நியூ யோர்க் நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளத்தை விரைவாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை ஐசிசி மேற்கொண்டுள்ளது.
நசாவ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளுக்குமான ஆடுகளங்கள் தரமற்றவை என்பதை ஐசிசி ஒப்புக்கொண்டுள்ளதுடன், அடுத்த போட்டிகளுக்காக ஆடுகளத்தை சரிசெய்வதற்கான முயற்சியில் களமிறங்கியுள்ளது.
இலங்கை – மே.தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியானது!
ஆடுகளங்கள் தொடர்பில் ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நசாவ் மைதானத்தின் ஆடுகளம் நாம் எதிர்பார்த்ததை போன்று சீராக அமையவில்லை.
இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் பின்னர் உலகத்தரமான மைதான பராமரிப்பாளர்கள் அடுத்தடுத்த போட்டிகளுக்காக ஆடுகளங்களை தரமாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளது.
நியூ யோர்க் நசாவ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி 77 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 97 என்ற வெற்றியிலக்கை அயர்லாந்து அணிக்கு எதிராக பெற்றிருந்தது.
ஆடுகளங்கள் துடுப்பாட்டத்துக்கு மிகவும் கடினமாக இருந்ததுடன், துடுப்பாட்ட வீரர்களுக்கு உபாதைகளை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. குறிப்பாக இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா பந்து தாக்கியதால் களத்திலிருந்து வெளியேறியதுடன், ரிஷப் பண்ட் மற்றும் அயர்லாந்து அணியின் அன்ரூ பெல்பேர்னி ஆகியோரை பந்து தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<