மகளிர் T20 உலகக் கிண்ண தொடரில் நியூசிலாந்து அணியுடனான போட்டியில் 102 ஓட்டங்களால் மோசமான தோல்வியினைப் பதிவு செய்திருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அந்த தோல்வியுடன் தொடரில் இருந்தும் வெளியேறுகின்றது.
NSL தொடரின் கடைசி லீக்கில் சதமடித்த மினோத், லஹிரு மதுசங்க
T20 உலகக் கிண்ணத் தொடரின் குழு A இல் காணப்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஏற்கனவே இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்த நிலையில் அரையிறுதி வாய்ப்பிற்காக கட்டாய வெற்றியினை எதிர்பார்த்து நியூசிலாந்தை ஞாயிற்றுக்கிழமை (19) பார்ல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் எதிர் கொண்டது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து வீராங்கனைகள் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தனர். இதன்படி முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து மகளிர் அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் அமெலியா கெர் ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
தொடர்ந்து இந்த வீராங்கனைகளின் அரைச்சதங்களோடு நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்கள் எடுத்தது. நியூசிலாந்து மகளிர் அணியின் துடுப்பாட்டத்தில் அமெலியா கெர் தன்னுடைய கன்னி மகளிர் T20 அரைச்சதத்தோடு 48 பந்துகளில் 6 பெளண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் அரைச்சதம் பெற்ற மற்றைய வீராங்கனையான சூஸி பேட்ஸ் 49 பந்துகளில் 6 பெளண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் இனோக்க ரணவீர மற்றும் அச்சினி குலசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்யணயிக்கப்பட்ட 163 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஆரம்பம் முதலே மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதோடு இறுதியில் 15.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 60 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.
இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சமரி அத்தபத்து 19 ஓட்டங்களுடன் இலங்கை தரப்பில் வீராங்கனை ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களைப் பதிவு செய்தார். மறுமுனையில் அமெலியா கெர் மற்றும் லியா தஹூகு ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நடப்புச் சம்பியனுடன் தோல்வியடைந்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
இப்போட்டியின் தோல்வியுடன் இலங்கை மகளிர் அணி T20 உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பினை இழந்து தொடரினை நிறைவு செய்ய, குழு A இல் இருந்து அரையிறுதிக்கு தெரிவாகும் முதல் அணியாக அவுஸ்திரேலியா மாறுகின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Bernadine Bezuidenhout | c Chamari Athapaththu b Achini Kulasuriya | 32 | 20 | 5 | 0 | 160.00 |
Suzie Bates | st Anushka Sanjeewani b Inoka Ranaweera | 56 | 49 | 6 | 0 | 114.29 |
Amelia Kerr | run out (Kavisha Dilhari) | 66 | 48 | 6 | 0 | 137.50 |
Sophie Devine | not out | 3 | 3 | 0 | 0 | 100.00 |
Maddy Green | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 5 (b 3 , lb 0 , nb 0, w 2, pen 0) |
Total | 162/3 (20 Overs, RR: 8.1) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sugandika Kumari | 4 | 0 | 29 | 0 | 7.25 | |
Achini Kulasuriya | 2.1 | 0 | 14 | 1 | 6.67 | |
Oshadi Ranasinghe | 3 | 0 | 27 | 0 | 9.00 | |
Malsha Shehani | 2 | 0 | 17 | 0 | 8.50 | |
Inoka Ranaweera | 4 | 0 | 27 | 1 | 6.75 | |
Kavisha Dilhari | 1 | 0 | 12 | 0 | 12.00 | |
Chamari Athapaththu | 3.5 | 0 | 33 | 0 | 9.43 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Harshitha Samarawickrama | c Georgia Plimmer b Eden Carson | 8 | 14 | 0 | 0 | 57.14 |
Chamari Athapaththu | lbw b Amelia Kerr | 19 | 21 | 2 | 0 | 90.48 |
Vishmi Gunaratne | c Suzie Bates b Hannah Rowe | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Nilakshika Silva | b Jess Kerr | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Anushka Sanjeewani | b Lea Tahuhu | 1 | 8 | 0 | 0 | 12.50 |
Kavisha Dilhari | c Amelia Kerr b Lea Tahuhu | 4 | 0 | 0 | 0 | 0.00 |
Oshadi Ranasinghe | b Fran Jonas | 3 | 10 | 0 | 0 | 30.00 |
Malsha Shehani | b Amelia Kerr | 10 | 13 | 1 | 0 | 76.92 |
Sugandika Kumari | run out (Bernadine Bezuidenhout) | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Inoka Ranaweera | not out | 5 | 12 | 1 | 0 | 41.67 |
Achini Kulasuriya | timed-out b | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 9 (b 0 , lb 1 , nb 0, w 8, pen 0) |
Total | 60/10 (15.5 Overs, RR: 3.79) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Eden Carson | 2 | 0 | 14 | 1 | 7.00 | |
Jess Kerr | 2 | 0 | 7 | 1 | 3.50 | |
Hannah Rowe | 3 | 0 | 12 | 1 | 4.00 | |
Amelia Kerr | 2.5 | 0 | 7 | 2 | 2.80 | |
Lea Tahuhu | 4 | 1 | 12 | 2 | 3.00 | |
Fran Jonas | 2 | 0 | 7 | 1 | 3.50 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<