இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரான குமார் தர்மசேன 50 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் நடுவராக செயற்பட்டு தனது நடுவர் வாழ்வில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் கடந்த வாரம் மெல்பேர்னில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் போட்டித் தொடரின் நான்காவது மோதல் குமார் தர்மசேன நடுவராக பணியாற்றிய 50ஆவது டெஸ்ட் போட்டியாக அமைந்தது.
இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட்டில் பிரகாசிக்கும் வெளிநாட்டவர்கள்
இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது நடாத்தி வரும்..
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் நடுவராக இருந்தவர்கள் பட்டியலில் குமார் தர்மசேன 14ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேநேரம், ஒரு நாள் கிரிக்கெட்டில் 82 போட்டிகளிலும், 22 T-20 போட்டிகளிலும் குமார் தர்மசேன இதுவரை நடுவராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்காக 31 டெஸ்ட் மற்றும் 141 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள 46 வயதான தர்மசேன, 2006ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் கடந்த 2009ஆம் அண்டு முதல் முதலாக இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் தம்புள்ளையில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் நடுவராக பணியாற்றினார்.
பின்னர் 2010இல் இருந்து டெஸ்ட் போட்டிகளிலும் அவர் நடுவராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 2011 உலகக் கிண்ணப் போட்டிகளின் போதும் நடுவராகப் பணியாற்றிய அவர், ஐ.சி.சியின் சிறந்த நடுவருக்கான குழாத்திலும் இடம்பிடித்தார்.
இதன்படி, இலங்கைக்காக இளம் வயதில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்காகவும் நடுவராகக் கடமையாற்றிய பெருமையைப் பெற்றுக்கொண்ட குமார் தர்மசேன, 2012ஆம் ஆண்டு ஐ.சி.சியின் வருடத்தின் சிறந்த நடுவருக்கான விருதையும் பெற்றுக்கொண்டார்.
அத்துடன், 1996 உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீரராகவும் இடம்பிடித்திருந்த தர்மசேன, 2015 உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் முதற்தடவையாக நடுவராகக் கடமையாற்றியதன்மூலம் மற்றொரு பெருமையையும் பெற்றுக்கொண்டார்.
ஐஸ் T-20 கிரிக்கெட் தொடரில் மஹேல, மாலிங்க பங்கேற்பு
உலக கிரிக்கெட் வரலாற்றில் பனிப் பாறைகளுக்கு மத்தியில்..
இந்நிலையில், தேசிய ஆங்கில ஊடகமொன்று வழங்கிய விஷேட செவ்வியின் போது குமார் தர்மசேன கருத்து வெளியிடுகையில், ”எனக்கும் வயதாகிக் கொண்டு செல்கின்றதால் எதிர்காலம் குறித்து எந்தவொரு திட்டங்களும் இல்லை. ஆனால் நான் அவ்வாறான திட்டங்களை ஒவ்வொரு வருடமும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன். எனது சேவை குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை, திருப்தியுடன் உள்ளமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.