சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2 வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படுகின்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் இடம்பெறும் போட்டிகள் குறித்த விபரங்கள் தற்பொழுது உத்யோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை இடம்பெறும் 12ஆவது இளையோர் உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது. அந்நாட்டின் க்ரைஸ்சேர்ச், குயிண்ஸ்டவுண், தவுரங்கா, சங்கரேய் உள்ளிட்ட 4 முக்கிய மைதானங்களில் இப்போட்டிகள் அனைத்தும் நடைபெறவுள்ளன.
இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு மாற்றப்பட்ட ஆசிய இளையோர் கிரிக்கெட் போட்டிகள்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவிலிருந்து…
இப்போட்டித் தொடரின் நடப்புச் சம்பியனான மேற்கிந்திய தீவுகள், இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலிய உள்ளிட்ட அண்மையில் டெஸ்ட் வரம் பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய 12 டெஸ்ட் அணிகளும் நேரடியாகத் தொடருக்குத் தகுதி பெற்றதுடன், ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கிடையில் நடைபெற்ற அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான போட்டியில் முதல் 2 இடங்களைப் பெற்றுக்கொண்ட 4 அணிகளும் இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்கு தகுதிபெற்றன. இதன்படி, முதல் சுற்றில் 16 அணிகள் 4 குழுக்களில் போட்டியிடவுள்ளன.
குழுக்கள்
குழு A | குழு B | குழு C | குழு D |
மேற்கிந்திய தீவுகள் | இந்தியா | இங்கிலாந்து | இலங்கை |
நியூசிலாந்து | அவுஸ்திரேலியா | பங்களாதேஷ் | பாகிஸ்தான் |
தென்னாபிரிக்கா | ஜிம்பாப்வே | நமீபியா | ஆப்கானிஸ்தான் |
கென்யா | பப்புவா நியூகினியா | கனடா | அயர்லாந்து |
தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் போட்டியிடவுள்ளதுடன், மற்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் நமீபியா அணிகள் போட்டியிடவுள்ளன. இதே தினத்தன்று இடம்பெறும் மற்றும் இரு ஆட்டங்களாக பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூகினியா – ஜிம்பாப்வே ஆகிய அணிகளது பலப்பரீட்சைகளும் இடம்பெறவுள்ளன.
அதன் பின்னர் ஜனவரி 14ஆம் திகதி நடைபெறவுள்ள D குழுவிற்கான முதல் போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியை சந்திக்கவுள்ளதுடன், 17ஆம் திகதி ஆப்கானிஸ்தானையும், 19ஆம் திகதி பாகிஸ்தானையும் இலங்கை அணி சந்திக்கவுள்ளளது.
அழுத்தங்கள், விமர்சனங்களுக்கு மத்தியில் மீள முயற்சிக்கும் இலங்கை அணி
கிரிக்கெட் விளையாட்டு, இலங்கையில் அநேகமானவர்களின் உணர்வுகளில் கலந்த ஒன்று…
இந்திய அணி தனது முதல் போட்டியில் பிரபல அவுஸ்திரேலிய அணியை ஜனவரி 14ஆம் திகதி சந்திக்கவுள்ளதுடன், ஜனவரி 16ஆம் திகதி பப்புவா நியூகினியாவையும், ஜனவரி 19ஆம் திகதி ஜிம்பாப்வே அணியையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்ககது.
இதனையடுத்து ஒவ்வொரு குழுக்களிலும் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பெற்றுக்கொள்ளும் அணிகள் சுப்பர் லீக் சுற்றுக்குத் தெரிவாகும். அதேவேளை, எஞ்சியுள்ள 8 அணிகளும் ப்ளேட் சுற்றில் போட்டியிடவுள்ளன. அத்துடன், அரையிறுதிப் போட்டிகள் 29ஆம் மற்றும் 30ஆம் திகதிகளிலும், இறுதிப் போட்டிகள் 3ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
கடந்த 2016ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியை மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்த்தி இளையோர் உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்துக்ககது.
இலங்கை மோதும் போட்டி அட்டவணை
இலங்கை U19 – அயர்லாந்து U19 (ஜனவரி 14 – சங்கரேய்)
இலங்கை U19 – ஆப்கானிஸ்தான் U19 (ஜனவரி 17 – சங்கரேய்)
இலங்கை U19 – பாகிஸ்தான் U19 (ஜனவரி 19 – சங்கரேய்)