Home Tamil மகளிர் T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கை வெற்றி

மகளிர் T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கை வெற்றி

585
Sri Lanka vs South Africa

தென்னாபிரிக்காவில் நேற்று (10) ஆரம்பமாகிய மகளிர் T20 உலகக் கிண்ண தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்காவிற்கு எதிராக 03 ஓட்டங்களால் த்ரில்லர் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>> இலங்கை A – இங்கிலாந்து லயன்ஸ் டெஸ்ட் தொடர் சமநிலை

இப்போட்டியில் இறுதி ஓவர் வரை வெற்றிக்காக இரு அணிகளும் போராடிய நிலையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இப்போட்டியில் வெற்றி பெற்று மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரினை கோலகலமாக ஆரம்பித்திருப்பதோடு, தொடரை நடாத்தும் தென்னாபிரிக்காவிற்கும் அதிர்ச்சி தோல்வியினைப் பரிசளித்திருக்கின்றது.

மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டி நேற்று (10) தென்னாபிரிக்காவின் கேப் டவுன் அரங்கில் ஆரம்பமாகியது. குழு A அணிகளுடைய மோதலாக அமைந்த இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணித்தலைவி சுனே லூஸ் முதலில் இலங்கை வீராங்கனைகளை துடுப்பாடப் பணித்தார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக அணித்தலைவி சமரி அத்தபத்து தன்னுடைய 06ஆவது T20I அரைச்சதத்துடன் 50 பந்துகளில் 12 பௌண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் 17 வயதேயான விஷ்மி குணரட்ன 34 பந்துகளில் 4 பௌண்டரிகள் உடன் 35 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தென்னாபிரிக்க பந்துவீச்சில் சப்னிம் இஸ்மைல், மேரிசேன் கேப் மற்றும் நடைன் டி கிளெர்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை அடையும் பயணத்தில் தென்னாபிரிக்க மகளிர் அணி சிறந்த ஆரம்பத்தைப் பெற்ற போதும் மத்திய வரிசையில் விக்கெட்டுக்கள் சரியத் தொடங்கியதனை அடுத்து, அவ்வணி தடுமாறத் தொடங்கியது. பின்னர் சரிவில் இருந்து மீளாத தென்னாபிரிக்கா 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை 129 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

தென்னாபிரிக்க மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக அதன் தலைவி சுனே லூஸ் 27 பந்துகளில் ஒரு சிக்ஸர் அடங்கலாக 28 ஓட்டங்கள் பெற்றார்.

>> ஆசியக் கிண்ணத்தை பாகிஸ்தானில் நடத்த வேண்டாம் – பாக். முன்னாள் வீரர்

இலங்கை மகளிர் அணி பந்துவீச்சில் இனோக்கா ரணவீர 3 விக்கெட்டுக்களையும், ஒசதி ரணசிங்க மற்றும் சுகந்திகா குமாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகியாக இலங்கை மகளிர் அணித்தலைவரி சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டார். இலங்கை வீராங்கனைகள் மகளிர் T20 உலகக் கிண்ணத்தில் அடுத்ததாக விளையாடும் போட்டி பங்களாதேஷ் மகளிர் அணியுடன் நாளை (12) ஆரம்பமாகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


South Africa Women
126/9 (20)

Sri Lanka Women
129/4 (20)

Batsmen R B 4s 6s SR
Harshitha Samarawickrama c Tazmin Brits b Nadine de Klerk 8 20 1 0 40.00
Chamari Athapaththu c & b 68 50 12 0 136.00
Vishmi Gunaratne run out () 35 34 4 0 102.94
Anushka Sanjeewani not out 5 6 0 0 83.33
Nilakshika Silva b 4 5 0 0 80.00
Ama Kanchana not out 4 5 0 0 80.00


Extras 5 (b 2 , lb 0 , nb 0, w 3, pen 0)
Total 129/4 (20 Overs, RR: 6.45)
Bowling O M R W Econ
Shabnim Ismail 4 1 22 1 5.50
Marizanne Kapp 4 0 15 1 3.75
Ayabonga Khaka 4 0 21 0 5.25
Nonkululeko Mlaba 4 0 31 0 7.75
Nadine de Klerk 4 0 38 1 9.50


Batsmen R B 4s 6s SR
Laura Wolvaardt c Oshadi Ranasinghe b Inoka Ranaweera 18 23 1 0 78.26
Tazmin Brits c Ama Kanchana b Oshadi Ranasinghe 12 18 2 0 66.67
Marizanne Kapp c Nilakshika Silva b Inoka Ranaweera 11 12 1 0 91.67
Sune Luus st Anushka Sanjeewani b Inoka Ranaweera 28 27 0 1 103.70
Chloe Tryon c Nilakshika Silva b Sugandika Kumari 10 10 2 0 100.00
Anneke Bosch b Sugandika Kumari 0 2 0 0 0.00
Nadine de Klerk c Nilakshika Silva b Oshadi Ranasinghe 7 11 0 0 63.64
Sinalo Jafta run out (Oshadi Ranasinghe) 15 9 2 0 166.67
Shabnim Ismail run out (Achini Kulasuriya) 7 4 1 0 175.00
Ayabonga Khaka not out 1 2 1 0 50.00
Nonkululeko Mlaba not out 5 3 0 0 166.67


Extras 12 (b 0 , lb 1 , nb 1, w 10, pen 0)
Total 126/9 (20 Overs, RR: 6.3)
Bowling O M R W Econ
Achini Kulasuriya 3 0 17 0 5.67
Ama Kanchana 2 0 16 0 8.00
Sugandika Kumari 4 0 28 2 7.00
Oshadi Ranasinghe 4 0 20 2 5.00
Inoka Ranaweera 4 0 18 3 4.50
Kavisha Dilhari 3 0 26 0 8.67



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<