Home Tamil இளையோர் உலகக் கிண்ண காலிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை

இளையோர் உலகக் கிண்ண காலிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை

169
Image Courtesy : Cricketworldcup Twitter

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் இன்று (22) நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து இளையோர் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து இளையோர் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை இளையோர் அணிக்கு வழங்கியது. இதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை இளையோர் அணி 50 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 9 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இளையோர் உலகக் கிண்ணத்தில் இலங்கையை வீழ்த்திய இந்தியா

தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு…….

இலங்கை இளையோர் அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெறுவதற்கான ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட போதும், மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கைக்கு செல்ல முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

நவோத் பரணவிதான 23 ஓட்டங்கள், கமில் மிஷார 21 ஓட்டங்கள், ரவிந்து ரஸந்த 29 ஓட்டங்கள் மற்றும் தவீஷ அபிஷேக் 25 ஓட்டங்கள் என ஆரம்பத்தை பெற்றும் இன்னிங்ஸை கட்டியெழுப்ப முடியாமல் ஆட்டமிழந்து வெளியேறினர். இதில், அணித் தலைவர் நிபுன் தனன்ஜய ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

ஆனாலும், இலங்கை அணியின் இறுதி நம்பிக்கை துடுப்பாட்ட வீரர்களாக இருந்த சொனால் தினூஷ மற்றும் அஹான் விக்மரசிங்க ஆகியோர் மிகச்சிறந்த இணைப்பாட்டமொன்றை பகிர்ந்தனர். ஒரு கட்டத்தில் இலங்கை அணி 141 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த போதிலும், இவர்களின் இணைப்பாட்டம் அணிக்கு வலுவளித்திருந்தது.

ஆட்டத்தின் இறுதிவரை போராடி வேகமாக ஓட்டங்களை குவித்த அஹான் விக்ரமசிங்க 48 பந்துகளில் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, சொனால் தினூஷ 46 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஆதித்யா அஷோக் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ஜெஸி டஷ்கோப் மற்றும் க்ரிஸ்டியன் க்ளார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து இளையோர் அணி, ரிஸ் மரியு மற்றும் வீலர் க்ரீனல் ஆகியோரின் மிகச்சிறந்த அரைச் சத துடுப்பாட்டங்களின் உதவியுடன் 49.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து இலங்கை இளையோர் அணி நிர்ணயித்த இலக்கை அடைந்து வெற்றிபெற்றது. இதில், கடைசி இரண்டு பந்துகளுக்கு 6 ஓட்டங்கள் பெறவேண்டிய சூழ்நிலையில், நியூசிலாந்து அணியின் க்ரிஸ்டியன் க்ளார்க் சிக்ஸர் ஒன்றை விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார்.

நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ரிஸ் மரியு 86 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, வீலர் க்ரீனல் 80 ஓட்டங்களையும், ஜெஸி டஷ்கோப் 30 ஓட்டங்களையும் பெற்று, அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, திலும் சுதீர அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதேவேளை, போட்டியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி காலிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளதுடன், இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. எனினும், இலங்கை அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் ஜப்பான் அணியை எதிர்வரும் 25 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது.

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka U19
242/9 (50)

New Zealand U19
243/7 (49.5)

Batsmen R B 4s 6s SR
Navod Paranavithana c Beckham Wheeler-Greenall b William O’Rourke 23 39 3 0 58.97
Kamil Mishara c Quinn Sunde b Simon Keene 21 35 2 0 60.00
Ravindu De Silva st Quinn Sunde b Jesse Tashkoff 29 44 0 0 65.91
Thaveesha Abhishek c Quinn Sunde b Adithya Ashok 25 45 2 0 55.56
Nipun Dananjaya c Quinn Sunde b Adithya Ashok 0 3 0 0 0.00
Sonal Dinusha c Kristian Clarke b Jesse Tashkoff 46 87 4 0 52.87
Dilum Sudheera c Rhys Mariu b Adithya Ashok 6 33 0 0 18.18
Ahan Wicrkamasinghe c Jesse Tashkoff b Kristian Clarke 64 48 9 0 133.33
Kavindu Nadeeshan not out 7 7 1 0 100.00
Ashian Daniel b Kristian Clarke 0 1 0 0 0.00


Extras 21 (b 4 , lb 0 , nb 0, w 17, pen 0)
Total 242/9 (50 Overs, RR: 4.84)
Did not bat Dilshan Madusanka,

Fall of Wickets 1-42 (8.5) Navod Paranavithana, 2-58 (13.4) Kamil Mishara, 3-106 (24.2) Thaveesha Abhishek, 4-106 (24.5) Nipun Dananjaya, 5-112 (27.5) Ravindu De Silva, 6-141 (36.1) Dilum Sudheera, 7-219 (47.1) Sonal Dinusha, 8-241 (49.3) Ahan Wicrkamasinghe, 9-242 (49.6) Ashian Daniel,

Bowling O M R W Econ
Joey Field 9 2 55 0 6.11
Kristian Clarke 8 1 36 2 4.50
William O’Rourke 6 0 23 1 3.83
Simon Keene 7 0 46 1 6.57
Adithya Ashok 10 0 38 3 3.80
Jesse Tashkoff 10 1 40 1 4.00


Batsmen R B 4s 6s SR
Rhys Mariu lbw b Navod Paranavithana 86 106 6 0 81.13
Ollie White c Nipun Dananjaya b Ashian Daniel 4 9 0 0 44.44
Fergus Lellman c Navod Paranavithana b Dilum Sudheera 13 25 1 0 52.00
Beckham Wheeler-Greenall run out (Ashian Daniel) 80 111 4 1 72.07
Jesse Tashkoff c Sonal Dinusha b Dilshan Madusanka 30 35 2 0 85.71
Simon Keene run out (Sonal Dinusha) 3 2 0 0 150.00
Quinn Sunde c Matheesha Pathirana b Dilum Sudheera 2 4 0 0 50.00
Joey Field not out 5 4 0 0 125.00
Kristian Clarke not out 9 3 0 0 300.00


Extras 11 (b 4 , lb 3 , nb 0, w 4, pen 0)
Total 243/7 (49.5 Overs, RR: 4.88)
Fall of Wickets 1-15 (3.6) Ollie White, 2-47 (11.4) Fergus Lellman, 3-158 (37.1) Rhys Mariu, 4-217 (47.1) Jesse Tashkoff, 5-221 (47.4) Simon Keene, 6-229 (48.3) Beckham Wheeler-Greenall, 7-229 (48.4) Quinn Sunde,

Bowling O M R W Econ
Dilshan Madusanka 9.5 0 56 1 5.89
Ashian Daniel 10 0 30 1 3.00
Dilum Sudheera 10 0 52 2 5.20
Navod Paranavithana 9 0 43 1 4.78
Kavindu Nadeeshan 10 0 48 0 4.80
Sonal Dinusha 1 0 7 0 7.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<