தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதான பயிற்சிப் போட்டியில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் இளையோர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை இளையோர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. இதன் அடிப்படையில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை இளையோர் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.
சட்டத்தரணிகளுக்கான உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு இரண்டாமிடம்
சட்டத்தரணிகளுக்கான உலகக் கிண்ண….
இலங்கை அணி 74 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதும், அணித் தலைவர் நிபுன் தனன்ஜய மற்றும் சொனால் தினூஷ ஆகியோர் மிகச்சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுக்க இலங்கை இளையோர் அணி 215 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணி சார்பாக சொனால் தினூஷ அதிகபட்சமாக 68 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், நிபுன் தனன்ஜய 55 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பாகிஸ்தான் இளையோர் அணியின் பந்துவீச்சில் தாஹிர் ஹுசைன் 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார்.
பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் இளையோர் அணி முதல் விக்கெட்டுக்காக 61 ஓட்டங்களை பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. இதன் பின்னர், குறுகிய இடைவெளியில் விக்கெட் வீழ்த்தப்பட்ட போதும், அடுத்துவந்த துடுப்பாட்ட வீரர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மத்தியவரிசை வீரர்களின் சிறப்பான துடுப்பாட்ட வெளிப்படுத்தல்களின் மூலமாக பாகிஸ்தான் இளையோர் அணி 45.2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
பாகிஸ்தான் இளையோர் அணி சார்பில் பஹாட் முனீர் 51 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டு களத்திலிருந்து வெளியேறியிருந்தார். இவருக்கு அடுத்தபடியாக மொஹமட் ஹரிஸ் 43 ஓட்டங்களையும், ஹய்டர் அலி 33 ஓட்டங்களையும், காசிம் அக்ரம் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரையில், டில்ஷான் மதுஷங்க 3 விக்கெட்டுகளையும், கவிந்து நதீஷன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.
இதேவேளை, இலங்கை இளையோர் அணி தங்களுடைய முதல் பயிற்சிப் போட்டியில் தென்னாபிரிக்க இளையோர் அணியை வீழ்த்தியிருந்ததுடன், இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்துள்ளது. இலங்கை அணி தங்களுடைய முதல் இளையோர் உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணியை எதிர்வரும் 17 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Navod Paranavithana | c Haider Ali b Tahir Hussain | 12 | 13 | 2 | 0 | 92.31 |
Kamil Mishara | c Qasim Akram b Tahir Hussain | 15 | 30 | 2 | 0 | 50.00 |
Mohammad Samaaz | b Aamir Ali | 19 | 31 | 2 | 0 | 61.29 |
Thaveesha Abhishek | lbw b Aamir Ali | 13 | 30 | 2 | 0 | 43.33 |
Nipun Dananjaya | c Rohail Nazir b Mohammad Amir Khan | 55 | 88 | 1 | 2 | 62.50 |
Sonal Dinusha | b Tahir Hussain | 68 | 87 | 7 | 0 | 78.16 |
Ahan Wicrkamasinghe | b Mohammad Amir Khan | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Chamindu Wijesinghe | c & b Abbas Afridi | 7 | 9 | 0 | 0 | 77.78 |
Ashian Daniel | not out | 2 | 2 | 0 | 0 | 100.00 |
Kavindu Nadeeshan | c Rohail Nazir b Tahir Hussain | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Dilum Sudheera | c Rohail Nazir b Abbas Afridi | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Extras | 21 (b 4 , lb 2 , nb 0, w 15, pen 0) |
Total | 215/10 (49.3 Overs, RR: 4.34) |
Fall of Wickets | 1-21 (4.5) Navod Paranavithana, 2-36 (8.5) Kamil Mishara, 3-69 (16.2) Thaveesha Abhishek, 4-71 (18.5) Mohammad Samaaz, 5-193 (45.2) Nipun Dananjaya, 6-193 (45.3) Ahan Wicrkamasinghe, 7-209 (47.5) Chamindu Wijesinghe, 8-210 (48.1) Sonal Dinusha, 9-212 (48.4) Kavindu Nadeeshan, 10-215 (49.3) Dilum Sudheera, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tahir Hussain | 10 | 0 | 41 | 4 | 4.10 | |
Mohammad Amir Khan | 10 | 0 | 38 | 2 | 3.80 | |
Abbas Afridi | 8.3 | 1 | 26 | 2 | 3.13 | |
Aamir Ali | 8 | 0 | 30 | 2 | 3.75 | |
Qasim Akram | 5 | 0 | 29 | 0 | 5.80 | |
Fahad Munir | 5 | 0 | 26 | 0 | 5.20 | |
Mohammad Haris | 3 | 0 | 19 | 0 | 6.33 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Haider Ali | c Kamil Mishara b Dilshan Madusanka | 33 | 38 | 4 | 1 | 86.84 |
Muhammad Shehzad | lbw b Dilshan Madusanka | 24 | 35 | 2 | 0 | 68.57 |
Rohail Nazir | b Dilshan Madusanka | 5 | 8 | 1 | 0 | 62.50 |
Fahad Munir | retired | 51 | 86 | 5 | 0 | 59.30 |
Mohammad Haris | run out (Chamindu Wijesinghe) | 43 | 36 | 5 | 0 | 119.44 |
Qasim Akram | c Dilshan Madusanka b Kavindu Nadeeshan | 29 | 28 | 3 | 0 | 103.57 |
Mohammad Irfan Khan | not out | 11 | 27 | 1 | 0 | 40.74 |
Abbas Afridi | not out | 10 | 14 | 1 | 0 | 71.43 |
Extras | 12 (b 0 , lb 1 , nb 0, w 11, pen 0) |
Total | 218/6 (45.2 Overs, RR: 4.81) |
Fall of Wickets | 1-61 (10.4) Haider Ali, 2-69 (12.3) Rohail Nazir, 3-72 (14.6) Muhammad Shehzad, 4-137 (27.3) Mohammad Haris, 5-186 (36.6) Fahad Munir, 6-199 (40.3) Qasim Akram, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Amshi De Silva | 4 | 0 | 27 | 0 | 6.75 | |
Matheesha Pathirana | 6 | 0 | 34 | 0 | 5.67 | |
Dilshan Madusanka | 5 | 0 | 21 | 3 | 4.20 | |
Chamindu Wijesinghe | 5 | 0 | 20 | 0 | 4.00 | |
Nipun Dananjaya | 6 | 0 | 23 | 0 | 3.83 | |
Sonal Dinusha | 4 | 0 | 20 | 0 | 5.00 | |
Ashian Daniel | 4 | 0 | 19 | 0 | 4.75 | |
Kavindu Nadeeshan | 7 | 0 | 36 | 1 | 5.14 | |
Dilum Sudheera | 4 | 0 | 13 | 0 | 3.25 | |
Navod Paranavithana | 0.2 | 0 | 4 | 0 | 20.00 |
முடிவு – பாகிஸ்தான் இளையோர் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<