ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ணத்தில் தங்களுடைய இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணி தோல்வியடைந்துள்ளது.
முதல் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.
>>தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய சம்ஷி
முதல் போட்டியில் துடுப்பாட்டத்தில் தடுமாறிய இலங்கை அணி இந்தப் போட்டியிலும் தடுமாற்றத்தை காட்டியது. சமரி அதபத்து மற்றும் விஷ்மி குணரத்ன போன்ற வீராங்கனைகள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஹர்சிதா சமரவிக்ரம 23 ஓட்டங்களையும், நிலக்ஷி டி சில்வா 29 ஓட்டங்களையும் பெற்றனர்.
இவர்களை தவிர்த்து ஏனைய வீராங்கனைகள் ஓட்டங்களை பெறத்தவற, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்களை மாத்திரமே இலங்கை மகளிர் அணி பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் மேகன் ஸ்கௌட் 3 விக்கெட்டுகளையும், மொலினக்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணிக்கு பெத் மூனி 43 ஓட்டங்களை பெற்று சிறந்த ஆரம்பத்தை கொடுக்க, எல்லிஸ் பெரி 17 ஓட்டங்களையும், அஷ்லிக் கார்ட்னர் 12 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணி் வெற்றியை உறுதிசெய்தது.
இதன்படி 14.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றியை பெற்றுக்கொண்டது.
முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி மூன்றாவது போட்டியில் எதிர்வரும் 09ம் திகதி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<