அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான கிரைக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை அறிவித்துள்ள குழாத்தில் உபாதைகளுக்கு முகங்கொடுத்திருந்த அனுபவ வீரர்கள் மீண்டும் குழாத்துக்குள் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆசியக்கிண்ணத்தில் பணியாற்றவுள்ள இலங்கை மகளிர் நடுவர்கள், மத்தியஸ்தர்!
அணித்தலைவர் கிரைக் எர்வின் உபாதைக்கு பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதுடன் பிளெசிங் முஷரம்பாணி, டெண்டாய் சட்டரா, வெலிங்டன் மஷகட்சா மற்றும் மில்டன் சும்பா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.
உபாதையிலிருந்து குணமடைந்துள்ள வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ள அதேநேரம், அணியில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்த சிக்கண்டர் ரஷா, ரயன் பேர்ல், ரெகிஸ் சகப்வா மற்றும் சீன் வில்லியம்ஸ் ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஜிம்பாப்வே அணியானது T20 உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றில் விளையாடவுள்ளது. குறித்த சுற்றில் அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. குறித்த இந்த போட்டிகளுக்கு முன்னர் இலங்கை மற்றும் நமீபியா அணிகளை பயிற்சிப்போட்டிகளில் எதிர்கொள்ளவுள்ளது.
ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடர் எதிர்வரும் 16ம் திகதி அவுஸ்திரேலியாவில் ஆரம்பிக்கவுள்ளதுடன், முதல் போட்டியில் இலங்கை – நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே குழாம்
கிரைக் எர்வின் (தலைவர்), ரயன் பேர்ல், ரெகிஸ் செகப்வா, டெண்டாய் சடாரா, பிரெட்லி எவன்ஸ், லுக் ஜொங்வே, கிளைவ் மடண்டே, வெஸ்லி மெதவர், வெலிங்டன் மசகட்ஷா, டொனி முங்யொங்கா, பிளெசிங் முஷரபாணி, ரிச்சர்ட் கரவா, சிக்கண்டர் ரஷா, மில்டன் சும்பா, சீன் வில்லியம்ஸ்
மேலதிக வீரர்கள் – டனகா சிவான்கா, இனசண்ட் கய்யா, கெவின் கசுஷா, டடிவனஷே மருமனி, வெக்டர் என்யூச்சி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<