T20 உலகக் கிண்ணத்துக்கான ஸ்கொட்லாந்து குழாம்

198

அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடருக்கான ரிச்சி பெரிங்டன் தலைமையிலான ஸ்கொட்லாந்து கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ள குழாத்தில் ரிச்சி பெரிங்டன், ஜோர்ஜ் முன்சி, மெட் க்ரொஸ் மற்றும் கலம் மக்லியோட் ஆகிய அனுபவ வீரர்கள் துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்தவுள்ளனர்.

அதே நேரத்தில் பந்துவீச்சு வரிசையில் மார்க் வோட், சப்யான் ஷெரீப் மற்றும் ஹம்சா தாஹிர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே, இளம் சகலதுறை வீரர் பிராண்டன் மெக்முல்லன் முதன்முறையாக இடம்பிடித்துள்ளார். அதே நேரத்தில் பிராட் வீல் மற்றும் ஜோஷ் டேவி ஆகிய 2 வேகப் பந்துவீச்சாளர்களும் குழாத்துக்குள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்திலும் ஸ்கொட்லாந்து அணிக்காக விளையாடியிருந்தனர்.

அத்துடன், இறுதியாக சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டித் தொடர்களில் விளையாடிய வேகப் பந்துவீச்சாளர்களான அலி எவன்ஸ், கவின் மெயின், அட்ரியன் நீல் மற்றும் துடுப்பாட்ட வீரர்களான கிறிஸ் மெக்பிரிட்ஜ் மற்றும் ஒலிவர் ஹேர்ஸ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த மாதம் 16ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றில் விளையாடவுள்ள ஸ்கொட்லாந்து அணி, தமது முதல் போட்டியில் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஹோபார்ட்டில் சந்திக்கிறது.

T20 உலகக் கிண்ணத் தொடருக்கான ஸ்கொட்லாந்து குழாம்:

ரிச்சர்ட் பெரிங்டன் (கேட்ச்), ஜோர்ஜ் முன்சி, மைக்கல் லீஸ்க், பிரெட் வீல், கிறிஸ் சோல், கிறிஸ் கிரீவ்ஸ், சப்யான் ஷெரீப், ஜோஷ் டேவி, மெத்யூ க்ரொஸ் (விக்கெட் காப்பாளர்), கலம் மெக்லியோட், ஹம்சா தாஹிர், மார்க் வொட், பிரெண்டன் மெக்முல்லன், மைக்கல் ஜோன்ஸ், கிரைக் வாலஸ்

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<