சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று (04) வெளியிட்டுள்ள புதிய T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க தன்னுடைய வாழ்நாள் அதியுயர் புள்ளிகளை பெற்றுள்ளார்.
இதற்கு முதல் வெளியாகிய T20I பந்துவீச்சாளர்கள் தவரிசையில், ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீட் கானை பின்தள்ளி வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருந்தார். இந்தநிலையில், இந்திய அணியின் தொடர் நிறைவடைந்த நிலையில், வனிந்து ஹசரங்கவின் புள்ளிகள் 720 இலிருந்து, 764 ஆக அதிகரித்துள்ளதுடன், முதல் இடத்தை தக்கவைத்திருக்கும் தென்னாபிரிக்க வீரர் டப்ரைஷ் ஷம்ஷியை நெருங்கியுள்ளார்.
ஷேர்ன் வோர்னுக்கு கொவிட்-19 தொற்று
டப்ரைஷ் ஷம்ஷி T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 792 புள்ளிகளுடன், முதலிடத்தை தக்கவைத்திருப்பதுடன், வனிந்து ஹசரங்க முதலிடத்துக்கு முன்னேறுவதற்கு இன்னும் 29 புள்ளிகள் மாத்திரமே தேவைப்படுகிறது.
வனிந்து ஹசரங்க, இந்திய அணிக்கு எதிரான தொடரின் இறுதி T20I போட்டியில், 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், தொடரில் மொத்தமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்தநிலையில், இலங்கை அணி அடுத்ததாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது. குறித்த இந்த தொடரின் போது, ஐசிசி T20I தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது. அதுமாத்திரமின்றி, வனிந்து ஹசரங்க T20I சகலதுறை வீரர்களுக்கான பட்டியலில், 12வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அதேநேரம், இலங்கை அணிக்காக தொடர்ந்து வேகப்பந்துவீச்சில் பலம் கொடுத்துவரும் துஷ்மந்த சமீர, 37வது இடத்திலிருந்து 18வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், லக்ஷான் சந்தகன் 14வது இடத்துக்கும், அகில தனன்ஜய 36வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<