மகளிர் உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு

5
ICC Women's T20 World Cup Aus

2024ஆம் ஆண்டுக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டதனை அடுத்து, அந்த தொடரின் திருத்தப்பட்ட போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. 

>>ஐசிசியின் அபராதத்துக்கு முகங்கொடுத்த பாகிஸ்தான், பங்களாதேஷ்<<

இந்த ஆண்டுக்கான (2024) T20 மகளிர் உலகக் கிண்ணத் தொடர் பங்களாதேஷில் நடத்த ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும், அதனை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (.சி.சி.) அங்கே நிலவிய அரசியல் குளறுபடிகள் காரணமாக ஐக்கிய அரபு ராச்சியத்திற்கு மாற்றியது. 

அதன்படி ஐக்கிய அரபு ராச்சியத்தில் T20 மகளிர் உலகக் கிண்ணத் தொடர், ஒக்டோபர் 3 தொடக்கம் 20ஆம் திகதி வரை ஷார்ஜா, துபாய் ஆகிய இடங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டது 

எனவே தற்போது வெளியிடப்பட்டிருக்கும் திருத்தியமைக்கப்பட்ட போட்டி அட்டவணைக்கு அமைய மகளிர் T20 உலகக் கிண்ணத்தொடரின் முதல் போட்டி, தொடரினை நடாத்தும் உரிமை கொண்டுள்ள நாடான பங்களாதேஷிற்கும்ஸ்கொட்லாந்திற்கும் இடையே ஷார்ஜாவில் ஒக்டோபர் 03ஆம் திகதி நடைபெறுகின்றது. 

இலங்கை மகளிர் அணி தமது முதல் போட்டியில் பாகிஸ்தானை தொடரின் முதல் நாளிலேயே எதிர்கொள்வதோடு, விறுவிறுப்பு மிக்க இந்தியபாகிஸ்தான் மோதல் ஒக்டோபர் 06ஆம் திகதி துபாயில் நடைபெறுகின்றது. 

ஒக்டோபர் 20ஆம் திகதி நடைபெறும் மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்காக துபாய் மைதானம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மொத்தம் 10 அணிகள் பங்கு பெறவுள்ள மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரில் குழு A இல் தொடரின் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை காணப்படுவதோடு, குழு B அணிகளாக பங்களாதேஷ், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகியவை காணப்படுகின்றன. 

அதேநேரம் மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரிற்காக 10 பயிற்சிப் போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

போட்டி அட்டவணை 

ICC WORLD T20 2024

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<