முதல் பயிற்சிப் போட்டியில் தென்னாபிரிக்காவுடன் மோதும் இலங்கை அணி

1250

இந்த ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டிகள் அட்டவணையினை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

பந்துவீச்சுப்பாணியை பரிசோதிக்க இந்தியா செல்லும் அகில தனஞ்சய

ஐ.சி.சி. இனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்..

வெளியிடப்பட்டுள்ள பயிற்சி அட்டவணையின் படி கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் பத்து அணிகளும் தலா இரண்டு பயிற்சிப் போட்டிகள் வீதம் ஆடவிருக்கின்றன.

இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரின் பயிற்சிப் போட்டிகள் யாவும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய  இடங்களிலுள்ள நான்கு வெவ்வேறு மைதானங்களில் இடம்பெறவுள்ளதோடு பயிற்சிப் போட்டிகளின் நுழைவுச்சீட்டு விபரங்கள் மற்றும் நேரடி ஒளிபரப்பு பற்றிய தகவல்கள் என்பன ஏப்ரல் மாதமளவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பயிற்சிப் போட்டிகள் யாவும் மே மாதம் 24ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இதேவேளை பயிற்சிப் போட்டிகள் நடைபெறும் மைதானங்களாக பிரிஸ்டொஸ் கவுன்டி அரங்கு, கார்டிப் வேல்ஸ் அரங்கு, ஹம்ப்ஷைர் போல் அரங்கு மற்றும் ஓவல் அரங்கு ஆகியவை அமைகின்றன.

முதல் பயிற்சிப் போட்டியில் தென்னாபிரிக்காவுடன் மோதும் இலங்கை அணி

இந்த ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக்..

உலகக் கிண்ணத்திற்கான இந்தப் பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணி தமது முதல் பயிற்சி மோதலில் தென்னாபிரிக்க அணியினை எதிர்கொள்கின்றது. இந்த பயிற்சி மோதல் கார்டிப் வேல்ஸ் அரங்கில் மே மாதம் 24ஆம் திகதி இடம்பெறுகின்றது.

தொடர்ந்து வெஸ்ட் என்ட் (West End)  நகருக்கு பயணமாகும் இலங்கை அணி, தம்முடைய இரண்டாவது பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியினரை ஹேம்ப்ஷைர் மைதானத்தில் வைத்து எதிர்கொள்கின்றது. இந்த பயிற்சி மோதல் மே மாதம் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பயிற்சிப் போட்டிகள் தவிர இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான பயிற்சி மோதல், இந்தியா பங்களாதேஷ் அணிகள் இடையிலான பயிற்சி மோதல் மற்றும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான பயிற்சி மோதல்கள் என்பவை உலகக் கிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டிகளை இன்னும் சுவாரஷ்யமாக மாற்றுகின்றன.

இலங்கை அணியை தடுமாறச் செய்துள்ள ஆஸியின் துடுப்பாட்டம்

அவுஸ்திரேலியா – சுற்றுலா இலங்கை அணிகளுக்கு..

பயிற்சிப் போட்டிகள், அணிக்கு 50 ஓவர்கள் கொண்டதாக இடம்பெற்ற போதிலும் இவற்றிற்கு ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளின் அந்தஸ்து கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேநேரம், இந்தப் பயிற்சிப் போட்டிகளின் போது ஒவ்வொரு அணிகளும் 15 வீரர்களை உபயோகிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை ஒழுங்கு செய்திருக்கும் குழுவின் நிர்வாக தலைவரான ஸ்டீவ் எல்வேர்த்தி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ள இந்தப் பயிற்சிப் போட்டிகள் பற்றி பேசும் போது இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 

“ இப்படியான போட்டிகள் இரசிகர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வீரர்களை தங்களது சொந்த இடங்களில் பார்ப்பதற்கான ஒரு பிரமாண்ட சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தருகின்றது. மேலும், இப்போட்டிகள் மூலம் சமூகங்களும்,  உள்ளூர் பாடசாலைகளும் உலகக் கிண்ணத்துடன் இணைந்து கொள்ள மற்றுமொரு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.“

பயிற்சிப் போட்டி அட்டவணை

  • பாகிஸ்தான் எதிர் ஆப்கானிஸ்தான் – பிரிஸ்டொஸ் கவுன்டி அரங்கு  – மே மாதம் 24ஆம் திகதி
  • இலங்கை எதிர் தென்னாபிரிக்கா – கார்டிப் வேல்ஸ் அரங்கு – மே மாதம் 24ஆம் திகதி
  • இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா – ஹேம்ப்ஷைர் போல் அரங்கு – மே மாதம் 25ஆம் திகதி
  • இந்தியா எதிர் நியூசிலாந்து – ஓவல் அரங்கு – மே மாதம் 25ஆம் திகதி
  • தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்திய தீவுகள் – பிரிஸ்டொஸ் கவுன்டி அரங்கு  – மே மாதம் 26 ஆம் திகதி
  • பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ் – கார்டிப் வேல்ஸ் அரங்கு – மே மாதம் 26ஆம் திகதி
  • அவுஸ்திரேலியா எதிர் இலங்கை – ஹேம்ப்ஷைர் போல் அரங்கு – மே மாதம் 27ஆம் திகதி 
  • இங்கிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் – ஓவல் அரங்கு – மே மாதம் 27ஆம் திகதி
  • மேற்கிந்திய தீவுகள் எதிர் நியூசிலாந்து – பிரிஸ்டொஸ் கவுன்டி அரங்கு – மே மாதம் 28ஆம் திகதி 
  • பங்களாதேஷ் எதிர் இந்தியா – கார்டிப் வேல்ஸ் அரங்கு – மே மாதம் 28ஆம் திகதி