ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ணத்துக்கான இரண்டாவது பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றியை பெற்றுக்கொண்டது.
டுபாய் செவன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சிப்போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை எதிர்கொண்ட இலங்கை அணி, எதிரணியை 58 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது.
>>இலங்கை – மே.தீவுகள் தொடருக்கான டிக்கெட் விலைகள் வெளியானது!
பந்துவீச்சில் உதேசிகா பிரபோதனி மற்றும் சச்சினி நிசன்சலா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை கட்டுப்படுத்த உதவினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணியின் சமரி அதபத்து மற்றும் விஷ்மி குணரத்ன முதல் இரண்டு ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய ஹர்சிதா சமரவிக்ரம மற்றும் ஹாசினி பெரேரா ஆகியோர் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துனர். எனினும் கவீஷா டில்ஹாரி அணிக்கு முக்கியமான 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க இலங்கை அணி 15.3 ஓவர்கள் நிறைவில் வெற்றியிலக்கை அடைந்தது.
இலங்கை அணி ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ணத்தின் முதல் போட்டியில் எதிர்வரும் 03ம் திகதி பாகிஸ்தான் அணியை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுருக்கம்
ஸ்கொட்லாந்து – 58 (19) சாரா பிரைஸ் 24, உதேசிகா பிரபோதனி 2/3, சச்சினி நிசன்சலா 2/10
இலங்கை – 59/5 (15.3) கவீஷா டில்ஹாரி 27
முடிவு – இலங்கை 5 விக்கெட்டுகளால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<