு பயிற்றுவிப்பாளராக மெஸ்ஸியை விடவும், எனது அணியில் ரொனால்டினோவை தெரிவுசெய்வேன்” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “ரொனால்டினோவுடன் ஒருவருட காலப்பகுதியை பகிர்ந்துக்கொண்டேன். அவர் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர். குதுகலமாக பயற்சிகளில் ஈடுபடுவார். அத்துடன், புதிய பல விடயங்களையும் பயிற்சியின் போது கற்றுக்கொள்வார். அதனை மைதானத்தில் வைத்து வெளிப்படுத்துவார். பயிற்சியிலும், போட்டியிலும் அவர் பந்தை நகர்த்தும் விதங்கள், ஏனையவர்களிடமிருந்து அவரை தனிமைப்படுத்துகின்றது. 

கால்பந்து வரலாற்றில் ரொனால்டினோ போன்ற வீரரை அதிகமாக ஞாபகப்படுத்திக்கொள்ள முடியும். அவருடன் சக வீரராக விளையாடியமை பெருமையளிக்கிறது” என்றார். 

போலி கடவுச்சீட்டுடன் பரகுவே நாட்டுக்கு நுழைந்த குற்றச்சாட்டில் ரொனால்டினோ மற்றும் அவரது மூத்த சகோதரர் மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன், அவர்கள் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

>> மேலும் கால்பந்து செய்திகளை படிக்க <<