சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் (ஐ.சி.சி.) வெளியிட்டிருக்கும் ஆண்டின் புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் தரவரிசையில் இலங்கை அணியால் தனது 6 ஆவது இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடிந்தபோதும் ஒரு தரநிலை புள்ளியை இழந்துள்ளது. இந்தியா தனது தரநிலை புள்ளிகளை அதிகரித்துக் கொண்டு முதலிடத்தில் உறுதியாகவுள்ளது.
ஐ.சி.சி. இன்று (01) வெளியிட்ட இந்த புதுப்பிக்கப்பட்ட தவரிசையில் 2014-15 தொடர்களின் முடிவுகள் நீக்கப்பட்டதோடு 2015-16 மற்றும் 2016-17 பருவங்களின் 50 வீதமான முடிவுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இதன்படி இலங்கை அணி 94 தரநிலை புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தில் உள்ளது. இதில் ஒரு தரநிலை புள்ளி மாத்திரமே குறைவடைந்திருப்பதால் அந்த அணி தரவரிசையில் தமது இடத்தை பாதுகாத்துக் கொள்ள முடிந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நிஷாந்த ரணதுங்க
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்காக முன்னாள் செயலாளர் நிஷாந்த
தரவரிசை காலத்தில் இலங்கை அணி பங்குபற்றிய 31 டெஸ்ட் போட்டிகளில் 13 போட்டிகளில் வென்று 14 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருப்பதோடு 4 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன. எனினும் இலங்கை அணி அண்மைக் காலத்தில் சோபிக்கத் தவறியுள்ளது. கடந்த ஆண்டு இலங்கை 13 டெஸ்ட் போட்டிகளில் 7 இல் தோற்றிருப்பதோடு 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி அடுத்து வரும் ஜுன் மாத ஆரம்பத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இலங்கை அணி தரவரிசையில் 6 ஆவது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த தொடரில் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.
புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்க அணியை விடவும் 13 புள்ளிகள் இடைவெளியில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் போது நான்கு புள்ளிகளை மேலதிகமாக பெற்றிருக்கும் இந்திய அணியின் தரநிலை புள்ளிகள் 125 ஆக இருப்பதோடு தென்னாபிரிக்க அணி ஐந்து புள்ளிகளை இழந்து 112 தரநிலை புள்ளிகளாக சரிந்துள்ளது. எனினும் எஞ்சிய அணிகளை விடவும் தென்னாபிரிக்கா தனது இரண்டாவது இடத்தில் உறுதியாகவே உள்ளது.
புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில் நான்கு புள்ளிகளை மேலதிகமாக பெற்றிருக்கும் அவுஸ்திரேலிய அணி மொத்தம் 106 தரநிலை புள்ளிகளோடு மீண்டும் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் மூன்றாவது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் டெஸ்ட் தரவரிசையில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கான பரிசுத் தொகை வழங்கும் ஏப்ரம் 3 ஆம் திகதி வரையான காலக்கெடுவில் நியூசிலாந்து அணி 3 ஆவது இடத்தை பிடித்ததால் அந்த அணி 200,000 டொலர்களை வெல்வது உறுதியாகியுள்ளது. முதலிடத்தை பெற்ற இந்திய அணி ஒரு மில்லியன் டொலர்களையும் தென்னாபிரிக்கா இரண்டாவது இடத்திற்கான 500,000 டொலர்களையும் வெல்லும்.
நியூசிலாந்து அணி 102 தரநிலைப் புள்ளிகளோடு நீடிப்பதோடு அதற்கு அடுத்து இங்கிலாந்து மிக நெருக்கமாக ஒரு புள்ளியை மேலதிகமாக பெற்று 98 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் காணப்படுகிறது.
மற்றொரு முக்கிய நகர்வாக பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகளைப் பின் தள்ளி ஒன்பதாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. டெஸ்ட் தரவரிசையில் அந்த அணி 9 ஆவது இடத்திற்கு வருவது இது முதல் முறையாகும். ஐந்து தரநிலை புள்ளிகளை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி 67 புள்ளிகளுடனும் பங்களாதேஷ் அணி நான்கு தரநிலை புள்ளிகளை அதிகரித்து 75 புள்ளிகளுடனும் மேற்கிந்திய தீவுகளை விடவும் எட்டு புள்ளிகளை அதிகமாக பெற்றுள்ளது.
இலங்கை அணியை வெல்ல திட்டம் தீட்டுகிறார் ஜேசன் ஹோல்டர்
வரும் ஜுன் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம்
பாகிஸ்தான் அணி 2 தரநிலை புள்ளிகளை இழந்து 86 புள்ளிகளுடன் 7 ஆவது இடத்தில் காணப்படுகிறது. 10 ஆவது இடத்தில் இருக்கும் ஜிம்பாப்வே 1 ஒரு தரநிலை புள்ளியை பெற்றிருப்பதன் மூலம் அதன் மொத்த புள்ளி 2 ஆக அதிகரித்துள்ளது.
முழு அங்கத்துவ அந்தஸ்த்தை பெற்றிருக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் எதிர்வரும் மாதங்களில் தமது கன்னி டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன. இதன்படி, அடுத்த வருடம் ஐ.சி.சி இனால் வெளியிடப்படவுள்ள வருடாந்த டெஸ்ட் தரப்படுத்தல் அறிக்கையில் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளும் இணைந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்து அணி எதிர்வரும் மே மாதம் 11 தொடக்கம் 15 ஆம் திகதி வரை பாகிஸ்தானுக்கு எதிராக டப்லினில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவிருப்பதோடு ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஜுன் மாதம் 11 தொடக்கம் 18 ஆம் திகதி வரை பெங்களூரூவில் இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது
டெஸ்ட் தரவரிசை
தரம் | அணி | தரநிலைப் புள்ளி |
01 | இந்தியா | 125 (+4) |
02 | தென்னாபிரிக்கா | 112 (-5) |
03 | அவுஸ்திரேலியா | 106 (+4) |
04 | நியூசிலாந்து | 102 (-) |
05 | இங்கிலாந்து | 98 (+1) |
06 | இலங்கை | 94 (-1) |
07 | பாகிஸ்தான் | 86 (-2) |
08 | பங்களாதேஷ் | 75 (+4) |
09 | மேற்கிந்திய தீவுகள் | 67 (-5) |
10 | ஜிம்பாப்வே | 2 (+1) |